கிறிஸ்மஸ் ஸ்டார்

தேதி: December 14, 2010

5
Average: 4.5 (6 votes)

 

சைனிங் பேப்பர் - பச்சை மற்றும் சிவப்புநிறம்
பேப்பரிக் பெயிண்ட் - வெள்ளை, சிவப்பு மற்றும் பிங்க் நிறங்கள்
கத்தரிக்கோல்
ப்ரஷ்
தெர்மாக்கோல் பால்ஸ்
சிவப்புநிற வெல்வெட் துணி
பெவிக்கால்
லேஸ்
சாட் பேப்பர்
காட்டன்
பென்சில்
ஸ்கேல்
ஸ்கெட்ச் பென் - சிவப்பு, கறுப்பு நிறம்

 

சைனிங் பேப்பர் ஒரு பக்கம் வெள்ளையாகவும், மறுப்பக்கம் கலராகவும் இருக்கும். சாட் பேப்பரை 7 செ.மீ நீளம், 4 செ.மீ அகலத்தில் நறுக்கி வைக்கவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
15 செ.மீ நீளமும், 12 செ.மீ அகலத்தில் செவ்வக வடிவில் பச்சைநிற பேப்பரில் 3 துண்டுகளும், சிவப்புநிற பேப்பரில் 2 துண்டுகளும் நறுக்கி வைக்கவும்.
ஒரு வெள்ளை தாளில் மேற்சொன்ன அளவில் பேப்பரை நறுக்கி நீளவாக்கில் இரண்டாக மடிக்கவும். இரண்டாக மடக்கிய நடுப்பகுதியின் மேல் முனையிலிருந்து சாய்வாக 11 செ.மீ அளவில் முக்கோணம் போல் வரையவும். அதன் கீழ் உள்ள இருமுனையும் "V" வடிவில் இணைக்க வேண்டும். அதன் இணைக்கும் இரு அளவுகளும் 5 1/2 செ.மீ அளவில் இருக்க வேண்டும்.
இந்த பேப்பரை வெட்டி வைத்திருக்கும் பேப்பர் துண்டுகளில் வைத்து வரைந்து நறுக்கி எடுத்துக்கொள்ளவும். வெள்ளை பேப்பரை பிரித்து பார்க்கும்போது இருமுக்கோணம் இணைந்தது போல் இருக்கும்.
ஐந்து துண்டு பேப்பரையும் நறுக்கி வைத்த பின் ஒவ்வொரு பேப்பரிலும் 11 செ.மீ நீளம் உள்ள பக்கத்தை மட்டும் பெவிக்கால் தடவி ஒட்டவும்.
பேப்பரில் தடவிய பெவிக்கால் காய்ந்ததும் ஒரு சிவப்புநிற பேப்பர், மற்றொன்று பச்சைநிற பேப்பரை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் படத்தில் உள்ளது போல் இணைத்து வைத்து மேலும், கீழும் பெவிக்கால் தடவி ஒட்டவும்.
அடுத்து பச்சைநிற பேப்பரை எடுத்து முதலில் ஒட்டிய பச்சைநிற பேப்பருக்கு எதிர்ப்புறமாக வைத்து ஒட்டவும்.
இப்போது சிவப்புநிற பேப்பருக்கு எதிராக மற்றொரு சிவப்புநிற பேப்பரை வைத்து ஒட்டவும். கடைசியாக ஒரு பச்சைநிற பேப்பரை வைத்து ஒட்டி காய விடவும்.
கிறிஸ்மஸ் தாத்தாவின் முகத்தை 7 செ.மீ நீளம், 4 செ.மீ அகலத்தில் நறுக்கிய சாட் பேப்பரில் படத்தில் உள்ளது போல் வரைந்துக் கொள்ளவும்.
சிறிதளவு பிங்க் நிறம், வெள்ளைநிற பெயிண்டை கலந்து லைட் பிங்க்நிறமாக கலந்து கொள்ளவும். இந்த பெயிண்டை கண், மூக்கு வரைந்த பகுதிக்கு மட்டும் பெயிண்ட் செய்யவும்.
பிறகு சிறிதளவு காட்டனை மெல்லியதாக முறுக்கி மீசையாக ஒட்டவும். மேலும் சிறிது காட்டனை தாடி போல் ஒட்டவும். தலையின் தொப்பி வடிவத்திற்கு வெல்வெட் துணியை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கின வெல்வெட் துணியை தொப்பிக்காக உள்ள இடத்தில் வைத்து ஒட்டவும். அந்த தொப்பியின் முனையில் வெள்ளைநிற தெர்மாக்கோல் பால்ஸை ஒட்டவும். தொப்பியின் பார்டருக்கு வெள்ளைநிற பேப்பரிக் பெயிண்ட் அடிக்கவும். நன்றாக காயந்ததும் முகத்தில் கண், மூக்கு கறுப்புநிற ஸ்கெட்ச் பேனாவால் வரைந்து கொள்ளவும். சிவப்புநிற ஸ்கெட்ச் கொண்டு வாய்ப்பகுதியை வரைந்து கொள்ளவும்.
ஸ்டாரின் ஒவ்வொரு முனையிலும் விரும்பிய நிறத்தில் மூன்று தெர்மாக்கோல் பால்ஸை ஒட்டவும். இப்போது ஸ்டாரில் இரண்டு பச்சைநிற பேப்பர் சேர்ந்தாற் போல் இருக்கும். அந்த ஸ்டாரில் நடுவில் உங்களுக்கு பிடித்த கிறிஸ்மஸ் வாசகங்களை எழுதி கொள்ளலாம். இதில் MERRY X MAS என்று எழுதப்பட்டுள்ளது.
செய்து வைத்திருக்கும் கிறிஸ்மஸ் தாத்தாவின் முகத்தை ஸ்டாரின் நடுவில் பெவிக்கால் வைத்து ஒட்டவும்.
10 செ.மீ அளவில் லேஸ்ஸை நறுக்கி எடுத்து கொள்ளவும். ஸ்டாரின் மேல் முனையில் தெர்மாக்கோல் பால்ஸ் ஒட்டிய இடத்தின் கீழ் இரண்டு துளைகள் இடைவெளிவிட்டு போட்டுக் கொள்ளவும். அந்த லேஸின் இருமுனையையும் அந்த துளையில் நுழைத்து பின்புறமாக கொண்டு வந்து முடிச்சுப்போட்டுக் கொள்ளவும்.
எல்லோரும் எளிதாக செய்யக்கூடிய அழகான கிறிஸ்மஸ் ஸ்டார் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

chrismas star super. i like very much ,keep it up. by g.gomathi.

பத்மா, ரேவதி... கலக்கிட்டீங்க. இது போல் சீசனுக்கு ஏத்த மாதிரி சுலபமா செய்து அசத்த உங்களால் தான் முடியும். சூப்பர். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு!!

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அழகான ஸ்டார். காலத்துக்கேற்ற குறிப்பு. பாராட்டுக்கள் அறுசுவை டீம்.

இந்த ஸ்டாரை புனிதாவுக்கு தரீங்களா?

அழகான குட்டி ஸ்டார். சூப்பர் ஹ இருக்கு...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சூப்பர் அறுசுவை டீம்.எல்லோரும் சாதரண் ஸ்டார் செய்வாங்க நீங்க அதிலேயே கிறிஸ்துமஸ் தாத்தா வைத்துயிருப்பது அழகாயிருக்கு.வாழ்த்துக்கள்.

உன்னை போல பிறரையும் நேசி.

சூப்பரா இருக்கு அருசுவை டீம் நான் இதுவரை சாதாரன ஸ்டார் தான் பார்த்து இருக்கிரேன் ஆனால் கிறிஸ்மஸ் தாத்தா முகம் வைத்து செய்திருப்பது டிஃபரண்ட் ஆகவும் அழகாகவும் உள்ளது.

அன்புடன்
ஸ்ரீ

கிறிஸ்மஸ் ஸ்டார் சூப்பரா இருக்கு.

அக்கா, நீங்க எப்போ கலத்தில் குதித்தீங்க. ரொம்ப நல்லா பண்ணிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
நூரி சையத்.

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

கோமதி ரொம்ப நன்றிங்க.

வனிதா ரொம்ப நன்றி, யாழினி, குமரன் நலமா? புதுவரவு நலமா? எங்களுடைய வாழ்த்துக்களை உங்கள் தங்கைக்கு தெரிவித்துவிடுங்கள்.

நன்றி ஆமினா

புனிதா பாராட்டுக்களுக்கு மிகவும் சந்தோஷம். புனிதா இது வேண்டுமென்றால் நீங்க இங்க வரீங்களா நிச்சயம் தருகிறோம். அதிலும் ஒரு சிக்கல் இருக்கு நவீனாவிடம் கேட்டுட்டு எடுத்து செல்லலாம்.

சுகந்தி ரொம்ப நன்றிங்க

தேவி முதலில் வெறும் ஸ்டார் மட்டும் தான் செய்திருந்தோம் அதை அலங்கரிக்க என்ன செய்யலாம்னு யோசித்த போது தான் கிறிஸ்துமஸ் தாத்தா செய்யலாம்னு ஐடியா வந்தது செய்துட்டோம். நன்றி தேவி

ஸ்ரீமதி நன்றிகள்

கோமு வாழ்த்துக்கு நன்றி

ஹாய் நூரி எப்படி இருக்க? வாழ்த்துக்கு நன்றி நூரி. அப்படியே நீயும் உன்னோட குறிப்புகள், கவிதைகள் எல்லாம் அனுப்பலாமே. இரண்டு நாட்களா அறுசுவையில் உன்னுடைய போஸ்டிங் பார்த்தேன் சந்தோஷமாக இருக்கு. சீக்கிரம் வந்து எல்லோருடனும் பேசு.

அக்கா, எனக்கு உதவி செய்யுங்கள். எனது முன் பதிவினை எப்படி பார்ப்பது. என் பதிவு சாட்டில் தொலைந்துவிட்டது. நான் பாபு சாருக்கு பதிவு போட்டேன் ஆனால் இல்லை. உதவவும்.
என் பதிவு அரட்டையிலும் இல்லை.

pls Help.....................

அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

ரொம்ப அருமையாக இருக்கு,
சூப்பர்.
யாரு செய்தது,ரேவதி, பத்மாவா, பாப்பியா?.இன்னும்?கலக்கல் தான்

ஜலீலா

Jaleelakamal

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta