மாங்காய் வேப்பம்பூ இனிப்பு பச்சடி

தேதி: April 13, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அதிகம் புளிப்பில்லாத கிளிமூக்கு மாங்காய் -1, நடுத்தர அளவு
பச்சை மிளகாய் - 2,3-இரண்டாகக் கீறவும்
பொடி செய்த வெல்லம் - 1/2 கப்
புதிய வேப்பம்பூ - 1/4 கப்
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
தாளிக்க:
எண்ணை - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 3, இரண்டாகக் கிள்ளவும்
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காயப் பொடி - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு


 

மாங்காயைத் தோல் சீவி 1/2" துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு, கடுகு,சிவப்பு மிளகாய், வெந்தயம்,காயப்பொடி, கருவேப்பிலை முதலியவற்றைத் தாளிக்கவும்.
அவை வறுபட்டதும், மாங்காய்த் துண்டுகளையும், பச்சைமிளகாய்களையும் லேசாக வதக்கவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்.
வேறு ஒரு அடுப்பில், ஒரு சிறிய பாத்திரத்தில் வெல்லத்துடன், ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து இளம் பாகு காய்ச்சவும்.
மாங்காய் வெந்ததும் பாகை வடிகட்டி அதில் விடவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
நெய்யில், வேப்பம்பூவை முறுகலாக வறுத்து அதில் போடவும்.
இந்தப் பச்சடி, தேன் பதத்தில் இருக்கவேண்டும்.


இந்தப் பச்சடி, தமிழ் நாட்டில் தமிழ்ப்புத்தாண்டிற்கு வழக்கமாக செய்யப்படும். எல்லா சுவைகளும் வாழ்வில் இருப்பதை இது உணர்த்துகிறது.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சித்ரா மேடம், உங்களது பச்சடி குறிப்பைப் படிக்கும்போதே நாவில் நீர் ஊறுகின்றது. மிகத் தெளிவா குறிப்பினை கொடுத்து இருக்கிறீர்கள். இந்தப் பச்சடியை எதோடு சேர்த்து சாப்பிட பொறுத்தமாக இருக்கும் என்பதை சொல்லுங்கள். பிரியாணியுடன் சேர்த்து வைப்பார்களே ஒரு இனிப்பு பச்சடி. இது அந்த வகையா?

இந்த பச்சடி பிரியாணியுடன் சுவையாக இருக்காது.
புளியில்லாத, பொரித்த குழம்பு வகைகளுடனும், தயிர்
சாதத்துடனும்,தோசை முதலியவற்றுடனும், மிகவும் சுவையாக இருக்கும். உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றி !