கலவை மீன் குழம்பு

தேதி: December 21, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (7 votes)

 

சங்கரா, ஊடம் காரப்பொடி, பாறை மீன் எல்லாம் சேர்ந்து - அரைக் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிது
நறுக்கின வெங்காயம் - சிறிது
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒருதேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
சீரகத்தூள் - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
புளி - எலுமிச்சை அளவு


 

மீனை நறுக்கி சுத்தப்படுத்தி வைக்கவும்.
மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைக்கவும்.
சீரகத்தை கடாயில் வறுத்து அதனுடன் வெங்காயம், இரண்டு தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
புளியை கரைத்து அதனுடன் மல்லித்தூள், உப்பு, மல்லி இலை, ஒரு தக்காளி சேர்த்து பிசைந்து கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.
அதனுடன் மிளகாய்தூள் மற்றும் அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் புளிக்கரைசலை கடாயில் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும். அதன் பிறகு மீனை போட்டு ஒரு கொதி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அம்மா, ப்ரெஷ் மீன் கிடைக்காத எங்கள போன்ற ஆட்களுக்கு நீங்க படத்தோட பண்ண குறிப்பு கலவை மீன் குழம்பு சிறந்த வரப்பிரசாதம்ங்கம்மா. படங்களை பார்க்கும் போதே வாசனை தூக்குது. இன்னும் சாப்பிட்டா எப்படி இருக்கும்? ஆனாலும், மாத்தி மாத்தி எங்கள பார்க்க வச்சு கொடுமை படுத்த கூடாது. நாங்க பாவம்ல. அம்மா, இந்தியா வந்தவுடனே உங்க வீட்டுக்கு வந்து உங்க கையாலயே இந்த குழம்பு வைக்க சொல்லி சாப்பிட்டு வர போறேன் :) வாழ்த்துக்கள்ங்கம்மா. தொடர்ந்து ஜொள்ளு ஊத்த வைங்க ;)))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

"சங்கரா, ஊடம் காரப்பொடி" அப்படினா என்னமா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சலாம் மாமி ஃபாத்திமா அவர்களே!இதனுடன் சுடசுட சோறு வச்சி அப்படியே எனக்கு ஊட்டி விட முடியுமா?!இந்த மாதிரி சமையல் எல்லாம் நாம் செய்து சப்பிடுவதை விட,பிறர் செய்து கொடுத்தால்.............ம்ம்ம்ம்ம்..........அபாரமாக இருக்கும்,செய்து பார்த்துட்டு சொல்ரேன்,ஒரே மாதிரி மீனில் செய்யலாமா?

Eat healthy

வாவ் என்ன சூப்பரா கொதிக்குது மீன் குழம்பு..
சாப்பிட்டா சுவை தூக்கும்.. வாழ்த்துக்கள் அம்மா..நன்றி

வாழு, வாழவிடு..

குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சாச்சா????

சொல்லவே இல்ல!!!!

வாழ்த்துக்கள் அம்மா!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கல்பா உனக்கு இல்லாததா உன் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிடா

அஸ்வதா சங்கரா,ஊடம்,காராப்பொடி இதெல்லாம் மீன்

வலைக்கும் சலாம் ரசியா

ரசியான்னு சொல்லவும் என் மச்சி ஞாபகம் வருது கண்டிப்பா ஊட்டிவிடுறேன் சென்னைக்குவந்தா ஒரே மாதிரி மீன்ல செய்யலாம் ஆனா எனக்கு கலவை தான் பிடிக்கும் ஒரே மீனை சாப்பிடாமல் எல்லா மீனையும் சாப்பிடலாம் மீனுக்கு மீன் ருசி வித்தியாசப்படும் செய்துட்டு சொல்லுங்கள்

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

ருக்சானா வ்ருகைக்கு நன்றிடா

ஆமி வருகைக்கு நன்றிடா (உன்னை பார்க்கவே முடியலைடா சாரிடா)

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவுக்கு என் நன்றி

சலாம் பாதிமம்மா,
ரொம்ப சூப்பரா இருக்கு.குட்டி மீன்கள் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம்.அதின் சுவையோ தனி.
வாழ்த்துகள்மா.

ஹசீன்

வலைக்கும் சலாம் ஹசினா வருகைக்கு நன்றிடா

சாலம் ஃபாத்திமா அம்மா. நாலை க்கு மின் அனம் தன் செய்யலம் நு இருதென் அன எண்ண மின் வாகுரது நு தெரியலா. நிங்க சொன்ன மின்ல எதவுது மின் வாகி வைக்க பொரென். செய்து பார்த்துட்டு சொல்ரேன்

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்திமா அவர்களே...?
தங்களின் மீன் குழம்பு பார்க்கும் போதே அசத்தலாக இருக்கு.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றது.
நானும் உங்கள் செய்முரை படிதான் செய்வேன்.
சங்கரா என்னுடைய விருப்பமான மீன்.
நீங்கள் கொடுத்திருக்கும் மீன் எல்லாம் குழம்பில் நல்ல ருசியை கொடுக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை.
எங்கள் வீட்டில் இது போன்ற கலவை மீன் குழம்பு தான் அடிக்கடி வைப்போம்.
வாழ்த்துக்கள் ஃபாத்திமா.....(உங்களை எல்லோரும் அம்மா என்று அழைக்கின்றனர்.தாங்கள் என்னைவிட வயதில் மூத்தவரா என்று தெரியவில்லை.அப்படி இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்.)

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கலவை மீன் குழம்பு பார்க்கவே சூப்பர்,ஆனால் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் தான் கொடுத்து உள்ளீர்கள்,இத்தனை பொருள் சேர்க்கும் பொழுது காரம் சரியாக வருமா?

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மீன் குழம்பு சூப்பர் மா அப்படியே வாசனை புடிச்சிகிட்டே உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கேன் பாருங்க அம்மா

அன்புடன்
ஸ்ரீ

வலைக்கும் சலாம் ரினோ செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

வலைக்கும் சலாம் அப்சரா கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
(ஆமி வயதுல எனக்கு ஒரு பெண் இருக்கா ஒரு வய்துல ஒரு பேத்தி இருக்கா)நம்ம சமூகத்தில் சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுத்திடுவாங்கல்ல அதனால சீக்கிரம் பேத்தி எடுத்துவிட்டேன் நான் பொறந்த வருசம் (71)இப்போ தெரிந்து இருக்கும்ன்னு நினைக்கிறேன்

சலாம் அலைக்கும் ஆயிஷா நான் கம்மியாதான் சேர்த்தேன் தேவையெனில் கூட்டிக்கொள்ளலாம்(நான் காரம் ரொம்ப சேர்ப்பேன் இப்போ உடம்புக்கு ஒத்துக்கொள்வது இல்லை) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்ரீ வருகைக்கு நன்றி (வாங்க,வங்க)

எனக்கு ரொம்ப பிடித்த சங்கரா மீன் குழம்பு அருமை தோழி, நானும் காரம் கம்மியா தான் பயன் படுத்துவேன், இந்த அளவு சரியாக இருக்கும்.
காரம் சுல்லுன்னு சாப்பிடுபவர்கள், இன்னும் முக்கால் தேக்கரண்டி அதிகம் போட்டு கொள்ளலாம்.
ஜலீலா

Jaleelakamal

அம்மா,பார்த்தவுடனேயே நீங்கதான்னு நினைச்சேன்.நீங்களேதான்!மீன் குழம்பு வாசம் மயக்குதுமா.நான் வறுவல்தான் விரும்பி சாப்பிடுவேன்.குழம்பு அளவாதான் சாப்பிடுவேன்.இனிமேல்,உங்க குழம்பு மாதிரி செஞ்சு நிறையா சாப்பிடுவனே.அம்மா,உங்க குழம்பை பார்த்தாலே சாப்பிடனும்னு ஆசையா இருக்குமா.போட்டோஸ் கிளியராயிருக்குமா.விருப்ப பட்டியல்ல சேர்த்தாச்சுமா.தொடர்ந்து அசத்தலான குறிப்பா கொடுக்கறீங்க.வாழ்த்துக்கள்மா.

அன்புடன்
நித்திலா

நாக்குல எச்சை ஊருது, படமே இப்படின்னா..... கொழம்பு எப்படி இருக்கும்?? அடடா நினச்சாலே சாப்பிட்ட மாதிரி இருக்கே.... இந்த மாசம் சாப்பிட முடியாது, அடுத்த மாசம் செஞ்சு பாத்துட்டு சொல்றேன். (நான் செஞ்சாலும் நல்லா வருமா!!!!)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

தோழி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் என் நன்றிகள்

நித்தி கரெக்டா கண்டுபிடிச்சிட்டாயா நன்றி

வருகைக்கும் உன் பின்னூட்டத்துக்கும் நன்றிடா

ஹாய் சுகிமா உன்னிடம் பேசியே ரொம்ப நாளாச்சு முடியும் போது செய்டா நீ செய்தாலும் சூப்பராவரும் வருகைகும் பின்னூட்டத்துக்கும் ந்ன்றிடா

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்திமா அக்கா...,
(உங்கள் வயதில் எனக்கு அக்கா இருப்பதால் நான் உங்களை அக்கா என்றே அழைக்கிறேன்.எனக்கும் உங்களுக்கு 11 வயது வித்தியாசம் உள்ளதல்லவா....)

எனது சந்தேகத்தை உடனே தீர்த்து வைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா நீங்கள் 82 லா பிறந்தீர்கள்?

Eat healthy

எல்லோரும் உங்களை அம்மான்னு கூப்பிடுரது ரொம்ப ஓவர்!நான் ஏதோ உங்களுக்கு 60க்கும் மேல் இருக்கும் என நினைத்தேன்,ஆனால் நீங்கள் 71ல் தான் பிறந்திருக்கீங்க,நான் உங்களை மாமின்னு கூப்பிட்டது தான் சரி,நான் ஃப்ரான்ஸில் வசிக்கிறேன்,இன்ஷாஅல்லாஹ் இந்தியா வரும்போது முடிந்தால் உங்க வீட்டுக்கு மீன் சாப்பிட வருகிறேன்,சலாம் & நன்றி!

Eat healthy

hi mam

i live in delhi. here i get only river fishes. i marinate it with chilli powder, turmeric powder, salt and lemon juice for more than 30 mins. still fish doesn't have any masala when fried or made into gravy. i used to cook sea fish in chennai. can you help me pls.
after reading you recipe( it has all fishes i love), i'm waiting to eat good fish. could u help me out pls.

thanks
riya

ஹாய் ரியா மீனை கீறி விட்டு சிறிது புளி தண்ணீர் மிளகுதூள் சேர்க்கவும் லெமன் தேவை இல்லை நன்றி

thanks for the tip. i'll try it and let u know

பாத்திம்மா உங்க மீன் குழம்பு செய்தேன் எனக்கு உங்க கலர் வரவில்லை? டேஸ்ட்டும் சுமாராதான் இருந்தது ஏன் என்று தெரியவில்லை. அப்புரம் நீங்க சீரக்கத்தூளை எப்போது சேர்க்க வேண்டும் என்று சொல்லவேயில்லை.

வாழு இல்லை வாழவிடு

சுமி இப்போதான் பார்த்தேன் சாரிப்பா சீரகத்தூள்,மல்லிதூள் புளி கரைசலுடன் சேர்க்கனும் கலர் வரலைன்னா தக்காளி நல்ல பழுத்த பழம்மா இருக்கனும் தனி மிளகாய்த்தூளா இருக்கனும் மீன் புது மீனா இருந்தா அதன் சுவையே தனிதான்