தேதி: December 17, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இட்லி அரிசி (புழுங்கல்) - அரை கப்
பச்சரிசி - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி (அரை+அரை)
கேரட் - இரண்டு
உப்பு - தேவையான அளவு
புளி - கால் எலுமிச்சை அளவு
அரிசி, துவரம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.

ஊற வைத்த அரிசியுடன் துருவிய கேரட், சீரகம், மிளகு, உப்பு, புளி சேர்த்து கால் டம்ளர் நீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

தோசை மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.

ஊற வைத்திருந்த கடலை பருப்பை அரைத்த மாவுடன் கலந்து கொள்ளவும்.

மாவு புளிக்க தேவையில்லை, அரைத்த உடனேயே தோசையாக ஊத்தவும்.

சுவையான கேரட் தோசை ரெடி. இதை வெங்காயம், தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

Comments
நினைச்சேன் பவி குறிப்பாத்தான் இருக்கும் ன்னு.
பின்னி எடுக்கற பவி...
எனக்கு ஒன்னு மட்டும் புரியல.
//தோசை மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.///
அதுக்கு அப்பரம் கடலை பருப்பு செர்க்கனும்ன்னு சொல்லி இருபது,கொஞ்சம் குழப்பம். கடலை பருப்பு அப்படியே சேர்க்கனுமா? இல்ல அரைச்சு சேர்க்கணுமா?
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
பவி
தோசைக்கு புளி சேர்த்து செய்யறது உங்க குறிப்பு பார்த்தவுடன் புது முறையா இருக்கு. கைவசம் 21 குறிப்பு வைச்சு இருக்கீங்க க்ரேட் பவி. இன்னும் 4 குறிப்பு கொடுத்துடுங்க இந்த வாரம் போய் அடுத்த வாரம் சமைத்து அசத்தலாமில் உங்க சமையல் தான். இன்னும் 4 குறிப்பு கொடுத்து வெள்ளி ஸ்டார் வாங்க என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
சுகி
பவி செஞ்சு காண்பிச்ச தோசைல பைனல் போட்டோவ பாருங்க. கடலைப்பருப்ப அரைக்காம முழுசா சேர்த்து இருக்காங்க சுகி.
கலக்குறீங்க பவி
ஹாய் பவி மிகவும் வித்தியாசமான குறிப்பாய் கொடுத்து அசத்துறீங்க பா...
வினோ சொல்றா மாதிரி புளி சேர்த்து அரைப்பது புதுமையா இருக்கு.விருப்பபட்டியலில் சேர்த்தாச்சு.முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்கிறேன் பவி.
வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
என்றும் அனுபுடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
பவித்ரா..
தோசை டெக்கரேசன் ரொம்ப அழகா இருக்கு..
தோசை சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்.. விரைவில் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.. அன்புடன் ருக்சானா..
வாழு, வாழவிடு..
பவி
சூப்பர் எக்ஸ்ப்ரஸ் வேகத்ல உன் குறிப்புகள் வந்துட்டிருக்கு. எல்லாமே ஈசி யாக
வும் இருக்கு. நாளை டிபனுக்கு கேரட் தோசைதான்.
பவி
கேரட் தோசை சூப்பரா இருக்கு பவி கேரட் சாப்பிடாதவங்களுக்கு இத பன்னி குடுத்தா சாப்ட்டுட்டே இருப்பாங்க போல இதுல சத்துக்களும் நிரைய இருக்குன்னு நினைக்கிரேன் சூப்பர் பா
அன்புடன்
ஸ்ரீ
பவி
பவி, இனிமே உன்னை இட்லி-தோசை பவின்னு தான் கூப்பிட போறேன். ஏன்னா, உன்னோட குறிப்புகள் பெரும்பாலும் இட்லி - தோசைய சுத்தியே இருக்கு. கேரட் தோசை வித்தியாச முயற்சி பா. இந்த முறை நான் இப்ப தான் கேள்விபடுறேன் பவி. ரொம்பவும் நல்ல, சத்தான குறிப்பு. இனிமே உன்னை ஆரோக்கிய குறிப்பு பவின்னும் கூப்பிடலாம். வாழ்த்துக்கள் பா. :) தோசையை விட தோசைல உன்னோட முகத்தை வரைஞ்சிருக்கே பாரு, அங்கேதான் நிக்குற பவி ;)))
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
பவி
கேரட்ன்னு பார்த்தவுடன் பவிதான்னு நினைத்தேன் அதுசரிதான் கலக்கல் பவி கூடியசீக்கிரம் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்டா
பவி
பார்க்க அடை போல் அருமையாக இருக்கு.அலங்காரம் தூள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்கு நன்றி:)) தாமதமான நன்றிக்கு மன்னிச்சு;((
அன்புடன்
பவித்ரா
சுகி வாங்க
சுகி வாங்க, மிக்க நன்றி சுகி. கடலை பருப்பு அப்படியே சேர்க்கனும் என்பதை தான் படத்தோடு காமிச்சிருக்கேனே சுகி, அப்புறம் எப்படி உங்களுக்கு சந்தேகம் வரலாம்??? ட்யூப் லைட்டு. செய்து பார்த்துட்டு சொல்லுங்க
அன்புடன்
பவித்ரா
வினோ
வாங்க வினோ:) யாழுக்கு அடுத்து கணக்கு பிள்ளை நீங்க தான் வினோ:) 21 கொடுத்தாச்சு, நாலு தான் கஷ்டமா இருக்கு வினோ, ட்ரை பண்றேன்:)உங்க வாழ்த்துக்கு நன்றி:) என் வாழ்த்து அனைத்தும் என் தோழியை தான் சேரும்.
சுகியின் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கும் நன்றி
அன்புடன்
பவித்ரா
பவி
பவி,ரொம்ப வேகமா குறிப்புகள் கொடுத்துட்டு வர்றீங்க!!!!பாராட்டுக்கள்.நான் பதிவு போடறதுக்கே எவ்வளவு லேட்டா வர்றேன்???பவி,கேரட் தோசை புதுசா இருக்கு பவி.நான் கேரட் அவ்வளவா சாப்பிடமாட்டேன்.உங்க குறிப்பு வித்தியாசமா இருக்கு.அதுக்காகவே செஞ்சு பார்க்கனும் போலிருக்கு.எபபடியும் டேஸ்ட்டா இருக்கப்போகுது,இப்பவே நன்றியையும்,பாராட்டையும் சொல்லிக்கிறேன் ஒரு அருமையான ரெசிபி கொடுத்ததற்கு.மிக விரைவில் ஸ்டார் வாங்கவிருக்கும் கலக்கல் பவிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
அன்புடன்
நித்திலா
அப்பு
அப்ஸ், கேரட் தோசையில் புளிப்பு இருக்காது, அதுவும் இந்த தோசை அரைத்த உடனே ஊற்றுவதால் புளிப்பு வேண்டும் என்பதற்காக சிறிது புளி சேர்த்துள்ளேன். விருப்பபட்டியலில் சேர்த்ததற்கும் நன்றிகள்:) முடியும் போது செய்து பாருங்க. நன்றி
அன்புடன்
பவித்ரா
ருக்சானா
நன்றி ருக்சானா. கேரட் அதிகமா வாங்கிடேன், அதான் இந்த டெக்கரேஷன்:) எனக்கு பிடித்த தோசை. நன்றி
அன்புடன்
பவித்ரா
கோம்ஸ்
என்னாச்சு, செய்தீங்களா:) பிடிச்சிருந்ததா?? வந்து சொல்லுங்க கோம்ஸ்:) குறிப்புகளை சீக்கிரம் செய்து பார்க்கும் தோழிகளில் நீங்களும் ஒருவர். நன்றி கோம்ஸ்
அன்புடன்
பவித்ரா
ஸ்ரீ
நன்றி ஸ்ரீ. கேரட் சாப்பிடாதவங்களுக்கும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கேரட்டின் சுவை அவ்வளவாக தெரியாது. என்ன என்று சொல்லாமல் கொடுத்து பாருங்க, கண்டு பிடிப்பது சிரமம்:) கேரட்டில் சத்தில்லாமலா?? நன்றி ஸ்ரீ
அன்புடன்
பவித்ரா
கல்ப்ஸ்
வாங்க கல்ப்ஸ்:) பட்ட பெயர் வச்சிட்டீங்களா?? எனக்கு டிபனின் விதவிதமா செய்தால் தான் இறங்கும் கல்ப்ஸ்:) அதற்காகவே எதையாவது போட்டு செய்வேன். நான் அவ்வளவு அழகாவா இருக்கேன் கல்ப்ஸ்:) நேக்கு வெட்கமாருக்கு
அன்புடன்
பவித்ரா
பாத்திமாம்மா
கேரட் என்றவுடன் கண்டுபிடிச்சுட்டீங்களே!! அதான் அம்மாங்கறது. நன்றிம்மா:)
அன்புடன்
பவித்ரா
ஆசியா
உங்ககிட்ட இப்ப தான் முதல் முறையா பேசறேன். மிக்க நன்றி:) மிக்க மகிழ்ச்சி:)
அன்புடன்
பவித்ரா
நித்தி
நீங்க பதிவு போட ஒண்ணும் லேட் ஆகலை நித்தி, நான் தான் லேட்டா வந்திருக்கேன். கேரட் மிக சத்துள்ள ஒரு காய் நித்தி, பிடிக்கலை என்றாலும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க. இல்லைன்னா ஜூஸ் பண்ணியாவது குடிங்க நித்தி. உடலுக்கு சத்தானது. வாழ்த்துக்கு நன்றி நித்தி:)
அன்புடன்
பவித்ரா
கொஞ்சம் சிரிச்சிருக்கலாம்
பவி... கேரட்டில் தோசை புதுசா இருக்கு. செய்து பார்த்துடலாம் குழந்தைங்களுக்கு நல்லதாச்சே. அதெல்லாம் சரி... அதென்ன கடைசியில தோசை படம் போடாம உங்க படம் போட்டிருக்கீங்க??? அழகா தான் இருக்கீங்க... கொஞ்சம் சிரிச்சிருக்கலாம். :) [கோவிச்சுக்காதீங்க... சும்மா விளையாட்டுக்கு]
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
ஹாய் வனி, ரொம்ப நன்றி வனி:)குழந்தைகளுக்கும் நல்லது தான். நான் கொஞ்சம் ஓட்டை வாய் வனி, அதனால தான் நிறையவே சிரிச்சிட்டேன்:)))))))))) வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்
அன்புடன்
பவித்ரா