கேரட் பாயசம்

தேதி: December 11, 2010

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு,

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

கேரட் - கால்கிலோ
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 2 கப்
முந்திரிபருப்பு - 10
ஏலக்காய் - 3
நெய் - ஒருடேபிள் ஸ்பூன்


 

கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து, தனியாக வைக்கவும்.
அதே நெய்யில் கேரட்டை தோல்சீவி, துருவி, சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
கேரட்டை குக்கரில் 2 விசில் வரும்வரை வேக விடவும்.
இன்னொரு பாத்திரத்தில் பால் கொதிக்கவிட்டு பாதியாக சுண்டிய பிறகு வெந்த கேரட் சேர்க்கவும்.
கேரட், பால் சேர்த்து நன்கு கொதித்ததும் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும். எல்லாம் சேர்த்து நன்கு கொதித்ததும் கீழே இறக்கி,ஏலப்பொடிதூவி,வறுத்தமுந்திரி சேர்க்கவும்.


மிகவும் சத்தான, ருசியான பாயசம் இது. குழந்தைகள்முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடு வார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கேரட் பாயசம் படிக்கும்போதே சாப்பிடனும்னு ஆசையா இருக்கு.
ஈசியான முறையிலும் இருக்கு.செய்து பார்க்கிறேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கேரட் பாயசம் நானா ஒரு முறை ட்ரை பண்ணி பாத்துருக்கேன் கோமு

இந்த முறையில் மறுபடியும் செய்து பாக்குறேன்

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட, இங்க எட்டிப்பாக்கக்கூட நேரம் கிடைச்சுதா. நேரத்தை உண்டாக்கிட்டீங்களா?
எப்படியோ வந்ததுக்கு மகிழ்ச்சி.

கேரட் பாயாசம் மி௧ நன்றாக இ௹ந்தத, நன்றி,