மீன் குழம்பு - 1

தேதி: April 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரப்பொடி மீன் அல்லது காரப்பொடி கருவாடு - அரை கிலோ
பூண்டு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
புளி - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
சீரகம் - 2 தேக்கரண்டி
சுக்கு - ஒரு துண்டு
தனியா தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

முதலில் காரப்பொடி கருவாடை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீராக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பூண்டையும், வெங்காயத்தை இலேசாக அம்மியில் நசுக்கிக் கொள்ளவும்.
சுக்கு, மிளகு, சீரகம், தனியா தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக அரைத்து வைக்கவும்.
பிறகு அரைத்தவற்றையும், உப்பையும் போட்டு புளியில் கரைத்து வெங்காயம், பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை போட்டு குழம்பை ஊற்றி மீன் போட்டு மூடி நன்றாக கொதிக்க விடவும்.
பிறகு புளி வாசனை போனதும் கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும்.


மார்பு சளிக்கு நல்ல மருந்து. இது ரசம் போல தண்ணீராக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்