தால் சப்பாத்தி

தேதி: December 5, 2010

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

குழையவேகவைத்த பாசிப்பருப்பு - ஒருகப்
கோதுமை மாவு - ஒரு கப்
துருவிய இஞ்சி,பச்சைமிளகாய் - 3ஸ்பூன்
பொடிதாக நறுக்கிய கொத்துமல்லி - ஒருகைப்பிடி
கரம் மசாலாபொடி - ஒருஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - ஒரு கிண்ணம்


 

கோதுமை மாவை சப்பாத்திடும் பக்குவத்தில் பிசைந்து கொள்ளவும்.
வெந்தபாசிப்பருப்பில்மேற்சொன்ன மசாலா சாமான்களைச்சேர்த்து பிசைந்து பூரணங்களாகஉருட்டிவைக்கவும்.
மாவைசப்பாத்திகளாக இட்டு நடுவில் பருப்பு ப்பூரணம் வைத்து மடித்து திரும்பவும் இட்டு கல்லில் போட்டு,இரண்டுபுறமுமெண்ணை ஊற்றி சிவக்கவெந்து எடுக்கவும்.


மிகவும்சத்தானசிற்றுண்டி இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த புது ரெசிப்பி நன்றாக உள்ளது,பூரணம் வைத்து மடித்த பின் லேசாக தேய்கவேண்டுமா?