காப்சிகம் சாம்பார்

தேதி: December 11, 2010

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காப்சிகம்- 2

சின்ன வெங்காயம் - 5

தக்காளி - 1

துவரம் பருப்பு - 1 கப்

சாம்பார் பொடி - 2 tsp

மஞ்சள் தூள் - 1/4 tsp

உப்பு - தேவையான அளவு

கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

கொத்தமல்லி தழை - அலங்கரிக்க


 

பருப்பை இரண்டு கப் தண்ணீர் மஞ்சள் தூள் சிறிதளவு பெருங்காயம் ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து வேக வைத்து நன்றாக மசித்து வைத்து கொள்ள வேண்டும். எண்ணெய் செற்பதால் பருப்பு சீக்கிரமே வெந்து விடும்.

எண்ணெய் சூடாக்கி தாளிக்க கூறியவற்றை தாளித்து வெங்காயம் சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதங்கவும். தேவையானால் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். சீக்கிரம் வதங்கிவிடும்.

எட்டாக நறுக்கிய காபிசிகம் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாம்பார் பொடி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

சாம்பார் பொடியின் பச்சை வாசம் அடங்கியவுடன் பருப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

8 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஏங்க இந்த சாம்பாருக்கு புளி சேர்க்க வேணாமா?

திருமதி. கோமு,

முதல் ஆளாக வந்து என்னுடைய எல்லா குறிப்பிற்கும் பின்னூட்டம் தருவதற்கு மிக்க நன்றி. இந்த சாம்பார் குடை மிளகாயில் செய்வது. குடை மிளகாய் இயற்கையிலேயே புளிப்பு தன்மை உடையது. அதனால் புளி சேர்க்க வேண்டாம். வேண்டுமானால் கடைசியாக இறக்குவதற்கு முன்பு சிறிதளவு ஆம்சூர் பொடி சேர்க்கலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!