சுறாமீன் குழம்பு

தேதி: April 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தோல் உரித்த சுறாமீன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பூண்டு - 100 கிராம்
நாட்டுத் தக்காளி - 150 கிராம்
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - 20 கிராம்
மிளகு - 50 கிராம்
மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு


 

சின்ன வெங்காயம், பூண்டு, நாட்டுத் தக்காளி இவற்றை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
சீரகம், மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்து பொடிச் செய்துக் கொள்ளவும்.
புளியை கரைத்து பாதி உப்பு, மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
வதங்கிய பிறகு புளி தண்ணீரை ஊற்றி, தனியாதூள், மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்க வைக்கவும்.
பச்சை வாசனை போன பிறகு, வறுத்து பொடி செய்ததை போட்டு நன்றாக கலக்கி மீனைப்போட்டு மூடிவிடவும்.
மீன் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.


சுறா மீனை சாதா மீன் குழம்பு போல வைக்க கூடாது. நன்றாக இருக்காது.
சுறா குழம்புக்கு மீனை வேக வைத்து தோல் உரிக்க கூடாது. பச்சை மீனை தோல் உரித்து அப்படியே குழம்பில் போட்டால் ருசியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இது ஆரோட குறிப்பு சொல்லமுடியுமா?
சுரேஜினி