Electric Stove ( Induction Stove )

அன்பு தோழிகளே வணக்கம்
எனக்கு ஒரு சந்தேகம் நான் மின் அடுப்பு வங்காளம் என உள்ளேன்
ஒரு சீலின்டார் வைத்து கொண்டு ரொம்ப கஸ்டமா இருக்கு

உங்கள் கருத்து சொல்லுங்கள்

அன்புடன்
பாரதி

பாரதி... Induction Stove வாங்கலாம். நாங்க இப்போ தான் சமீபத்தில் வாங்கினோம். உபயோகமா இருக்கு, வேகமா சமையல் ஆகுது. அதுகுன்னு வரும் பாத்திரங்கள், இல்லை ஃப்ளாட் பாட்டம் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரம் வேண்டும். மற்றபடி பயன்படுத்துவது சுலபம் தான். கிட்டவே இருந்து பார்க்கணும். வெச்சுட்டு போனா பொங்க, தீய வாய்ப்பு இருக்கு. நாங்க வெச்சிருக்குறது Prestige PIC 3 Model. ஒழுங்கா பராமரிச்சா நல்லா உழைக்கும்'னு சொல்றாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

barathi vanitha sonathupola induction cooker nallam.neram labam.nan pavikeran.prestige non stick utensils ippam kadail kidaikum.aanal costly.steelcooker villa 2000 roopa.nonstick frying pan 300 roopak kidaikum.jameela

Prestige Induction stove வாங்கினா பாத்திரம் வாங்க வேண்டாம். அதில் வரும் எந்த மாடல் வாங்கினாலும் அதில் பயன்படுத்தும் பாத்திரம் நான்ஸ்டிக் 3 உள்ள செட் இலவசமாவே வருது. விலை 3500 - 5000 வரை தான் எல்லா மாடலும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் சமீபத்தில்தான் ப்ரெஸ்டிஜ் ஸ்டவ் வாங்கினேன். அதில் தரும் இலவச நான்ஸ்டிக் பாத்திரம் வேண்டாம்னு சொல்லிட்டோம்(கொஞ்சம் டிஸ்கவுன்ட் தர்றாங்க). இண்டக்‌ஷன்/காஸ் அடுப்பு இரண்டிலும் உபயோகிக்கிற ப்ரெஸ்டிஜ் குக்கர் வாங்கினேன். குக்கர், இண்டக்‌ஷன் ஸ்டவ் இரண்டுமே சேர்த்து, 3700 ரூபாய் ஆனது. ரொம்ப வசதியாக இருக்கு இந்த அடுப்பு. ஆனா, வனிதா சொன்ன மாதிரி, பக்கத்துலயே நிக்கணும். இல்லன்னா, பொங்கிடும், தீஞ்சுடும். அவ்வளவு வேகமா வேலை ஆகுது.

அன்புடன்

சீதாலஷ்மி

எந்த கடையில் வாங்கீனீங்க ?நானும் வாங்கணும் ப்ளீஸ்..

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

கரண்ட் அதிகமாகுமா நானும் ஒரு சிலிண்டர் தான் வச்சிருக்கேன் ஷாக் அடிக்காதுல

ஜெயா, ஜகிதா... எல்லா ப்ரெஸ்டீஜ் ஷோரூம்'லையும் கிடைக்கும். வெளிய வாங்கினாலும் விலையில் வித்தியாசம் இல்லை. அந்த ஷோரூம்'லயே வாங்கினா செர்வீஸ் நல்லா இருக்கும். ஷாக்கெல்லம் அடிக்காது. கரன்ட்டும் அதிகமா பிடிக்காதுன்னு தான் சொல்றங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாரதி அவர்களே நான் HP காஸ் இணைப்பு வைத்துள்ளேன் வாங்கும் போதே இரண்டு சிலிண்டேருடன் காஸ் இணைப்பு உடனடியாக கிடைத்தது. அதன் விலை
Rs.7000/-. ஒரு காஸ் ஸ்டவ் அதன் மற்ற உபகரணங்களும் இலவசமாக ஒரு
10 லிட்டர் குக்கரும் கிடைத்தது. மேலும் காஸ் தீர்ந்த சிலிண்டரை மாற்ற 30 நாட்களுக்கு பிறகு அதாவது கடைசியாக வாங்கி 30 நாள் ஆன பிறகு அவர்களின் DOT எண்ணுக்கு போன் செய்து புக் செய்யும் பொது அவர்கள் புதிய சிலிண்டரை மாற்றும் தேதியை குறிப்பிடுவார்கள். நாமும் அத் தேதியில் சென்று சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம்...
(குறிப்பு: Ration Card, Passport Size Photo 2, ID Proof தேவை)

hi vanitha nan induction stove prestige ippa than vanginen. but cookerla parupu vaithu 3 whistle vandadu. piragu cooker volve poiduchu nan udane niruthiten.
enaku eppadi handle panradunu sariya theriyala. konjam explain pannunga pls

Do or die

Dயர் ஆல்,

இன்டக்ஷன் ஸ்டவில் வடை ,பூரி, பொறிக்க முடியுமா?,பொங்கல்,உப்மா,தோசை,அனைத்தும் செய்ய முடியுமா? தயவு செய்து
கூறவும்.

Mother's Grace.

மேலும் சில பதிவுகள்