தேங்காய் உருளைக்கிழங்கு முட்டைகறி

தேதி: April 14, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 6
உருளைக்கிழங்கு - 100 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
எலுமிச்சம் பழம் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
பச்சை மிளகாய் - 8
கடுகு - அரை தேக்கரண்டி
நெய் - 25 கிராம்
கொத்தமல்லித் தழை - 4 கொத்து
கறிவேப்பிலை - 4 கொத்து


 

முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு முட்டை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வவக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை நான்கு தூண்டுகளாக போட்டு உருளைக்கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, தோலை உரித்துக் கொள்ளவும்.
அதே போல் முட்டை வெந்ததும் முட்டையின் ஓட்டை நீக்கி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, முந்திரி போட்டு சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
பிறகு அதில் முட்டை, உருளைக்கிழங்கு, தேங்காய் துருவல், மஞ்சளதூள், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 5 நிமிடம் நன்றாக பிரட்டி பிறகு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்