வெங்காய தக்காளி ரசம்

தேதி: December 11, 2010

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

வெங்காயம் - 1

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 10 பல்

வேக வைத்த துவரம் பருப்பு - 2 tbsp

மிளகு, சீரகம், மல்லி விதை - தலா 1 tsp

மஞ்சள் தூள் - 1/4 tsp

பட்டை, சோம்பு, கிராம்பு, கருவேப்பில்லை, எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி தழை - அலங்கரிக்க


 

வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாகவும், தக்காளியை பொடியாவும் நறுக்கி வைக்கவும்.

வேகவைத்த பருப்பில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

வெறும் வாணலியில் மிளகு சீரகம் மல்லி வறுத்து ஒரு சின்ன மெல்லிய துணியில் கட்டி தனியே வைக்கவும்.

எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பச்சை மளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கரைத்து வைத்துள்ள பருப்பு தண்ணீரை சேர்க்கவும்.

இப்பொழுது கட்டி வைத்துள்ள மல்லி சீரகம் மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்.

நுரை கட்டி வரும் போது அனைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரசத்தில் வெங்காயம் சேர்த்து செய்ததே இல்லை. உங்க குறிப்பு வித்யாசமா இருக்கு. செய்து பாத்துட்டு சொல்ரேன்

செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு பிடித்த உணவாக மாறி விடும். இது எனது அம்மா வீட்டு பழக்கம். எனக்கு பிடித்த அம்மா சமையலில் இதுவும் ஒன்று.

நன்றி.
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கடைசியில் பாதி லெமனை பிழிந்தால் (சூடு ஆறியதும்) எங்க ஊரில் இதை தக்காளி சூப் என்பர். சுவை சூப்பர்+சத்து மிக்கது. சேம்பு,உருளை,சேனை வறுவல் சேர்த்து கொண்டால் சுவை அள்ளும்.

நாங்களும் அப்படி தான் சொல்லுவோம். எலுமிச்சை பிழிய மாட்டோம். அப்படியே சாதத்தில் ஊற்றி கொள்ளுவோம். இங்கு தக்காளி சூப் என்று ஏகப்பட்டது இருக்கு. அதனால் தான் இதற்கு ஒரு புது பெயர்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!