உடல் எடையைக் குறைக்கலாம் வாங்க...

அன்புள்ள தோழிகளே,
இன்றைய காலக் கட்டத்தில் ஓபிசிட்டி என்பது தலையாய பிரச்சினையாக உள்ளது. இதிலிருந்து தப்புவதற்கு என் டாக்டர் சில வழிமுறைகளைக் கூறினார்.
அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் அனைவரும் நல்ல பலனைப் பெறலாம்.
கோடை காலமோ குளிர் காலமோ எதுவாக இருந்தாலும் காலை 5 .30 இலிருந்து 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும்.
பல் துலக்கிய உடன் இரண்டு டம்பளர் வெந்நீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் மலச் சிக்கலைத் தடுக்கலாம்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு கிரீன் டீ சர்க்கரை இல்லாமல் குடிக்க வேண்டும். (சர்க்கரை இல்லாமல் கிரீன் டீ குடிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆகவே அதில் சிறிது எலுமிச்சம் பழ சாறு, இஞ்சி, மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.
அதன் பிறகு குறைந்தது அரை மணிநேரமாவது உடற் பயிற்சி (floor exercise)செய்ய வேண்டும். பிறகு மீண்டும் இரண்டு டம்பளர் வெந்நீர் குடிக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து, கார்ன் பிளேக்ஸ் அல்லது ஓட்ஸ் கஞ்சி (ஓட்ஸ் உப்புமா அல்லது மோர்க்களி என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.)
காலை சிற்றுண்டியுடன் ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து, வெஜிடபிள் சாலட் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் ஏதாவது ஜூஸ் அல்லது ஒரு டம்பளர் வெந்நீர் குடிக்கவும்.
மதியம் சாப்பாட்டிற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு இரண்டு டம்பளர் வெந்நீர் மீண்டும் குடிக்கவும்.
சாப்பாட்டில் கார்போஹைட்ரெட் மற்றும் கொழுப்பு குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சாப்பாட்டுடன் வெஜிடபிள் சாலட் போன்ற பச்சை காய்களை சாப்பிட வேண்டாம். வேக வைத்த காய்கறிகளை மட்டுமே சாப்பாட்டுடன் எடுத்துக் கொள்ளவும். இதன் மூலம் அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.
சாப்பிட்ட பின் தவறாமல் போதிய அளவு தண்ணீர் குடிக்கவும். வெயிட் குறைக்க நினைப்பவர்கள், மதியம் சாப்பிட்ட உடன் அரை மணி நேரம் ஒரு வாக் செய்யலாம். அது வெளியிலோ அல்லது ட்ரெட் மில் எதுவாகவும் இருக்கலாம். இதன் மூலம் தொப்பை விழாமல் தடுக்கலாம்.
மாலை நொறுக்கு தீனிகளை கட்டாயமாக நிறுத்திவிடவும். அதற்கு பதிலாக ஏதாவது ப்ரூட் சாலட் அல்லது ட்ரை ப்ரூட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் லைட்டாக ஒரு காபியோ அல்லது டீயோ மிதமான சர்க்கரை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். பிறகு குழந்தைகளுடன் ஓடி விளையாட வேண்டும். இது நம் மனதை இளமையாக வைத்துக் கொள்ள உதவும். குழந்தைகளுடன் விளையாட முடியாவிட்டால், ஸ்கிப்பிங் நூறு முதல் முன்னூறு வரை குதிக்கவும். இது நம் உடலில் ரத்த ஓட்டத்தை நன்கு சுறு சுருப்பாக்கும்.
இரவு உணவிற்கு. காலை சிற்றுண்டி போல் ஓட்ஸ் கஞ்சியோ, ரொட்டியோ அல்லது ஓட்ஸ் உப்புமாவோ எடுத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட உடன் தவறாமல் குறைந்தது இரண்டு தம்ப்லராவது வெந்நீர் குடிக்க வேண்டும். சாப்பிட்ட உடன் முடிந்தால் மீண்டும் ஒரு சிறிய வாக் போகலாம். அல்லது வீட்டு ஹாலிலேயே உலாவலாம். எப்படி இருந்தாலும் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உணவை முடித்துவிட வேண்டும். படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்பளர் கொழுப்பு நீக்கப் பட்ட பால் அருந்தவும்.
அத்துடன் சோபா , நாற்காலிகளில் அல்லாமல் தரையில் அமரப் பழகவும்.
லிப்ட்டைப் பயன் படுத்த வேண்டாம். மதியம் தூங்கவோ அல்லது டி வி பார்க்கவோ வேண்டாம்.

இந்த டிப்செல்லாம் ஓபிசிட்டி உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், பிரசவத்தினால் ஏற்பட்ட உடல் பருமனுக்கும் பொருந்தும்ஆரோக்யமான வாழ்விற்கு என் டாக்டர் சொன்ன வழிமுறைகள் இவை.

இந்த டிப்ஸ் எல்லாமே சூப்பர் பா .இந்த ஆரோக்கிய குறிப்புகள் கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள் பல .

அன்புடன்
ஸ்ரீ

மிகவும் நல்ல பயனுள்ள டிப்ஸ் தான் தந்து இருக்கீங்க ....
நிஜமாவே இதை தினமும் செய்து வந்தால் நிச்சயம் ஒபிசிட்டி என்ற பேச்சுக்கே இடம் இருக்காதுதான்.என்ன இதை கடைபிடிப்பதுதானே கஷ்ட்டம்.
அதுவும் நான் மிகவும் இந்த விஷயத்தில் சோம்பேறிதான் என்று சொல்வேன்.
பத்து நாள் உடற்பயிற்ச்சி என்று செய்வேன்.அப்புறம் ஏதாவது ஒரு தடைபடும்.அது அப்படியே தடைபட்டு விடும்.எனக்கு நானே தான் பிரச்சனை.
எனக்கும் தைராய்டு பிரச்சனை இருப்பதால் வெய்ட் ஏறி கொண்டுதான் போகின்றது.என்ன செய்ய....
காஃபி,டீயில் சர்க்கரையை குறைக்க முடிவதில்லை.நிறைய தண்ணீர் குடிப்பேன்.சாப்பாடு என் கணவருடன் விடுமுறை நாட்களில் சேர்ந்து சாப்பிடும் போதுதான் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவேன்.
இனி கொஞ்சம் கொஞ்சமாக கடைபிடிக்க முயற்ச்சிக்க வேண்டியதுதான்.
நல்ல விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஸ்ரீவித்யா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்