டெக்ரேட்டட் ஃபுட் கவர்

தேதி: December 11, 2010

5
Average: 4.6 (7 votes)

 

ஃபுட் கவர் (6 பிரிவுகள் உடையது) - ஒன்று
செர்ரி (க்றிஸ்மஸ் டெக்ரேஷன்) - 18
செயற்கை இலைகள் - 9
வெள்ளை டேப்
கத்தரிக்கோல்
ஊசி மற்றும் வெள்ளை நூல்
குரடுகள்

 

முதலில் தேவையானப்பொருட்களை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
செர்ரிப்பழங்களை மூன்று மூன்றாகச் சேர்த்து கம்பியை முறுக்கி வைக்கவும்.
ஆறு இலைகளை மட்டும் இரண்டிரண்டாகச் சேர்த்து முறுக்கவும்.
ஒரு செட் இலையை, ஒரு செட் செர்ரிப் பழங்களோடு சேர்த்து முறுக்கவும்.
எல்லாக் கம்பிகளையும் ஒரே அளவாக வெட்டி விட்டு வெள்ளை டேப் சுற்றி இதுபோல் மடித்து வைக்கவும். இதை போன்று 3 செட்கள் செய்து வைக்கவும்.
மீதி 3 செட்களையும் ஒவ்வொரு இலை மட்டும் இணைத்து இதேபோல் வெள்ளை டேப் சுற்றி வைக்கவும்.
ஃபுட் கவரை விரித்து வைத்து மேலிருந்து அதன் கம்பி நீளத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவு கீழே வருமாறு செய்துவைத்திருக்கும் பழக்கொத்துக்களை வைத்துத் தைத்துக் கொள்ளவும்.
ஃபுட் கவரில் உள்ள 6 கம்பியில் ஒன்றுவிட்டு ஒரு கம்பியில் இதுப்போல் வைத்து தைக்கவும்.
ஒற்றை இலை சேர்த்து இருக்கும் பழங்களை, விடுப்பட்டுள்ள கம்பிகளில் கீழிருந்து 10 செ.மீ உயரத்தில் வைத்துத் தைக்கவும்.
பழங்களையும் இலைகளையும் சீர் செய்து விட்டால் அழகான ஃபுட் கவர் தயார். இந்த ஃபுட் கவர் டெக்ரேஷனை செய்து காட்டியவர் அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா க்றிஸ் அவர்கள். 25 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

very nice.i like it very much .by g.gomathi.

இமாம்மா அழகான படத்துடன் ஈஸியா செய்யற மாதிரியான டெக்ரேஷன் ஒர்க் நல்லா இருக்கு.

இமா... இமா.. இமா... எப்படி எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க??? உங்க வீட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாம்மே வித்தியாசமா அழகா இருக்கும் :) உங்களை போலவே!!! சூப்பரா இருக்கு இமா. செபா ஆன்ட்டி நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா அருமையோ அருமை சூப்பர்.

ஜலீலா

Jaleelakamal

பாராட்டுக்கு நன்றி கோமதி, வினோஜா, வனி & ஜலீ. ;)
செபாம்மா சுகமாக இருக்கிறாங்க வனிதா. விசாரித்ததைச் சொல்லி விடுகிறேன். மீண்டும் நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta