ஓட்ஸ் உப்புமா

தேதி: December 6, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (12 votes)

திருமதி. சித்ராதுரை அவர்களின் குறிப்பினை பார்த்து வனிதா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது.

 

ஓட்ஸ் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
காரட் - ஒன்று
பீன்ஸ் - 5
கோஸ் - சிறிது
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கு


 

வெங்காயம், மிளகாய், இஞ்சி மற்றும் காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும். ஓட்ஸை நெய் விட்டு வாசனை வர வறுத்து வைக்கவும்.
வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்து, பருப்புகள் சிவந்ததும் பெருங்காயம் போட்டு அரை நிமிடம் கழித்து நறுக்கி வைத்த வெங்காயம், மிளகாய், உப்பு, இஞ்சி மற்றும் காய்கள் சேர்த்து வதக்கவும்.
காய்கள் வதங்கியதும் கறிவேப்பிலை உருவிப் போடவும். ஒரு நிமிடம் கழித்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
நீர் கொதித்ததும் ஓட்ஸைப் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.
அடுப்பை சிம்மில் வைத்து விடாமல் கிளறி ஓட்ஸ் வெந்ததும் இறக்கவும். சுவையான ஓட்ஸ் உப்புமா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதா!ஓட்ஸ் வாங்கி வீட்டில் அப்படியே இருக்கு,என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தேன்,உங்க குறிப்பை பார்த்ததும் செய்து விடுவோம் என நினைத்தேன்,குறிப்புக்கு நன்றி!

Eat healthy

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

சுவையான இந்த குறிப்பை தந்த சித்ராதுரை அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ரசியா... மிக்க நன்றி. சுவையான குறிப்பு... எனக்கும் ஓட்ஸ்'ல காரமா செய்து சாப்பிட ஆசை, இதை செய்து பார்த்ததும் பிடிச்சிருந்தது. செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல குறிப்பு வனிதா.ஓட்சில் இனிப்பு ,காரம் கஞ்சி தான் காய்ச்ச தெரியும்.இது வித்தியாசமா இருக்கு.

ஹசீன்

நாங்க அடிக்கடி ஓட்ஸ் சேத்துப்போம். உங்ககுறிப்பு சூப்பரா இருக்கு. செய்துட்டு சொல்ரேன்.

வனிதா, ஓட்ஸ் டப்பா ஒன்றை வாங்கி வச்சுட்டு முழிச்சுட்டு இருந்தேன். நான் எனக்கு தெரிந்த நளபாகத்துல ஓட்ஸ் பண்ணி என் குட்டிங்களுக்கு தந்தா திரும்பவும் என் மேலயே துப்பிட்டு போயிடுச்சிங்க :( நல்ல வேளையா நீங்க ஒரு சூப்பர் குறிப்பு தந்து ஓட்ஸை காலி பண்ண ஐடியா தந்தீங்க பா. ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹசீனா... மிக்க நன்றி. எனக்கும் அதான் தெரியும்... அதான் நம்ம சித்ரா துரை குறிப்பை ட்ரை பண்ணேன். ஏற்கனவே ஜலீலா, கவிசிவா ஓட்ஸ்'ல நல்ல குறிப்புகள் கொடுத்திருக்காங்க, அதுவும் நல்லா இருக்கும். நேரம் கிடைச்சா பாருங்க :)

கோமு... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. நல்லா டேஸ்ட்டா இருந்தது. :)

கல்பனா... நானும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தேன், விரும்பி சாப்பிட்டாங்க. தைரியமா செய்து கொடுங்க மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா ரசிக்கும்படியான குறிப்புகளை அடுத்தடுத்து கொடுக்கறீங்க வனிதா. வித்தியாசமாய் செய்வதும் சுலபமான (சித்திரா துரையின்) சமையலை செய்து காட்டி உள்ளீர்கள்.நன்றியும் வாழ்த்துக்களும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

super ஓட்ஸ் உப்புமா thankyou

உப்புமா சூப்பர்..வனி நான் எப்பவும் கஞ்சி மட்டும் தான் போடுவேன்..உப்புமா செய்து பார்த்துடு செல்கிறேன்..இன்னும் குறிப்புகள் தர எனது வாழ்த்துகள்.

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

ஆஹா வனி, நல்ல சத்தான குறிப்பு தான். சித்ராவுக்கும் மனமார்ந்த நன்றி:)) ஓட்ஸ் கைவசம் இருக்கு, தோசை மட்டுமே ஊற்றுவேன்:) இப்ப இன்னொரு டிஷ். வாழ்த்துக்கள்:))

அன்புடன்
பவித்ரா

பவித்ரா ஓட்சில் எப்படி தோசை செய்வீர்கள்?pls

ஹசீன்

http://arusuvai.com/tamil/node/13101 இந்த லின்க் பாருங்க:))

அன்புடன்
பவித்ரா

அன்பு வனிதா,

ரெண்டு நாளாக, ஓட்ஸ் குறிப்புகள் தேடித் தேடி, சமைக்கிறேன். வெயிட் குறைக்கணும். இந்த உப்புமா செய்து பார்க்கிறேன். ஓட்ஸ் வாங்கியாச்சு.

அன்புடன்

சீதாலஷ்மி

நான் ஓட்ஸ் கஞ்சி தவிர வேறு எதுவும் செய்தது இல்லை..
புதுசான ஒரு ரெசிபியை தந்ததுக்கு சித்ராதுரைக்கும் அதை செய்து பார்த்த உங்களுக்கும் எனது நன்றிகள்....

வாழு, வாழவிடு..

யோகராணி... மிக்க நன்றி. எனக்கு இது போன்ற சுலபமான ஆரோக்கியமான குறிப்புகள் ரொம்ப விருப்பம். அதான் தேடி பிடிச்சுடுவேன் :)

மீனா... மிக்க நன்றி :)

செல்வ லெட்சுமி... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. நல்லா இருந்தது.

பவி... பாருங்க எங்களுக்கு தோசை செய்ய தெரியாதே ;) செய்து பாருங்க.

சீதாலஷ்மி... நீங்கலாம் வெயிட் குறைக்கனுமா???!!! எப்படியோ இது ஆரோக்கியமான உணவு, அதனால் செய்து சாப்பிடுங்க. அவசியம் செய்துட்டு சொல்லுங்க :) மிக்க நன்றி.

ருக்சனா... மிக்க நன்றி. அவசியம் செய்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சத்தான குறிப்பை செய்து காட்டிய உங்களுக்கும் ,குறிப்பைதந்த சித்ராவுக்கும் வாழ்த்துக்கள்
நான் எப்பவும் ஓட்ஸில் எதாவது செய்து கொண்டே இருப்பேன்.இந்த குறிப்பை பார்த்து விட்டு செய்து பார்க்க நினைத்தேன்..நேரம் அமையவில்லை..நீங்கள் அழகா செய்து காட்டியிருக்கீங்க

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி... மிக்க நன்றி. நானும் இப்போ தொடர்ச்சியா ஓட்ஸ் குறிப்பா தான் செய்துட்டு இருக்கேன். இதையும் நேரம் கிடைக்கும்போது செய்து பாருங்க. 15 நிமிட வேலை தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த உப்புமா ரவா உப்புமா மாதிரி உதிர் உதிராக வருமா வனிதா? சொல்லுங்கள். நான் சபோலா ஓட்ஸ் தான் பயன்படுத்துவேண். பொதுவாக கஞ்சி வைத்துதான் கொடுப்பேன். என் குட்டிகள் அதை சீண்டிக் கூடபார்ப்பதில்லை. இதையாவது கொடுக்கலாமே என்றுதான் கேட்டேன்.

சுபா... வரும்பா. கொஞ்சம் தண்ணீர் குறைவா சேருங்க வரும். நான் குழந்தைகளூக்கு ரொம்ப உதிரியா கொடுப்பதில்லை, சாப்பிட கஷ்டம் என்று. உங்க குழந்தைகளுக்கு பிடிக்கும் என்றால் செய்து கொடுங்க. என் குட்டீஸும் கஞ்சி செய்தா சாப்பிடாதுங்க, இதை விரும்பி சாப்பிடுவாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ots upuma super. nan ots vangi 3 month akuthu ena saivathu enrey theriyamal epo unga ots upuma parthu apadiye saithen romba nala erunthathu romba nanry .

indha upma smash aagi vidhatha???????

மிக்க நன்றி :) செய்து பார்த்து பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழைந்து போகாது தைரியமா செய்து பாருங்க :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா