புளி மிளகாய் தொக்கு

தேதி: December 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

பச்சை மிளகாய் - 100 கிராம்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
வெல்லம் - 75 கிராம்
நல்லெண்ணை - 50 மில்லி
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

கடாயில் 1ஸ்பூன் எண்ணை விட்டு பச்சைமிளகாயை வெள்ளை நிறமாக மாறும் வரை வதக்கவும். சூடு ஆறியதும் சுத்தப்படுத்திய புளி, வெல்லம். உப்பு சேர்த்து ஆட்டுகல்லில் மைய அரக்கவும். கடாயில் மீதி எண்ணை விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுது, பெருங்காய பவுடர் சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கி ஆறியதும் சுத்தமான பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

1வருடம் வரை கெடாது. தயிர் சாத்திற்க்கு சூப்பர் ஜோடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

மஞ்சு முதல் குறிப்பா வாழ்த்துக்கள்

நானுமிப்படித்தான் செய்வேன். நல்ல குறிப்பு.

சூப்பர்ப்,நல்ல டேஸ்ட்

பின்னூட்டத்திற்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாஹாஹா சுப்பரா இருக்கும் போலருக்கே? ம் ட்ரை பன்னிடறேன். ஏன்க்கா இதை மிக்ஸில அரைக்க கூடாதா? எங்க வீட்ல அதைத்தவிர வேர ஏதும் இல்லையே? இது எப்படி ஊறுகாய் மாறி இருக்குமா என்ன? இங்க நான் பன்னினேன் என்னை ஒரு வழி ஆக்கிருவாங்க புளியே வாங்க மாட்டோம் அதான். செய்து பாத்துட்டு கண்டிப்பா சொல்றேன். ஓகே.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.