pcos problem

ஹாய் தோழிகளே, எனக்கு pcos இருக்கு.டாக்டரிம் சென்று காட்டினேன் அவர்கள் எனக்கு கரு முட்டை ம் அளவை பார்த்தார்கள்.அது சரியாக இருந்தது.ஆனால் நான் இன்னும் conceive ஆகவில்லை .என்ன செய்வது?எனகு குழந்தை பிறக்காதா தோழிகளே???? திருநெல்வெலி ல் நல்ல டாக்டர் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே....

ஹாய் சரண்யா எப்படி இருக்கிங்க.தோழி நீங்க முதல்ல தன்னம்பிக்கையோட இருங்க கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும்.சரியா நீங்க நல்ல டாக்டர்கிட்ட காமிங்க.வாழ்த்துக்கள்

கொஞ்சம் wait பண்னுங்க தோழிகள் வந்து பதில் சொல்லுவாங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் சரண்யா எப்படி இருக்கீங்க கவலை படாதிங்கபா எனக்குட இந்த ப்ரோப்ளேம்தான் நானும் இதற்கு பார்த்து கொண்டுதான் இருக்கேன் நம்பிக்கையோடு இருங்க இது போல் இருந்த எத்தனயோ பேர் குழந்தை பெற்று இருக்காங்க நீங்க கேட்டு இருக்குறத பார்த்தவுடன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க குண்டா இருப்பீங்களா ?

கவலை படாதீங்க பா . எனக்கும் சேம் ப்ராப்ளம் தான் பா கல்யாணம் ஆகி 2 வருடம் 6 மாதங்கள் ஆகிரது குழந்தை இல்லை சமிபத்தில் பார்த்த போது தான் தெரிந்தது எனக்கு பீசிஒ இருப்பது நான் ட்ரீட்மெண்ட் எடுத்து வருகிரேன் நம்பிக்கை தான் பா நமக்கு எல்லாம் ரொம்ப முக்கியம் நான் சென்னை அதனால் எனக்கு அங்கு இருக்கும் மருத்துவமனை தெரியாது நீங்க வேரு நல்ல மருத்துவரை பாருங்கள் கண்டிப்பா குழந்தை பிறக்கும் மனம்தளர வேண்டாம் , நல்லா கடவுளை ப்ராத்தனை பன்னுங்க இசை கேளுங்க மனச ரிலாக்சா வச்சுக்கோங்க நமக்கு குழந்தை இல்லையே என்று எப்பவுமே நினைத்துக்கொண்டிருக்காதீர்கள் உங்கள் மனது கஷ்டப்படும்படி யாரேனும் பேசி இருப்பின் அவர்களை விட்டு சிரிது காலம் விலகிஇருப்பதும் நல்லது . மேலும் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றில் உங்களை முழுமையுடன் ஈடுபடுத்துங்கள் வேறு ஏதேனும் கேட்க்க வேண்டும் என்றால் கேக்கவும் .
அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
ஸ்ரீ

திருநெல்வேலியில் மதுபாலா என்ற டாக்டர் இருக்கிறார்கள் ரொம்ப நல்லா பார்ப்பாங்க.அவங்க hospital ரெடியார்பட்டியில் இருக்கு. இன்னொரு டாக்டர் பாக்கியம்பார்வதி அவங்களும் ரொம்ப நல்லா பார்ப்பாங்க . எனக்கு அங்கதான் டெலிவரி ஆச்சு. town la hospital irukku. நீங்க tirunelveli la எங்க இருக்கீங்க?

நான் மதுபாலா டாக்டரிடம் தான் பார்க்கிறேன் 6 மாதமாக. நான் உடையார்பட்டியில் இருக்கிறேன்.மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது தோழிகளே.யார் பார்த்தாலும் என்ன விசேசம் என்று தான் கேக்கிறார்கள்.உங்கள் பதில் பார்த்தவுடன் மனதுக்கு நன்றாக உள்ளது.நன்றி தோழிகளே...

நான் குண்டாக இல்லை தோழியே.medium ஆக இருப்பேன்.

ஹாய் தோழி நான் 6 மாதமாக சிகிச்சை எடுக்கிறேன்.டாக்டர் இப்பொழுது நீர்க்கட்டியினால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் கூறி விட்டார். 2 மாதத்திற்கு மாத்திரை சாப்பிட சொல்லிருக்கங்க.ஆனாலும் பயமாக இருக்கிறது தோழியே...

மேலும் சில பதிவுகள்