கிறிஸ்மஸ் ட்ரீ

தேதி: December 7, 2010

5
Average: 5 (11 votes)

 

ப்ளாஸ்டிக் டம்ளர் - 9
கத்தரிக்கோல்
பெவிக்கால்
பச்சைநிற ஃபேப்பரிக் பெயிண்ட்
ஐஸ்க்ரீம் ஸ்டிக்
ப்ரஷ்
தெர்மாக்கோல் பால்ஸ்
செல்லோ டேப்

 

கிறிஸ்மஸ் ட்ரீ செய்ய மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
ப்ளாஸ்டிக் டம்ளரின் வெளிப்புறம் முழுவதும் பச்சைநிற பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.
பின்னர் அந்த டம்ளரின் வாய்ப்பகுதியை மட்டும் கத்தரிக்கோல் நறுக்கி விடவும்.
இப்போது டம்பளரை நீளவாக்கில் முக்கால் பாகம் அளவுக்கு நறுக்கவும்.பின்னர் அதன் அடியில் 2 செ.மீ அகலம் விட்டு நறுக்கவும். இந்த அளவின் படி டம்பளரை தனித்தனி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பெயிண்ட் செய்த டம்ளரில் ஒரு முழு டம்ளரை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். மற்ற ஐந்து டம்பளரையும் மேற்சொன்ன அளவில் நறுக்கி வைக்கவும்.
பின் தனியாக எடுத்து வைத்திருக்கும் முழு டம்ளரின் மேல் வெட்டி வைத்திருக்கும் மற்ற டம்ளர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும். அந்த டம்பளரில் வெட்டி வைத்திருக்கும் பகுதிகளை படத்தில் இருப்பது போல் உள்பக்கமாக மடக்கி விடவும்.
இதுப்போல் ஐந்து டம்பளரையும் ஒன்றன் கீழ் ஒன்றாக உள்பக்கமாக மடக்கி எடுத்துக் கொள்ளவும்.
க்ரீன் கலர் சாட் பேப்பரில் 12 செ.மீ உயரத்துக்கு கூம்பு வடிவில் செய்யவும். ஓரங்களை செல்லோ டேப் கொண்டு ஒட்டி விடவும்.
கூம்பின் அடிப்பாகம் அடுக்கி வைத்திருக்கும் டம்பளரின் மேல்பக்கம் உள்ள சுற்றளவுக்குள் பொருந்துமாறு இருக்க வேண்டும். கூம்பின் அடியில் பெவிக்கால் தடவி டம்பளரின் மேல் ஒட்டி விடவும்.
அடுத்து ஒரு மூன்று டம்பளரில் முன்பு கூறிய முறைப்படி வெட்டி வைக்கவும். இந்த டம்பளரின் அடிப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து விடவும்.
டம்பளரில் சொருகிய கூம்பின் மேல் அடிப்பகுதி வெட்டிய ஒரு டம்பளரை நன்கு அந்த கூம்பின் அடியில் பொருந்தி விட்டு, அதன் மேல் க்ரீன் கலர் செல்லோ டேப்பை சுற்றியும் ஒட்டவும். பின்னர் நறுக்கின பக்கங்களை உள்பக்கமாக மடக்கி விடவும்.
அடுத்துள்ள இரண்டு டம்பளரையும் எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தை வெட்டி வைக்கவும்.
வெட்டி வைத்துள்ள ஒரு டம்பளரை எடுத்து கூம்பின் சுற்றளவில் வைத்து அளந்து கொள்ளவும். சுற்றளவுக்கு தேவைக்கேற்ப டம்பளரின் நீளத்தை வைத்து விட்டு மீதியுள்ளதை நறுக்கி விடவும். பின்னர் இதனை கூம்பில் சுற்றி, அதன் மேல் வலுவாக இருப்பதாக செல்லோ டேப்பை சுற்றவும். மேலே சொன்னப்படி டம்பளரை மடக்கி விடவும். அடுத்துள்ள டம்பளரையும் இதேப்போல் செய்யவும்.
டம்பளரின் பாகங்களை உள்பக்கமாக மடக்கிய ஒவ்வொரு பகுதியின் மேல் தெர்மாக்கோல் பால்ஸை பெவிக்கால் கொண்டு ஒட்டவும்.
கடைசியில் ஐஸ்க்ரீம் குச்சியில் கால் இன்ச் அகலத்திற்கு மெல்லிய குச்சிகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு சிலுவை போல் செய்து மரத்தின் பின்னால் வைத்து ஒட்டவும். அழகான கிறிஸ்மஸ் ட்ரீ ரெடி.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த கிறிஸ்மஸ் ட்ரீ செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ், செண்பகாக்கா சூப்பர்.எளிமையாகவும் உள்ளது.கட்டாயம் செய்ய போகிரேன்.நவினாகுட்டி நலமா?

வாவ், செண்பகாக்கா சூப்பர்.எளிமையாகவும் உள்ளது.கட்டாயம் செய்ய போகிரேன்.நவினாகுட்டி நலமா? கிறிஸ்மசுக்கு இத மாதிரி செய்து பிரன்சுக்கு அன்பளிப்பா கொடுக்கப்போறென்.

do or die

யாரும் எளிதாக செய்யக்கூடிய வகையில் விளக்கப்படங்கள் உள்ளன..

மிக அருமை ப்ளாஸ்டிக் கப்களில் கூட இப்படி செய்யமுடியுமா...

அழகாக இருக்கிறது அக்கா நிறய அனுப்புங்கள் ..இதுபோல்..நன்றி..
.நானும் கவனிக்கவில்லை ..இப்போ மாற்றிவிட்டேன்...

வாழு, வாழவிடு..

செண்பகா, சுப்பர் கைவேலை. கலக்கலான ஐடியா. க்றிஸ்மஸ் வரக் கிட்டவாக நல்ல நல்ல குறிப்புகளாகக் கொடுக்கிறீங்க. பாராட்டுக்கள். டம்ளர் கிடைச்சா செய்து பாக்குறேன்.

மேலே கருத்துச் சொன்ன மூன்று பேருக்கும் இது... ஒரு அழகான பேரை எதுக்குங்க இப்படிப் பண்றீங்க? பேர் தட்டக் கஷ்டமா இருந்தா காப்பி பேஸ்ட் பண்ணிரலாமே. அவங்களுக்கு படிக்கக் கஷ்டமா இருக்குமா இல்லையா? எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. ;( முடிஞ்சா மாத்திருங்க ப்ளீஸ்.

புனிதா எதை மாத்தனும்னு சொல்லுங்க.ஒன்னுமே புரியலைப்பா.தெளிவாச்சொல்லுங்க.

உங்க கைவேலைகள் எல்லாம் மிகவும் simply&superb வாழ்த்துக்கள் செண்பகா.

செண்பகாவின் பெயரை சரியாக எழுதவில்லை.அதைத்தான் புனிதா எழுதியிருக்கிறா இனியா.

செண்பகா ரொம்ப அழகாக இருக்கு க்றிஸ்துமஸ் ட்ரீ. ஓ இந்த மாதம் கிறிஸ்துமஸ் வரதுனால க்றிஸ்துமஸ் ஸ்பெஷலா செய்து அசத்துறீங்களா. ஓகே ஓகே அசத்துங்க.

நன்றி ammulu. மாற்றிவிட்டேன்.

மிக்க நன்றி அம்முலு, இனியா & ammujp.

அடே, ரொம்ப அழகா இருக்கு. ஊருக்குள எப்படி எல்லாம் யோசிக்கரங்கன்னு பாருங்க....
இந்த பொருளை வைத்து எல்லாம் செய்ய முடியுமான்னு யோசிக்கவே முடியல. ரொம்ப அருமையா இருக்கு....இன்னும் நிறையா சொல்லிகுடுங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நன்றி இனியா. கண்டிப்பா செய்து பார்த்து போட்டோ எடுத்து அனுப்பிவைங்க.

நன்றி அம்மு./கிறிஸ்மசுக்கு இத மாதிரி செய்து பிரன்சுக்கு அன்பளிப்பா கொடுக்கப்போறென்./கொடுத்து அசத்துங்க:-)

ருக்ஷானா உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி. கண்டிப்பா முடிந்தவரை செய்து அனுப்புறேன்.

ஹாய் புனிதா. பாராட்டுக்கு ரொம்ப நன்றி. என்கிட்ட நிறைய டம்ளர் இருக்கு நீங்க இங்கு வரும்போது நான்தறேன். பிறகு செய்து பாருங்க.
//ஒரு அழகான பேரை எதுக்குங்க இப்படிப் பண்றீங்க? பேர் தட்டக் கஷ்டமா இருந்தா காப்பி பேஸ்ட் பண்ணிரலாமே. அவங்களுக்கு படிக்கக் கஷ்டமா இருக்குமா இல்லையா? எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. ;( முடிஞ்சா மாத்திருங்க ப்ளீஸ்.// பாவம் அவங்களுக்கு என் பெயர் ரொம்ப கஷ்டமா இருக்கு போல. பரவாயில்லை அம்மா தப்பை மன்னித்து விடலாம். என் பெயரை திருத்தியதற்கு மீண்டும் ரொம்ப நன்றி நன்றி.......

ஹாய் அம்முலு எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலம் தானே? உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

ஹாய் யாழினி ரொம்ப நன்றி.

ஹாய் சுகந்தி எப்படி இருக்கீங்க? உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி. நீங்களே க்ராஃப்டில் பெரிய புலி என்று கேள்வி பட்டேன் ரொம்ப சந்தோஷம். உங்க திறமையை அறுசுவையில் கொஞ்சம் எடுத்து விடுங்களேன். நாங்களும் கத்திகிடுவோம்ல:-)

senbagababu

மிக்க நன்றி Ruksana.

சென்ற குறிப்பிலும் இரண்டு பதிவுகளில் கவனித்தேன். அப்போதே மனதுக்குச் சங்கடமாக இருந்தது. பதிவு போட்டவர்களே கவனித்துத் திருத்தி விடுவார்கள் என்று நினைத்தேன். இன்னும் அங்கு அப்படியேதான் இருக்கிறது. அவர்களால் பிறகு மாற்ற இயலவில்லையோ என்னவோ.

இம்முறையும் இப்படியே ஆரம்பித்து வரிசையாக எல்லோரும் தப்பாகத் தட்டவும் செண்பகா எதுவுமே சொல்ல மாட்டாங்க, இதுவே பழக்கமாகிவிடப் போகிறதே என்று கவலையாகிவிட்டது. அதனால்தான் அந்தப் பதிவு. குறை எண்ணாமல் கவனித்துத் திருத்திய மூவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

//நிறைய டம்ளர் இருக்கு நீங்க இங்கு வரும்போது நான் தறேன். பிறகு செய்து பாருங்க.// ஓ! அப்ப புனிதா அங்க வரேனா?? இது நல்ல கதை. வரவங்களுக்கு இதான் தருவீங்களா? பரவால்ல. அதுல பூரா தேன்மிட்டாய், இலந்தவடை, இப்ப சொன்ன நன்றில்லாம் போட்டு நிரப்பி வைங்க. வந்து எடுத்துக்கறேன். (இங்க சிரிக்கப் பயமா இருக்கு.)

செண்பகா
ரொம்ப,ரொம்ப அழகாக,அற்புதமாக,அபாரமாக இருக்கிறது.
தெளிவாக,படிப்படியாக செய்து காட்டியிருக்கிறீர்கள்.
எங்கள் வீட்டு கிறிஸ்மஸ் இப்போதே வந்து விட்டது செண்பகா செய்த கிறிஸ்மஸ் ட்ரீயால்.
செய்து பார்க்கிறேன்.
பாராட்டுக்களுடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

Hi Senbagaka,
All your creativities are very nice. Keep up the good work.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta