தேங்காய் அவல்

தேதி: December 10, 2010

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கெட்டி அவல் - ஒரு கப்
துருவிய தேங்காபூ - ஒரு கப்
முந்திரி - 3
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
ஜீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

அவலை நன்கு கழுவி பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
இத்துடன்,மிளகு,ஜீரகப்பொடி, தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
கடாயில் நய் ஊற்றி, முந்திரி தாளித்து கலவையை கொட்டி நன்கு கை விடாமல் கிளறி இறக்கவும்.


மிகவும் சுலபமாகசெய்துவிடலாம். நல்லசுவையாகவும் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்