சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதி 2

உங்கள் சின்ன சின்ன சந்தேகங்களை பகுதி - 2 இல் தொடரவும்

சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதி - 1 லிங்க்
http://www.arusuvai.com/tamil/node/13099

லவன தைலம் தேய்பவர்கள் யாரேனும் இருந்தால் அதை தேய்த்த பின் எவ்வளவு நேரம் வைத்து இருப்பது அதை எவ்வாறு சுத்தம் செய்வது .மொத்தத்தில் அதை எப்படி உபயோகிப்பது என்பது போன்ற விசயங்களை தெளிவுபடுத்தினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் .என் தோழி அடிக்கடி கேட்கும் கேள்வி இது .எப்படி கேட்பது என்று தயங்கினேன் ஆனால் நிறைய பேருக்கு சந்தேகம் என்பதால் கேட்கிறேன் .இதை உபயோகித்து ஏதேனும் முன்னேற்றம் தெரிந்தாலும் சொல்லுங்கள் .உங்களின் பதில்களுக்காக காத்திருக்கிறேன் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா, லவன தைலம் உள்ளங்கையில் சிறிதளவு எடுத்துக்கொண்டு,மூச்சை நன்கு உள்ளே இழுத்து,சிறிதுநேரம் மூச்சை வெளியேவிடாமல் வயிற்றுப் பகுதியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். பின் மூச்சை வெளிவிட்டவும் திரும்பவும் மூச்சை உள்ளே இழுத்து மசாஜ் செய்யவும். இப்படியே திரும்ப திரும்ப 15 நிமிடம் செய்யவேண்டும்.பிறகு கைபொறுக்கும் அளவு வெந்நீர் கொண்டு அந்த இடத்தை கழுவவேண்டும், சோப்பு போடவேண்டாம்.இதைப் போல் தினமும் ஒரு முறை செய்யவேண்டும். நீங்கள் எடையை குறைக்கும் பகுதில் இந்த எண்ணெயை தடவ வேண்டும். இதனால் எனக்கு பிறவசத்துக்கு பின் ஏற்பட்ட வயிற்று கோடுகள், எனக்கு வயிறு ரொம்ப தொள தொளவென்று தசைகள் கீழே இறங்கி இருந்தது இப்போது அது கொஞ்ச கொஞ்சமாக இருகி கொண்டே வருகிறது,கோடுகளும் மறைகிறது.உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இந்த எண்ணிற்க்கு தொடர்பு கொண்டு கேட்கவும் customer care: 0487-2387553

வாழு இல்லை வாழவிடு

aswathaKARNA - நானும் இதை பற்றி நம்ம தோழிகளிடம் கேட்கலாம் என நினைத்தேன்..நீங்களே கேட்டு விடீர்கள்..நன்றி.
சுமிசெழியன்- உங்கள் பதிலுக்கும் நன்றி..
இந்த தைலத்தை தொடர்ந்து தேய்க்காமல் விட்டால் மறுபடியும் எடை கூடுமா??
நானும் இதை முயற்சிக்கலாம் என்று நினைக்கிறன்.
தைலத்தின் விலை எவ்வளவு,எங்கு கிடைக்கும் தெரிந்தால் சொல்லுங்கள் தோழி..

தீபா இந்த தைலத்தின் outside kerala விலை - 181, inside kerala - 165.
இது எல்லா மெடிகல் ஸ்டோரிலும் கிடைக்கும். /////இந்த தைலத்தை தொடர்ந்து தேய்க்காமல் விட்டால் மறுபடியும் எடை கூடுமா ///// இதைப் பத்தி தெரியவில்லை. ஆனால் இந்த தைலத்தை 3மாதம்(அ)6மாதம் வரை யூஸ் பண்ணவும். அப்படிதான் நான் கஸ்டமர்கேரில் போன் பன்னிகேட்டபோது சொன்னார்கள். உங்களுக்கு வேறு எந்த சந்தேகம் இருந்தால் நான் மேலே கொடுத்துள்ள போனுக்கு போன் பன்னிகேட்கவும்.

வாழு இல்லை வாழவிடு

நன்றி...நான் கஸ்டமர் கேர் கு கால் பணினேன்..நம்பர் எர்ரர் நு வந்தது..அதான் கேட்டேன்..

தீபா நான் 2தடவை போன் பன்னியிருக்கேன்.எதற்க்கும் இன்னுதரம் போன் செய்யவும்.நம்பரும் கரெட். நான் கஸ்டமர் கேர் போன் பன்னிகேட்டேன் தைலம் தடவின பின் விட்டதற்க்கு அப்புறம் திரும்பவும் வராது என்று சொன்னார்.

வாழு இல்லை வாழவிடு

ஹாய் தோழிகளே, யாராவது ஆம்வே பாஸிட்டிரிம் சாப்பிட்டு எளைத்து இருக்கீங்களா? பதிவை இங்கே போடுங்கள் தோழிங்களே. பீளீஸ்.

கவி

நான் சாப்பிட்டிருக்கேன். என்னால் பசியை அடக்கமுடியாததால் விட்டுவிட்டேன். ஆனால் பலருக்கு குறைந்துள்ள்து

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அன்பு பவி,

இது சி.சி.ச. பகுதி ஒன்றில் உங்களுக்காக போட்ட பதிவு. நீங்க பாத்தீங்களான்னு தெரியலை. அதான் இங்கே திரும்பவும் போட்டிருக்கேன்.

அன்பு பவித்ரா

வால்னட் பற்றி எனக்கு எதுவும் தெரியலை.

அப்புறம் நீங்க சொல்வது மாகாளிக் கிழங்கு பற்றி,

இந்த லிங்க் பாருங்க http://www.arusuvai.com/tamil/node/582

சிலர் கடுகுப் பொடி சேர்ப்பாங்க. கிராமங்களில், புளியங்காய் கிடைக்கிறப்போ, இதோட சேர்த்து, நறுக்கிப் போடுவாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

என்னுடைய ஒரு புடவை நல்லா க்ராண்ட்டா இருக்கும்பா. கடந்த 2 வருடங்களுக்கு முன் தீபாவளிக்கு வாங்கினது. நல்ல மாம்பழ கலர் கோல்டன் பாடர் முந்தி பிங்க் கலர்ல இருக்கும், அதை 3 முறைதான் கட்டியிருக்கேன். அந்த புடவையின் முந்தானை பகுதியின் முனைகள் அப்படியே சுருட்டிக் கொள்கிறது. துவைக்கலாம் இல்லை. அதை எப்படி சரி செய்வது. உங்கள் ஐடியாஸ் வேணும்பா அதை சரி செய்ய.

மேலும் சில பதிவுகள்