சுறா புட்டு - 1

தேதி: April 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுறா மீன் - அரை கிலோ
வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சுறா மீனை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
பிறகு சுறா மீனில் மஞ்சள் தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த பிறகு முள், தோல் எடுத்து தண்ணீரை நன்கு பிழிந்து உதிர்த்துக் கொள்ளவும். அதனோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை இவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
வதக்கிய பிறகு பிசறிய சுறா மீனை போட்டு கிளறி பச்சை வாசனை போன பிறகு இறக்கி பரிமாறவும்.


தண்ணீர் சுண்ட கிளறினால் வரவரப்பாக இருக்கும். அதனால் தண்ணீர் சுண்ட கிளற கூடாது. மெத்தென்று இருக்கும் போது இறக்கி வைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்