பாகற்காய் புலாவ்

தேதி: December 7, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை ரவை - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பாவக்காய்த்துண்டுகள் - அரைகப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரைகப்
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பொடிதாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
மஞ்சபொடி - அரைஸ்பூன்
எண்ணை - ஒரு கரண்டி


 

கோதுமைரவையை நன்கு கழுவி,உதிர்,உதிராக சாதம் பண்ணவும்.
கடாயில் எண்ணைஊற்றி,பட்டை,கிராம்புதாளித்து, இஞ்சிபூண்டு,மிளகாய் மஞ்சபொடி,உப்பு பாவக்காய் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கினதும் வெந்த சாதம் போட்டு நன்கு கலக்கி வேறு பத்திரத்தில் மாற்றி சூடாகப்பரிமாறவும்.


வெங்காய ராய்த்தாவுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்