மீன் கட்லெட் - 1

தேதி: April 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

சதையுள்ள மீன் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10 பல்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
புதினா - அரை கைப்பிடி
பெரிய வெங்காயம் - 2
பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மைதா - 3 தேக்கரண்டி
பிரெட் தூள் - 100 கிராம்


 

சதையுள்ள மீனை வாங்கி கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
பிறகு மீனை ஆவியில் வேக வைத்து முள் எடுத்து விட்டு உதிர்த்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை மசாலாவாக அரைத்துக் கொள்ளவும்.
மீனில் மசாலா, உருளைக்கிழங்கு போட்டு பிசைந்துக் கொள்ளவும்.
கெட்டியாக இல்லை என்றால் பிரெட்டில் உள்ள ஓரங்களை எடுத்துவிட்டு நடுபகுதியை போட்டு பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதாவை கொட்டி தண்ணீராக கரைத்து வைக்கவும். பிரெட் தூளை ஒரு தட்டில் பரவலாக போட்டு வைக்கவும்.
பிசைந்த மீன் கலவையை வடையாக தட்டிக் கொள்ளவும்.
பிறகு தட்டிய வடையை கரைத்த மைதாவில் தோய்த்து பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும்.
இதே போல் அனைத்து துண்டுகளையும் புரட்டிக் கொள்ளவும்.
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தயார் செய்த மீன் கட்லெட்டை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.


மைதா அல்லது முட்டை உபயோகிக்கலாம். இந்த மீன் கட்லெடை ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பொரித்து சூடாக சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்