முள்ளங்கி ஆலு துவரன்

தேதி: December 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

முள்ளங்கி கீரை - ஒரு கட்டு
வேக வைத்த உருளைக்கிழங்கு -1
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - கால் கப்
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - சிட்டிகை
உப்பு - தேவைக்கு


 

வேக வைத்த உருளைக்கிழங்கை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்
முதலில் தேங்காய், மிளகாய்த்தூள், பூண்டு, சீரகத்தூள், மஞ்சள்த்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் தாளிக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கீரையை போட்டு உப்பு சேர்த்து மூடி மிதமான தீயில் வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை அதில் போட்டு வதக்கவும்
பின் அரைப்பை போட்டு மிதமான தீயில் வதக்கி இறக்கவும்.
இது ரசம் சாதம் மற்றும் சப்பாத்தி, பிரெட்டுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ELU ,

உங்க குறிப்பு பார்க்கவே அழகா இருக்கு.ஆனா எனக்கு ஒரு சந்தேகம் ..முள்ளங்கி கீரை னா எப்படி இருக்கும்?
முள்ளங்கியோட ஒரு இலை இருக்குமே அதுவா? சொல்லுங்களேன் சமைத்து பார்க்க ஆவலாக இருக்கு.

nanriyudan

இளவரசி, நமக்குள்ள என்ன ஒரு ஒத்துமை பார்த்தீங்களா? போன வாரம் காய்கறி கொண்டு வரும் பையன் முள்ளங்கியை கீரையோட கொண்டு வந்தான். நல்லா பிரெஷ்ஷா இருந்தது. நான் தான் எதுவும் பண்ணாம தூக்கி போட்டுட்டேன். இதோ நீங்க முள்ளங்கி கீரைல ரெசிப்பியே தந்துட்டீங்க. இனிமேல் கீரைய வேஸ்ட் பண்ண மாட்டேன். பார்க்கும் போதே டேஸ்டும் தெரியுது பா.கீரை கிடைச்சவுடனே செய்து பார்த்துட்டு உங்களுக்கு சொல்லிடறேன். வாழ்த்த்க்கள் பா நல்ல ரெசிப்பி தந்தீங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இங்க எல்லாம் முள்ளங்கி மட்டும் தான் வருது இளவரசி, இனிமேல் பழமுதிர் நிலையதுள்ள கீரையோட தாங்கன்னு கீட்டு பாக்கறேன். ரொம்ப கலர்புல்லா இருக்கு.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் இளவரசி எப்படி இருக்கீங்க..?
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க குறிப்பை பார்க்கிறேன்.
பார்க்கும் போதே அசத்தலா இருக்கு.
எனக்கு கிடைக்கும் போது அவசியம் செய்து பார்க்கிறேன்.
நல்ல குறிப்பை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குறிப்பினை தவறாமல் வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு நன்றி :-

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஆமாம்பா..முள்ளங்கியோட இருக்கும் இலைதான்.
செய்து பார்த்துட்டு பிடிச்சுதா சொல்லுங்க :-
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி, சூப்பரா இருக்கு பார்க்க!! சுவையும் சூப்பரா தான் இருக்கும்:)) வாசம் அடிக்குது இப்பவே:) என்ன?? இங்க முள்ளங்கியோடு கீரை பார்ப்பது சற்று சிரமம்;(((( வேற எதாவது கீரை சேர்த்து செய்தாலும் நல்லாருக்கும் தானே?? வாழ்த்துக்கள்:))

அன்புடன்
பவித்ரா

தவறாமல் தனித்தனியாய் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கும் பின்னூட்டம் மகிழ்ச்சியை கொடுக்கிறது.கல்பனா..உங்களிடம் அதிகம் பேசவில்லையே தவிர
உங்களைப்பற்றி அறுசுவையில் எனக்கு நெருக்கமான தோழியிடம் பெருமையாய் சொல்வேன்..:-..
இந்த முள்ளங்கிக்கீரை தோட்டத்தில் பறித்தது.செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்
எனக்கு உங்கள் எல்லா கதைகளையும் பொறுமையாய் படிக்க ஆசை...இன்னும்
நேரம் ஒதுக்கி அமர முடியவில்லை..
பொண்ணுக்கு வெகேஷன் ...இப்ப ஃபீவர் பையனுக்கு அதனால் டைட்டாக உள்ளது...
சாவகாசமாய் ஒருமுறை உங்களுடன் பேசவேண்டும்
நன்றிப்பா
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஆமா பவி...எல்லா கீரையிலும் இதுபோல் செய்யலாம்.
உங்கள் பின்னூட்டம் படிக்கும்போதே உற்சாகமாய் இருக்கிறது..
கடைகளில் அதிகம் கிடைக்காது பவி..இது வீட்டுத்தோட்டத்தில் பறித்தது
நன்றிப்பா
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பார்க்கவே சூப்பர்,நிச்சயம் ருசியும் அருமையாகத்தான் இருக்கும்.சேர்த்திருக்கும் பொருளை வைத்தே டேஸ்ட்டை உணர முடியுது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நல்லா இருக்குப்பா .கீரையா கிடைக்குமான்னு தெரியல .கிடைச்சா கண்டிப்பா செஞ்சு பார்த்திட்டு சொல்றேண்டா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

enda racepi nalla eruku

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

நல்லா இருக்கீங்களா?பிள்ளைகள்சுகமா?
செய்து பாருங்க
உங்கள் பின்னூட்டம் தனி மகிழ்ச்சி..நன்றிப்பா
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுடன் பேசுவதில் சந்தோஷம்...
உங்கள் பக்கங்கள் நேரம் கிடைக்கும்போது படித்து ரசிப்போம்
தங்களின் அன்பிற்கும் ,பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க
குடும்பத்திற்கு என் அன்பை சொல்லுங்கள்..
விரைவில் சந்திப்போம் என நம்புகிறேன்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.வாய்ப்பு கிடைக்கும்போது செய்து பாருங்கள்.
இந்த கீரையில் மிகவும் அதிகமான வைட்டமின் "சி" சத்து உள்ளது
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இங்கயும் முள்ளங்கி கீரையுடந்தான் கிடைக்கும். நானும் அடிக்கடி இப்படித்தான் செய்வேன். சப்பாத்தியுடன்கூட ஸ்டஃப் பண்ணி செய்தாலும் நன்றாக இருக்கும்.
உங்ககுறிப்பு விளக்கப்படங்களுடன் நல்லா இருக்கு.

சமையல் அசத்தல் ராணியிடமிருந்து பின்னூட்டம் கிடைத்தது சந்தோஷம்:-
நீங்களும் இதுபோல் செய்வீங்களா..??...!!.மகிழ்ச்சி...
உங்கள் பாராட்டிற்கு நன்றி
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி நலமா...?
இன்று உங்கள் குறிப்பை செய்து சுவைத்தேன்.
மிகவும் அருமையாக வித்தியாசமான சுவை மணமுடன் இருந்தது.
நல்ல குறிப்பை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நலமா?

செய்தீர்களா?பிடித்ததில் மகிழ்ச்சி

நன்றி அப்சரா

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.