அவரைக்காய் பொரியல்

தேதி: December 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

அவரைக்காய் - 1/2 கிலோ
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 10
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
தேங்காய் துருவல் - 1/2 கப்
ஜீரகம் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்


 

அவரைக்காயை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்
வானலியில் எண்ணை விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.தேவைக்கு உப்பு
பின் ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல்,ஜீரகம் மற்றும் கீறிய பச்சை மிளகாயை கைகளால் நன்கு கசக்கிக் கொள்ளவும்
அவரைக்காய் வெந்ததும் கசக்கிய தேங்காய் துருவலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்
சுவையான பொரியல் ரெடி


இது கார விரும்பிகளுக்கு ஏற்றது..பச்சை மிளகாயின் வாசனை தான் அவரைக்காயை விட தூக்கலாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சுவையான பொறியல் குறிப்பு கொடுத்திருக்கீங்க. சாம்பார் சாதமுடன் பெஸ்ட் காம்பினேஷனா இருந்தது.

தளிகா அக்கா தேவையான பொருட்கள் பார்க்கும்போது எப்போதும் வீட்டு செய்யற மாதிரி பொரியல்தான் நினைச்சுக்கிட்டேன். செய்முறையை பார்க்கும்போது தான் தெரியுது தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் எல்லாம் கசக்கி கடைசியில் சேர்ப்பது வித்தியாசமா இருக்கு. சாதாரண அவரைக்காய் பொரியலோட இந்த பொரியலின் டேஸ்ட் எப்படி இருக்கும் கூடிய சீக்கிரத்துல செஞ்சு பார்க்க தூண்டுது.

நன்றி திருமதி கோமு..அறுசுவையில் கலக்குறீங்க நீங்க

வினோஜா செய்து பாருங்க நல்லா இருக்கும்

super

நன்றி முஹம்மத் அப்துல் காதர்