பனீர், கார்ன் புர்ஜி

தேதி: December 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பனீர் துண்டுகள் - ஒரு கப்
கார்ன் - 2 தேக்கரண்டி
வெங்காயம் (பெரியதாக) - 2
தக்காளி -ஒன்று
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலத்தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
பனீர் துண்டுகளை மிதமான சுடு நீரில் கழுவி விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் வெங்காயம், தக்காளி இவைகளை போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கியதும் தூள் வகைகளை போட்டு இரண்டு நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். பின்பு கார்ன், உதிர்த்த பனீரை போட்டு நன்கு ஒன்று சேர கிளறி விடவும்.
மிதமான தீயிலேயே ஐந்து நிமிடம் வைத்து விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான பனீர் கார்ன் புர்ஜி தயார். இதை நாண், சப்பாத்தி, குப்பூஸ் இவைகளுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப ஈஸி ஹ, கலர்புல் ஹ இருக்கு....இந்த குளிர் காலத்துக்கு செஞ்சா சூப்பர் ஹ இருக்கும் ன்னு நினைக்கறேன். செஞ்சு பாத்துட்டு சொல்றேன்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பனீர் புர்ஜி சூப்பரா இருக்கு...கொலஸ்ட்ராலுக்கு பயந்து பனீர் கறிகளை பார்த்து ரசிப்பதோடு சரி..நீங்க உங்க குறிப்பு மூலம் ஆசையை தூண்டி விட்டுடிங்க :-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அப்சரா, எப்படி பா இப்படியெல்லாம் கலர்புல்லா பார்க்கும் போதே கொடுமை படுத்தற மாதிரி சமைக்கறீங்க? நமக்கு சுட்டு போட்டாலும் வரலயே :( ஆத்துக்காரருக்கு பிடிச்ச ஐட்டங்கள்ல பனீரும் ஒண்ணு. பனீர் ஒருமுறை வீட்லயே பண்ணேன். சொதப்பிடுச்சி. அதனால பனீர் ஐடியாவ டிராப் பண்ணிட்டேன். உங்க பனீர் கார்ன் புர்ஜிய பார்த்துட்டு எனக்கும் ஆசை வந்துடுச்சி. இனி, களத்துல இறங்கிட வேண்டியது தான். ரொம்ப அழகான படங்களோட விளக்க குறிப்போட சூப்பரா தந்திருக்கீங்க பா. வாழ்த்துக்கள் :) தொடரட்டும் கலக்கல் பணி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பினை உடனே வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஹாய் சுகந்தி முதலில் உங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.நிச்சயம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இளவரசி நலமாக இருக்கின்றீர்களா...?
உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
முடிந்தால் டோஃபு பனீரில் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.சரியா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பனீர் எக் புர்ஜி தான் செய்வேன் கார்ன் சேர்த்து செய்ததில்லை,செஞ்சு பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

ஹாய் கல்பனா எப்படி இருக்கீங்க..?வீட்டில் அனைவரும் நலம்தானே..?
\\\\கலர்புல்லா பார்க்கும் போதே கொடுமை படுத்தற மாதிரி சமைக்கறீங்க?////
இதை படிச்சதும் ஒரு நிமிஷம் ஆடி போய்ட்டேன்.அவ்வளவு கர்வ கொடூரமாக நாம் சமைக்கிறோமான்னு என்னை நானே கேட்டு கொண்டேன் கல்பனா....

என் கணவருக்கு பனீரே பிடிக்காது.என் தோழி வீட்டின் பார்ட்டியில் ஹோட்டலில் பனீர் புர்ஜின்னு ஆர்டர் செய்து இருந்தாங்க அது எனக்கு பிடிச்சு இருந்துச்ச்சு.இந்த டேஸ்ட்டுக்கு இப்படிதான் செய்து இருப்பாங்கன்னு ஏதோ எனக்கு தெரிந்த அறிவை கொண்டு செய்து பார்த்தேன்.ஆனால் அதில் கார்ன் போடவில்லை.என் கணவருக்கு கார்ன் ரொம்ப பிடிக்கும். எனவே அதையும் போட்டு செய்வோமேன்னு ட்ரை பண்ணேன்.என் கணவரிடத்தில் நான் பாஸ் ஆயிட்டேன்.விரும்பி சாப்பிட்டார்.
அதையே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
கருத்து சொன்னதற்க்கு மிக்க நன்றி கல்பனா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஓ...அப்படியா....அதை நானும் ஒரு நாள் முயற்ச்சி செய்து பார்க்கிறேன் ரீம்.
கருத்து சொன்னமைக்கு நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பார்க்கவே சூப்பரா இருக்கு..நான் பனீர் மட்டும் போட்டு செய்துருக்கேன்..கார்ன் யூஸ் பண்ணி செய்து பார்க்கிறேன்...

இன்னும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்....

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

நேற்று செய்தேன் நல்லா வந்தது,குப்பூஸ் உடன் சாப்பிட அருமையாக இருந்தது.

ஹாய் அப்சரா அஸ்ஸலாமு அலைக்கும் நலமா உங்க குறிப்பு ரொம்ப சூப்பர் பார்க்கும் போதே நாக்கு ஊருது பா பார்சல் பண்ணிடுங்க

பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கே:)) அதுவும் அந்த வெங்காயம் பார்க்க அத்தனை அழகா கட் பண்ணிருக்கீங்க, சூப்பர்ப்பா:)) வாழ்த்துக்கள்:)

அன்புடன்
பவித்ரா

உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி லட்சுமி.
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க....
நன்றி....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அடடே...ரீம் உடனே செய்து பார்த்திட்டீங்களா...
மிகவும் சந்தோஷங்க.....
செய்து சாப்பிட்டு பார்த்து உடனே வந்து கருத்து சொன்னதில் அதை விட எனக்கு சந்தோஷம்.மிகவும் நன்றி பா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் நஸ்ரின்.நான் நலமாக உள்ளேன்.
நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா....?வீட்டில் அனைவரும் நலம்தானே...?
உங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.நன்றி
அருகில் இருந்தால் நிச்சயம் கொடுக்காமல் இருப்பேனா என்ன....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் பவித்ரா...எப்படி இருக்கீங்க?
வெங்காயம் கட் பண்ணி வைத்திருப்பதை வரை அழகாக பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி பா.
உங்கள் கருத்து எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.
தங்கள் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி பவி....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எங்க ரெண்டுபேர்ல எனக்கு ப்னீர் பிடிக்காது.அவருக்குப்பிடிக்கும். அதனால உங்க
குறிப்புப்படி பண்ணி சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டோம் நான் பனீர் எல்லாம் தனியா எடுத்து அவர் ப்ளேட்ல போட்டுடுவேன். நல்லா ரசிச்சு சாப்ட்டார்.

ஹாய் கோமு எப்படி இருக்கீங்க?
பனீர் பிடிக்காமலே என் குறிப்பை செய்து பார்த்ததற்க்கு மிகவும் நன்றி பா....
அண்ணன் ரசித்து சாப்பிட்டார் என்று சொன்னதே எனக்கு சந்தோஷம்.
அதை வந்து என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக மிக நன்றி கோமு.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சலாம் அப்சரா,நலமா?

உங்கள் பனீர் கார்ன் ரொம்ப நல்லா இருக்கு பார்க்கவே.இது வரை பனீர் யூஸ் பண்ணியதே இல்லை.

உடனே வாங்கி செய்யபோகிறேன்(.இன்ஷா அல்லா.)செய்துவிட்டும் பதில் போடுவேன்

சான்சே இல்லை எப்படி இப்புடி எல்லாம் செய்கிரீர்களோ.தொடருங்கள், பின் தொடருகிறோம்.

ஹசீன்

அஸ்ஸலாமு அலைக்கும் ஹசீனா....
எப்படி இருக்கீங்க..?இது வரை உங்கள் பெயர் தெரியாமல் லூலு என்றே பதிவிட்டிருக்கின்றேன் என நினைக்கிறேன்.உங்கள் பதிவிற்க்கு கீழ் உள்ள வாசகமும் ரொம்ப நல்ல வாசகம்.
அப்புறம், உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி ஹசீனா.....
முடிந்த போது செய்துபார்த்துட்டு சொல்லுங்க சரியா.....
மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.