****** அர்த்தமுள்ள அரட்டை - 83 ******

பழைய அரட்டை அதிகமான அர்த்தத்தோட போயி 200-ஐ தாண்டிட்டதால, புது அரட்டையை தொடங்கிட்டேன். எல்லாரும் அங்கே விட்ட அர்த்தத்தை இங்கே வந்து தொடரும்படி கேட்டுக்கறேன் :)

ஹையா ஜாலி நான் தான் முதல்ல வந்து இருக்கேன் வங்கா வாங்க

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னன்னு பாக்கரீங்களா நான் ஆழுவரேன் பா என்ன விட்டுட்டு நஸி முதல்ல வந்துட்டாங்க ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்புடன்
ஸ்ரீ

அழாதம்மா ஸ்ரீமதி நீ அழுதால் என்னால தாங்க முடியாது சாரி ஸ்ரீ நீனு சொல்லிடேன்

ஹாய் கல்பனா, நஸ்ரின், ஸ்ரீமதி
எல்லாரும் எப்படி இருக்கீங்க?

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

நாங்க எல்லோரும் நலம் நீங்க எப்படி இருக்கீங்க எல்லோருன் நலமானு தெரியல கல்ப்ஸ்கு ஜலடோசம்னு சொன்னங்க

\\\\\\\\\\\\\அழாதம்மா ஸ்ரீமதி நீ அழுதால் என்னால தாங்க முடியாது சாரி ஸ்ரீ நீனு சொல்லிடேன்//////////////
என்ன பா இப்படியெல்லாம் பேசரீங்க நீன்னு சொன்னா கூட யாராச்சும் கோச்சுக்குவாங்களா என்ன கொடுமை கல்ப்ஸ் இது என்னால தாங்க முடியலையே

வாங்க கம்லா நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க உங்களுக்கு பிடித்த ஹோட்டல் பத்தி சொல்லுங்க

அன்புடன்
ஸ்ரீ

கல்பா குட்டிக்கும் உனக்கும் சளி புடித்து இருக்கா மருந்து எடுத்தியாடா இப்போ எப்படி இருக்கு கை பக்குவமா எதாவது செய்தாயா??கஷாயம் குடுத்தாயா வென்னீர் அடிக்கடி குடுடா

ஹாய் தோழீஸ்! உங்கள் தினசரி வேலைகளின் அட்டவணை பற்றி சொல்லுங்க.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

\\\\\\\\\\\\\இதுவும் நல்லா இருக்கு பா . நானே ஆரம்பிக்கரேன் நான் சென்னை அதனால எனக்கு ரொம்ப புடிச்ச ஹோட்டல் தாம்பரம் பட்ஸ் அங்க எல்லா அயிட்டமுமே சூப்பரா இருக்கும் ஸ்பெஷலி மசாலா பால் சுட சுட அப்பா இப்ப நாக்குல எச்சி ஊருதே .அப்பரம் சொல்லனும் நா சரியா எனக்கு அந்த ஹோட்டல் பெயர் தெரியல பா டீநகர் ல லாஸ்ட் தீபாவளிக்கு பர்ச்சேஸ் பன்ன போனேன் அப்ப என்னவர் ஒரு ஹோட்டல் கூப்ட்டு போனாங்க நான் அப்ப ரெண்டு பரோட்டா மட்டும் தான் சாப்ட்டேன் ஆஹா என்ன ருசி என்ன ருசி அந்த வெஜ் குர்மாவும் தயிர் பச்சடியும் சொல்ல முடியல அடுத்த முறை போனா கண்டிப்பா பேர் நோட்பன்னி சொல்ரேன் .///////////////////
எல்லாருக்கும் தெரிந்த ஹோட்டல் அங்க என்ன நல்லா இருக்கும்ன்னு சொல்லுங்க பா அப்பதான் அங்க போனா அத விரும்பி சாப்டலாம் .

அன்புடன்
ஸ்ரீ

நான் நல்லா இருக்கேன். என்னாச்சு கல்ப்ஸ்? காங்கோல மழைல நனைந்துடீங்களா?போன இழையில் பிரபா தோழிகளோட தினசரி அட்டவணை பத்தி கேட்குறாங்க. எனக்கு இப்போதைக்கு ஒரு வேலையும் இல்ல. அம்மா வீட்ல சாப்ட்டு சாப்ட்டு ரெஸ்ட் எடுக்குறேன் அவ்ளோ தான்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்