சேப்பங்கிழங்கு வறுவல்

தேதி: December 20, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

சேப்பங்கிழங்கு - அரை கிலோ
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 கரண்டி
சோம்பு தட்டியது - ஒரு தேக்கரண்டி


 

சேப்பங்கிழங்கை நன்றாக கழுவி விட்டு இட்லி தட்டில் ஆவியில் வைத்து வேக வைக்கவும் .
வெந்ததும் தோலை உரித்து விட்டு வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு போட்டு தாளிக்கவும்.
அதில் நறுக்கின சேப்பங்கிழங்கு, மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
மீதம் இருக்கும் இன்னொரு கரண்டி எண்ணெயையும் சேர்த்து முறுவலாகும் வரை வைத்து இறக்கவும்.
சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி. இது மோர் குழம்பு, ரசமுடன் சாப்பிட நன்றாக பொருந்தும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பு சூப்பர். நானும் இப்படிதான் செய்வேன். ஆனால் சோம்பு சேர்க்க மாட்டேன்
வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு,படங்களும் தெளிவா இருக்கு,வாழ்த்துக்கள்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முதல் ஆளாக வந்து பின்னூட்டம் கொடுத்தர்க்கு நன்றி மஞ்சு:)

ரீம் உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா! பாக்கவே சூப்பர்ராயிருக்கு. சிம்புள்ளா இருக்கு நான் செய்து பாத்துட்டு சொல்லுரேன். வாழ்த்துக்கள்...

உன்னை போல பிறரையும் நேசி.

வித்தியாசமான வறுவல் தான். கலர் பாத்தா பலாபழம் சிப்ஸ் மாதிரி இருக்கு. கண்டிப்பா பண்ணி பாத்துட்டு சொல்றேன். மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஆஹா...,ஸ்வர்ணா..... பார்க்கும் போதே நா ஊறுகின்றது பா....
ரொம்ப சூப்பராக இருக்கு.இப்போதைக்கு எனக்கு சேப்பங்கிழங்கு கிடைக்கலையேன்னு வருத்தமா இருக்கு.
எப்போது என் கைக்கு கிடைத்தாலும் இந்த குறிப்பை நிச்சயம் செய்து பார்த்து விடுவேன்.எனக்கு இந்த கிழங்கு அவ்வளவு பிடிக்கும் ஸ்வர்ணா....
இந்த கிழங்கை குக்கரில் தான் வேக வைப்போம்.நீங்கள் ஆவியில் வேக வைப்பது சற்றே வித்தியாசமாக உள்ளது.அதற்க்கு ஏதும் காரணம் உண்டா...?
இது போன்று இன்னும் நிறைய குறிப்புகளை கொடுக்க வேண்டும்.

வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் ஸ்வர்ணா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நன்றி தேவி:) எனக்கு மிகவும் பிடித்தமான வறுவல்ப்பா.

நன்றி சுகி:) ரொம்ப ஈசியானதுதான் செய்து பாருங்கள்

வாழ்த்துகளுக்கு நன்றி அப்சரா.குக்கரில் வைத்தால் குழைந்துவிடும்,ஆவியில் வைத்தால் பார்த்து பதமாக எடுக்கலாம்,ஏன் என்றால் சேப்பங்கிழங்கு வழவழப்பு தன்மை உடையதால் நறுக்குவதர்க்கு எளிதாக இருக்கும்,சீக்கிரமாக முறுவலாகும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்,என்னடா சாட்ல பொண்ணை காணோமேனு யோசிச்சிட்டிருந்தேன்.
சமையல் வேலை நடக்குதா??போட்டோஸோட வர்ற முதல் குறிப்பு.வாழ்த்துக்கள்,ஸ்வர்.போட்டோஸ்,விளக்கம்,அருமை.டேஸ்ட்டும் அருமையாயிருக்கும்னு நினைக்கிறேன்.சேப்பங்கிழங்கு வறுவல் சாப்பிட்டதில்லை.சாப்பிட்டு பார்க்கிறேன்,ஸ்வர்.நிறைய நிறைய குறிப்புகள் கொடுத்து அசத்த வாழ்த்துக்கள்,ஸ்வர்.

அன்புடன்
நித்திலா

சுவர்ணா சேப்பங்கிழங்கு புளி சேர்க்கவில்லை என்றால் தொண்டை நமநம என்று அரிக்குமே.

வாழு இல்லை வாழவிடு

சுவா, சேப்பங்கிழங்கு வறுவல் ரொம்ப நல்லாருக்கு பா. படங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. சேப்பங்கிழங்கு இல்லாத ஊர்ல இருந்துட்டு உங்கள மாதிரி கோழிகள் சமைச்சு அனுப்பின படத்தை பார்த்துட்டே சாப்டுக்க வேண்டியது தான் :) தொடர்ந்து இதே மாதிரி குறிப்புகளை அனுப்பிட்டே இருங்க :) வாழ்த்துக்கள் பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்கள் சுவர்ணா..
சேப்பங்கிழங்கு வறுவல் நான் சாப்பிட்டது இல்லை.. செய்து சாப்பிட்டு பார்க்கிறேன்.நன்றி...

வாழு, வாழவிடு..

ஸ்வர்ணா, முதல் விளக்கப்பட குறிப்பு பார்க்கும் போதே, வாசனை கம கம’னு அடிக்குதுப்பா:) வாழ்த்துக்கள், தொடர்ந்து பல குறிப்புக்கள் கொடுக்க மனமார வாழ்த்துகிறேன். என் அம்மாவும் இப்படி தான் செய்வாங்கன், ஆனா அப்பு சொன்ன மாதிரி குக்கரில் தான் வேக வைப்பாங்க, நறுக்க கஷ்டமா இருக்கும்ப்பா, அம்மாக்கிட்ட சொல்றேன் ஸ்வர்ணா:) ஒரே ஒரு சந்தேகம்ப்பா, இந்த கிழங்கு நாக்கு அரிக்குமா, வாங்கி சிலநாள் கழித்து தான் செய்யனுமா இல்லை, உடனேயே செய்யலாமா??

அன்புடன்
பவித்ரா

வாழ்த்துகளுக்கு நன்றி நித்தி.சாப்டு பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க
எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி நீங்க சொல்லிதான் "நமநம" கேள்வியே படுறேன்ப்பா நான் இதுவரை புளிசேர்த்ததே இல்லைப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி கல்ப்ஸ்:) ஆமாம் உங்களுக்கு அங்க கிடைக்காதுல்ல நான் செய்து அனுப்பினத சாப்டு மனசை தேத்திங்கோங்க:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி ருக்சானா சாப்டு பாருங்க நல்லாருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பவி ரொம்ப நன்றிப்பா:) இந்த முறையில் செய்து பாருங்கப்பா நல்லாருக்கும்
சேப்பங்கிழங்கு நாக்கு அரிக்கவே அரிக்காதுப்பா.வாங்கிய உடனேயும் செய்யலாம் ஒரு மாதம் வரை வைத்துகூட செய்யலாம் கெட்டுப்போகாது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் பா நானும் இப்படி தான் செய்வேன் பா நானும் சோம்பு சேர்க்க மாட்டேன் பா . சூப்பரா இருக்கும்

அன்புடன்
ஸ்ரீ

ஸ்வர்ணா உங்க முதல் குறிப்பா வாழ்த்துக்கள். சேப்பங்கிழங்கை இட்லிப்பானையில் வேக வைத்து செய்ததது இல்லை. உங்கள் முறைப்படி ஒரு முறை செய்துப் பார்க்கிறேன். படங்களும் அருமையாக உள்ளது.

ஸ்வர்ணா முதல் குறிப்பா அசத்தலா இருக்கு. படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா எடுத்து இருக்கீங்க. எங்க வீட்டிலும் இப்படி தான் செய்வோம் ஆனா சோம்பு தாளித்தது இல்லை. வாழ்த்துக்கள் ஸ்வர். தொடர்ந்து குறிப்புகளை பகிர்ந்துக்கோங்க

சூப்பரா இருக்கு எனக்கு அதிகம் இது கிடைப்பதில்லை ..கிடைக்கும்போது செய்து

சொல்கிறேன்..நல்ல குறிப்புக்கு வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றி ஸ்ரீ.சோம்பு சேர்த்து செய்து பாருங்க நல்லா வாசனையா இருக்கும்ப்பா.

நன்றி வினோ.படத்துடன் அனுப்பிய முதல் குறிப்பு இதுதான்ப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நன்றிப்பா.இன்னு நிறைய குறிப்புகள் அனுப்புகிரேன் பா.
///படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா எடுத்து இருக்கீங்க////
எடுத்தது என்னவராச்சே:)

நன்றி இளவரசி(நடுவரே)கிடைக்கும்போது செய்து பாருங்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாக்கவே நல்லா இருக்குன்னு தோணுது!!

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சுவர்ணா... இன்று மதியம் இதை செய்தாச்சு. வெளிய போயிட்டு வந்து சாப்பிட்டதே 7 மணிக்கு தான் ;( அதான் பின்னூட்டமும் தாமதம்.

சோம்பு போட்டு தாளிச்சதும் வித்தியாசம், இட்லி பாத்திரத்தில் வேக வைத்ததும் வித்தியாசம். ரொம்ப பிடிச்சது எல்லாருக்கும். சுலபமான நல்ல குறிப்பு. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்களுக்கு நன்றி ஆமினா. சாப்பிடவும் நல்லாருக்கும்:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி வனி.எல்லாருக்கும் பிடிச்சதில் எனக்கு மிக்க சந்தோசம்:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல பக்குவம் இது,ஆனால் சோம்பு சேர்ப்பது புதுசு.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ந்ன்றி ஆசியா உங்களுக்கு பிடிச்சிருந்தததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.