புளிச்சகீரை மசியல்

தேதி: December 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

புளிச்சக்கீரை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - ஆறு
தக்காளி - ஒன்று
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, எண்ணெய், சிவப்பு மிளகாய் - தாளிக்க


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். கீரையை தனித்தனி இலையாக ஆய்ந்து வைக்கவும்.
ஆய்ந்த கீரையை குக்கரில் போட்டு கால் டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக விடவும்.
குக்கர் விசில் அடங்கியதும், தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஆறவைத்து பின் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, மிளகாய் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் தக்காளி வதங்கியதும், அரைத்த கீரையை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
சுவையான கீரை மசியல் ரெடி. சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். தயார் செய்வதும் மிக சுலபம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்ன பவி, உன்னோட டிஷ் பெரும் வித்தியாசமா ஹ இருக்கு. உபயோகிக்கற பொருளும் வித்தியாசமா இருக்கு."புளிச்சக்கீரை" இந்த மாதிரி ஒரு கீரை நான் கேள்வி பட்டதே இல்லையே? வேற கீரையிலும் பண்ணலாமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் பவித்ரா, நாங்களும் இப்படித்தான் செய்வோம் வெங்காய வடவம் தாளித்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்
சுகந்தி புளிச்சகீரை கிராமங்களில் நிறைய கிடைக்கும் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. ஆந்திராவில் கோங்குரா என்பார்கள். கோங்குரா சட்னி ரொம்பவே famous . வேறு கீரையிலும் இப்படி செய்யலாம் சிறிது புளியும் சேர்த்து வேகவைக்கவேண்டும்.

பவி... ஆரோக்கியமான குறிப்பு. வாழ்த்துக்கள். புளிச்சகீரை இரும்புச்சத்து அதிகம் உள்ளதுன்னு சொல்வாங்க. கண்டிப்பா செய்து பார்க்கறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பவி,காய்கறிகள்ல இருந்து இப்ப கீரைக்கு வந்திருக்கியா? நல்ல முன்னேற்றம் பவி. நல்ல சத்துள்ள குறிப்புகளாகவே தொடர்ந்து தந்துட்டு வரே பவி. பார்க்கும் போதே சுவையும் தெரியுது. வேற எப்படி சொல்றது பவி? எனக்கு இந்த கீரை கிடைக்காது. அதனால இப்படி போட்டோவ பார்த்து ஜொள்ளு விட்டுக்க வேண்டியது தான். எனக்கு கிடைக்காத பொருட்கள்ல நீ குறிப்பு தந்தியனா, அப்படியே செய்த சமையலை எனக்கு கொரியர் பண்ணி விட்டுடு. நான் உடனே ரிசல்ட் சொல்லிடுவேன். வாழ்த்துக்கள் பவி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பவி,
புளிச்சக்கீரையில் மசியல் ரொம்ப ஈசியான செய்முறையுடன் அழகா விளக்கி இருக்கீங்க.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

நானும் கிட்டதட்ட இப்படி தான் மசியல் செய்வேன். ஆனா புளிச்ச கீரையில் செய்ததில்லை.

கிடைக்கும் போது செய்து பார்த்துட்டு சொல்றேன் பவி!!

அலங்காரம் சிம்பிளிலா அழகா இருக்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு இந்த கீரை ரொம்ப இஷ்டம் ..அதனால தோட்டத்தில் நிறைய போட்டிருக்கேன்..
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமா நேரத்திற்கு ஏற்ப ட்ரை பண்ணுவேன்..
இந்த முறையிலும் செய்வதுண்டு அவசரத்திற்கு...

நார்சத்து அதிகமுள்ள இந்த குறிப்பு எல்லாருக்கும் நல்லது

கிராமங்களில் சுடச்சுட இந்த மசியலோடு சாப்பிடும் கம்பு களி அவ்வளவு சுவை...

எளிமையான அருமையான குறிப்பு..வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்கு நன்றி:)

அன்புடன்
பவித்ரா

ஹா ஹா சுகி, இப்பெல்லாம் அடிக்கடி சமையல் குறிப்பு பக்கம் வறீங்களே:)) சீக்கிரம் கல்யாணமா????? புளிச்சக்கீரை கேள்வி பட்டதில்லையா?? கோவை தானே சுகி, அங்க இருக்குமே, ஒரு வேளை என்னவென்றே தெரியாம சாப்பிட்டிருப்பீங்க, அம்மாக்கிட்ட கேட்டு பாருங்க, சொல்லுவாங்க, அடி லூசு, நாலு நாளைக்கு முன்னாடி சாப்பிட்டியேன்னு:)) நன்றி சுகி

அன்புடன்
பவித்ரா

வாங்க ரம்யா, மிக்க நன்றி:) நீங்களும் இப்படி தான் செய்வீங்களா, நான் இங்க தேடினேன் முடிந்தவரை, அரைத்து செய்யும் டைப்ல இல்லை, அதான் நான் குறிப்பா கொடுத்தேன், நன்றி ரம்யா. சுகிக்கு பதிலளித்தற்கு நன்றி ரம்யா:)

அன்புடன்
பவித்ரா

மிக்க நன்றி வனி. பிஸியிலும் வந்து பதிவு போடறீங்க, எனக்கு இந்த டேஸ்ட் பிடிக்கும் வனி, அதான் அடிக்கடி செய்வேன், இரும்பு சத்து பற்றி இப்ப தான் தெரியும், நன்றி வனி:))

அன்புடன்
பவித்ரா

வீட்டில் சமைக்க மறந்தாலும் மறப்பேன், பவியோட குறிப்புக்கு பதிவு போட மறக்க மாட்டேன்னு தொடர்ந்து வறீங்க, ரொம்ப மகிழ்ச்சி கல்ப்ஸ்:) ம்ம், இனி என்னென்ன காய்கள் கிடைக்காதுன்னு ஒரு லிஸ்ட் கொடுங்க கல்ப்ஸ், நான் செய்துட்டு ஒரு வாரம் கழித்து அப்படியே உங்களுக்கு பார்சல் பண்ணிடறேன்:) உங்க ஜொள்ளில் நனைந்து படங்கள் இப்ப தெளிவா இல்லை கல்ப்ஸ்:)

அன்புடன்
பவித்ரா

வாழ்த்துக்கு நன்றி அன்பு. செய்து பார்த்துட்டு சொல்லுங்க:)) நீங்க சொன்ன மாதிரி ஈஸியாவும் செய்திடலாம்:))

அன்புடன்
பவித்ரா

வாங்க, வாங்க. மற்ற கீரையிலும் இப்படி செய்யலாமா, தெரியாது ஆமி. மிக்க நன்றி:) குறிப்பு தருவதை விட அலங்காரத்துக்கு தான் நான் நிறைய யோசிக்க வேண்டியிருக்கு ஆமி;((

அன்புடன்
பவித்ரா

ஆஹா நீங்களும் என் கட்சியா, எனக்கும் கீரை ரொம்ப பிடிக்கும், அதை கட் பண்ண தான் பிடிக்காது;(( நீங்க அவசரத்திற்கு இப்படி செய்வீங்க நான் எப்பவுமே இப்படிதான்:) வனி இரும்பு சத்து’னு சொன்னாங்க, நார்ச்சத்தும் இருக்கா?? சத்துள்ளது’னு தெரியும்ப்பா, ஆனா என்ன சத்துனு தெரியாது, நீங்க சொன்னதில் தான் தெரிந்து கொண்டேன். கம்பு களியும் ட்ரை பண்ணியதில்லை;(( வாழ்த்துக்கு நன்றி:)

அன்புடன்
பவித்ரா