சாண்ட க்ளாஸ்

தேதி: December 20, 2010

4
Average: 3.8 (10 votes)

 

ஸ்பாஞ்ச் ஷீட் - சிவப்பு நிறம்
பேப்பர் கப் - ஒன்று
உல்லன் நூல் - வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்கள்
முட்டை - ஒன்று
பெவிக்கால்
காட்டன்
ப்ரஷ்
பேப்பரிக் பெயிண்ட் - ப்ரெளன், வெள்ளை, பிங்க், சிவப்பு மற்றும் கருப்புநிறங்கள்
கத்தரிக்கோல்
வெள்ளைநிற ஸ்டோன் - 5
வெள்ளைநிற தெர்மாக்கோல் பால்ஸ் - ஒன்று
சைனிங் பேப்பர் - வெள்ளை, பச்சை நிறங்கள்
கலர் செல்லோ டேப் - மஞ்சள், பிங்க்
சிவப்புநிற துணி
கோல்டன் கம்பி - 10 செ.மீ
சாட் பேப்பர்
ஐஸ்க்ரீம் ஸ்டிக் - ஒன்று
ஐஸ்க்ரீம் ஸ்பூன் - 2
5 செ.மீ நறுக்கிய தெர்மாக்கோல் துண்டு - ஒன்று
சிறிய பெல் - ஒன்று
குண்டூசி

 

சாண்ட க்ளாஸ் மற்றும் கிறிஸ்மஸ் ட்ரீ செய்வதற்கு மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பேப்பர் கப்பின் சுற்றளவு தகுந்தாற் போல் ஸ்பாஞ்ச் ஷீட்டை அளந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஸ்பாஞ்ச் ஷீட்டை கப்பை சுற்றி ஒட்டிக்கொள்ளவும்.
சாட் பேப்பரையும், ஸ்பாஞ்ச் ஷீட்டையும் 10 செ.மீ அளவில் சதுர துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சாட் பேப்பரின் மேல் பெவிக்கால் தடவி ஸ்பாஞ்ச் ஷீட்டை ஒட்டவும்.
பின்னர் கூம்பு போல் சுருட்டி ஓரங்களை பெவிக்கால் தடவி காயவிடவும். இதனை முட்டையில் தொப்பியாக வைத்து பார்த்து, இதன் அடிப்பக்கங்களை தேவையான அளவு வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
முட்டையில் கழுவி சுத்தம் செய்து காய்ந்ததும் வெள்ளை மற்றும் பிங்க நிற பெயிண்டை சேர்த்து லைட் பிங்க் நிறமாக கலந்து கொள்ளவும். லைட் பிங்க் நிறத்தை முட்டையில் முழுவதும் பெயிண்ட் செய்து காயவிடவும். பெயிண்ட் காய்ந்ததும் முட்டையை அகலவாக்கில் வைத்து செய்து வைத்திருக்கும் தொப்பியை அதன் மேல் வைத்து ஒட்டவும்.
ஸ்பாஞ்ச் ஷீட் ஒட்டிய பேப்பர் கப்பின் அடியில் வெள்ளைநிற உல்லன் நூலை இடைவெளி இல்லாமல் நெருக்கமாக 5 சுற்றுகள் சுற்றி எடுத்துக் கொள்ளவும். அதேப்போல் தொப்பியின் அடியிலும் 5 சுற்றுகள் சுற்றவும். கப்பின் மேல் பக்கம் பெவிக்கால் தடவி இந்த முட்டையை ஒட்டிக்கொள்ளவும்.
பின்னர் காட்டனை முட்டையின் இரு ஒரங்கள் முழுவதும் ஒட்டவும். முட்டையின் அடியின் அகலத்துக்கேற்ப காட்டனை தாடிப்போல் நறுக்கி ஒட்டவும். காட்டனை மெல்லியதாக முறுக்கி மீசைப்போல் ஒட்டவும். கறுப்பு நிற பெயிண்டால் கண், மூக்கு வரையவும். வாய்க்கு சிவப்புநிற பெயிண்டால் ஓவல் வடித்தில் வரைந்துக் கொள்ளவும். தொப்பியின் உச்சியில் தெர்மாக்கோல் பால்ஸ் ஒன்றை ஒட்டவும், அதன் கீழ் வெள்ளைநிற ஸ்டோனை ஒட்டிக் கொள்ளவும்.
பேப்பர் கப்பின் அடியிலிருந்து 2 செ.மீ இடைவெளி விட்டு கறுப்பு நிற உல்லன் நூலை 4 சுற்றுகள் சுற்றவும். நடுவில் வெள்ளைநிற ஸ்டோனை ஒட்டவும்.
காட்டனை 6 செ.மீ நீளம், 2 செ.மீ அகலத்திற்கு 2 துண்டுகள் நறுக்கி உருளை வடிவில் நீளமாக உருட்டிக் கொள்ளவும். ஸ்பாஞ்ச் ஷீட்டை 5 1/2 செ.மீ நீளம், 6 செ.மீ அகலத்தில் 2 துண்டுகள் நறுக்கவும். ஒரு ஸ்பாஞ்ச் ஷீட்டில் இந்த காட்டனை வைத்து 1/2 செ.மீ அளவு காட்டன் வெளியே தெரிவது போல் வைத்து, இரண்டாக மடித்து ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும். மற்றொரு கையும் இதுப்போல் செய்யவும்.
சிவப்புநிற துணியை சிறிய மூட்டைபோல் செய்து அடியில் கம்பியை கொண்டு சுற்றிக் கொள்ளவும். மீதம் தெரியும் கம்பியை செல்லோ டேப்பால் சுற்றவும். 10 செ.மீ அளவில் மெல்லிய குச்சியில் கோல்டன் நிற செல்லோ டேப்பால் சுற்றவும். சாட் பேப்பரில் ஸ்டார் போன்று வரைந்து நறுக்கி எடுத்து கொள்ளவும். வெள்ளைநிற சைனிங் பேப்பரிலும் இந்த ஸ்டார் வடிவத்தை வரைந்து நறுக்கி எடுத்து இரண்டையும் ஒட்டிக் கொள்ளவும். செல்லோ டேப் சுற்றிய குச்சியின் முனையில் இந்த ஸ்டாரை ஒட்டிக்கொள்ளவும்.
கப்பின் இருப்புறங்களிலும் செய்து வைத்திருக்கும் கைப்பகுதியை ஒட்டவும். தலையின் வலது பின்புறத்தில், சிவப்புதுணியில் சுற்றிய கம்பி உள்ளே நுழையும் அளவிற்கு கப்பில் துளையிட்டு மூட்டையுடன் கூடிய கம்பியை சிறிது வளைத்து வெளியே தெரிவதுபோல் சொருகி வைக்கவும்.
இடதுப்புறத்தில் உள்ள கையை படத்தில் உள்ளது போல் மடித்து பெவிக்கால் தடவி ஒட்டிக்கொள்ளவும். மடித்த கையின் உள்ளே ஸ்டார் செய்த குச்சியை சொருகி விடவும். வலது கையில் காட்டன் தெரியும் இடத்தில் பெல்லை பெவிக்கால் வைத்து ஒட்டவும். கையில் ஸ்டார், கிஃப்ட் பை, பெல் வைத்துக்கொண்டு அசத்தலான அழகிய சாண்ட க்ளாஸ் ரெடி.
இதே கிறிஸ்மஸ் தாத்தாவின் கைகளுக்கு பதிலாக ஸ்பூன் வடிவில் உள்ள ஐஸ்க்ரீம் குச்சியை பயன்படுத்தி செய்யும் முறை. இரண்டு ஐஸ்க்ரீம் ஸ்பூனில் நுனியில் ஒரு செ.மீ அளவில் லைட் பிங்க் நிற பெயிண்ட்டும், அதன் கீழ் 2 செ.மீ வெள்ளைநிற பெயிண்ட்டும், மீதமுள்ள இடங்களுக்கு சிவப்புநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
இந்த இரண்டு ஸ்பூன் அடியிலும் கால் இன்ச் இடைவெளிவிட்டு குண்டூசியை குத்திக் கொள்ளவும். பேப்பர் கப்பின் இருப்புறங்களிலும் கைகளாக ஐஸ்க்ரீம் ஸ்பூனில் குத்திய குண்டூசியை சொருகி விடவும்.
கிறிஸ்மஸ் ட்ரீ செய்வதற்கு சைனிங் பேப்பரை முக்கோணத்தில் வடிவில் உங்களுக்கு தேவையான அளவு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பெரியது, சிறியது, நடுத்தர அளவு என மூன்று துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஐஸ்க்ரீம் ஸ்டிக் அடியில் ஒரு செ.மீ இடைவெளிவிட்டு ப்ரெளன்நிற பெயிண்டை அடிக்கவும். அந்த பெயிண்டிற்கு மேல் முதலில் சிறிய முக்கோணத் துண்டு பேப்பரை ஒட்டவும். அந்த பேப்பரின் முனையில் நடுத்தர அளவு பேப்பரை ஒட்டவும். அடுத்து பெரிய அளவு பேப்பரை ஒட்டி முடிக்கவும். ஒவ்வொரு பேப்பரின் நடுவிலும் ஸ்டோனை ஒட்டிக்கொள்ளவும். கனமான அட்டை மற்றும் தெர்மாக்கோல் ஷீட் இரண்டையும் 4 நீளம் செ.மீ X 3 செ. மீ அகலம் என்ற அளவில் வெட்டி இரண்டையும் ஒட்டிக்கொள்ளவும். தெர்மாக்கோலில் ப்ரெளன் நிற ஃபேப்பரிக் பெயிண்ட் அடித்து காய்ந்ததும் இந்த ட்ரீயை சொருகி வைக்கவும்.
வரவிருக்கும் கிறிஸ்மஸ் நன்னாளில் நம் அனைவருக்கும் பரிசளிக்க உங்கள் இல்லம் தேடி சாண்ட க்ளாஸ் வந்து இருக்கிறார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரேவதி, பத்மா... ஒன்னுத்துக்கும் ஒதவாதுன்னு நினைக்கும் பொருளை எப்படி அழகாக்குறதுன்னு உங்ககிட்ட நான் டியூஷன் எடுத்துக்க வரேன். அவ்வளவு அழகு. நீங்க பயன்படுத்தியது என்ன பொருள்'னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அழகா இருக்கு. பாராட்ட வார்த்தை இல்லை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்வீட் சான்டா.

‍- இமா க்றிஸ்

எல்லாம் வந்தாச்சு......இன்னும் கிறிஸ்துமஸ் பண்டிகை மட்டும் தான்......santa is adorable.....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

your santa is very nice.keep it up. advanced merry christmas and a happy new year. with regards g.gomathi.

சாண்ட க்ளாஸ் ரொம்ப சூப்பரா இருக்காரு. என்ன அடுத்தடுத்து கிறிஸ்துமஸ் சம்பந்தமான க்ராப்ட்டே வருது. பாராட்டுக்கள்

ரொம்ப சூப்பர், அருமையான கைவேலை, பத்மா, ரேவதி, பாப்பிக்கு க்ளாப்ஸ், க்ளாப்ஸ்,க்ளாப்ஸ்.
இதில் பிளாஸ்டிக் டம்ளர் ஐடிய யாரு பாப்பியா?

ஜலீலா

Jaleelakamal

வாவ்..ரொம்ப ரொம்ப cute ஹ அழகா இருக்கு. பாத்தாலே பண்ணனும்ன்னு ஆசையா தான் இருக்கு, அறுசுவை டீம் க்கு பெரிய தேங்க்ஸ். மேலும் கலக்க வாழ்த்துக்கள்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அறுசுவை டீம் சூப்பர்!!!!!!!!! கண்டிப்பா நான் செய்துபார்க்குறேன்.

உன்னை போல பிறரையும் நேசி.

இதை விருப்ப பக்கமாக தேர்தெடுக்க முடியுமா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ப்ரின்ட் பண்ணி வச்சுக்கங்க. இல்லாட்டா புக்மார்க் பண்ணி வைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

nice சாண்ட க்ளாஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta