கிரில்டு பொட்டேட்டோ

தேதி: December 10, 2010

பரிமாறும் அளவு: 2 persons

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

உருளை கிழங்கு - 6 (சிறியது)
மிளகு தூள் - 1ஸ்பூன்
பூண்டு தூள் - 1ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 4 ஸ்பூன்
உப்பு - சிறிது


 

கிழங்கை தோல் சீவி கழுவவும்.
ஒரு சட்டியில் பாதியளவு தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு அதில் கிழங்கை போட்டு கொஞ்ச நேரம் வேக விடவும்.
வெந்த கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சிறிது நேரம் ஆரவிடவும்.
பின் முள் கரண்டியால் கிழங்கை சுற்றி குத்தி விடவும்.
அவனில் வைக்கும் பாத்திரத்தில் கிழங்கை போட்டு அதன் மேல் மிளகு,பூண்டு தூள்,ஆலிவ் ஆயில் ஆகியவற்றை போட்டு பிரட்டிவிட்டு அவனில் 20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.


உருளை கிழங்கு தண்ணீரில் பாதி வெந்திருந்தால் போதும்,குழந்தைகளுக்கு கிழங்கு பொரியல் சாப்பிட காரமாக இருக்கும்,அதனால் இப்படி மிளகு தூள் சேர்த்து செய்தால் காரமும் அதிகம் இருக்காது & விரும்பியும் சாப்பிடுவார்கள்.குளிர் காலத்தில் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கிரில்ட் பொட்டாடோ மைக்ரோவேவ் ஒவனா. இல்லைனா வேரயா?

என்னிடம் மைக்ரோவேவ் அவனும் உள்ளது,ஆனால் நான் அடுப்புடன் கூடிய அவனில் தான் செய்வேன்,உங்களிடம் எது உள்ளதோ அதில் செய்து பாருங்கள்.

Eat healthy

செய்து சாப்பிட்டாச்சு ரஸியா. நன்றாக இருந்தது.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா,லேட்டா பதில் அளித்ததற்கு சாரிபா

Eat healthy