பிஷ் பை

தேதி: April 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - 500 கிராம்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பீன்ஸ் - 100 கிராம்
காரட் - 100 கிராம்
முட்டை - ஒன்று
ரொட்டித் துண்டு - 2
பச்சை மிளகாய் - 5
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
கான்ஃப்ளார் - 2 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 3
ரொட்டித்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

இஞ்சியைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பிறகு மீன் துண்டுகளில் இஞ்சியை சேர்த்து, உப்புப் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
மீன் துண்டுகளை எடுத்துக் கொண்டு, தண்ணீரைத் தனியே வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையில் ஒரு சிட்டிகை உப்புப் போட்டு அடித்துக் கொள்ளவும்.
ரொட்டித் துண்டுகளில் அடித்த முட்டையில் பாதியை ஊற்றி ஊறவைக்கவும்.
உருளைக்கிழங்கை உப்புப் போட்டு வேக வைத்து தோலை உரித்து, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
காய்கறி, உதிர்த்த மீன், நறுக்கிய பச்சை மிளகாய், ரொட்டித் துண்டு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும்.
மீன் வேக வைத்த தண்ணீரில் கான்ஃப்ளார் சேர்த்துக் கலக்கி மீன் கலவையில் ஊற்றிக் கலக்கவும்.
கலவை மிகவும் உதிரியாக இருந்தால் மீன் வேக வைத்த தண்ணீரில் சிறிது சேர்த்துக் கலக்கலாம்.
பேக்கிங் செய்தால் உடையாத கண்ணாடிப் பாத்திரத்தில் சிறிதளவு நெய் தடவி முதலில் மீன், காய்கறிக் கலவையைப் போட்டுச் சமமாகப் பரப்பவும்.
அதற்கு மேல் மசித்த உருளைக்கிழங்குக் கலவையைப் பரப்பி ரொட்டித் தூளைத் தூவிக் கொள்ளவும்.
பிறகு பாத்திரத்தை பேக்கிங் ஓவனில் 175 டிகிரி C யில் 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்