என் சமையல் அறையில் - அம்முலு (ஜெர்மனி)

அம்முலு சமையலறை


என் சமையல் அறை - வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம். எங்கள் வீடு நிலம் வாங்கி திட்டமிடப்பட்டு கட்டிய வீடு என்றபடியால், என் விருப்பத்திற்கு ஏற்ப என் சமையல் அறை கட்டப்பட்டது. என் பேவரிட் கலரான ஓரேஞ் கலர் டைல்ஸ் பதிக்கப்பட்டிருக்கிறது. ஜன்னலில் ஒரேஞ் கலர் செம்பருத்தி, ஐந்தூரிய பூமரங்கள். மேடையில் ப்ரெஷ் காப்பி குடிக்க காஃப்பி மெஷின், ப்ரெட் டோஸ்டர். இங்கே உள்ள ஜன்னலினூடாக காலை வெயில் பளிச்சென வரும். {சம்மரில் மட்டுமே அதிக நேரம் கிடைக்கும்}. ஜன்னலுக்கு வெளியே தெரிவது, பக்கத்து வீட்டினரின் மழை நீர் சேகரிக்கும் தாங்கி.

my kitchen
 

இது Breakfast nook. ஆனால் டைனிங் டேபிளாகவும் பாவிக்கலாம். இழுத்து, மடிக்க கூடிய வசதி உள்ளது. முழுக்க கண்ணாடியால் ஆனது. க்ளீனிங் சுலபம். இடதுபக்கம் ப்ரிட்ஜ், படத்தில் தெரியும் கதவிற்கு அந்தப்பக்கம் அறை இருக்கிறது. உண்மையில் அது டைனிங்ரூமாகதான் ப்ளான் இருந்தது. பின் அது சாத்தியப்படாமல் ஆபிஸ் அறையாக மாற்றப்பட்டுள்ளது. மேலே மாசாலா வகை அடங்கிய ஒரு படம்.

my kitchen
 

இக்கதவைத்திறந்தால் சின்னதாக டெராசா(terrace). தடுப்பு பலகை போட்டுள்ளோம். ஏனெனில் பக்கமாக வீதி(road) இருக்கிறது. அத்துடன் குப்பைகளை போட பெரிய containers 4 இருக்கின்றது. நான்கு பிரிவாக பேப்பர், பிளாஸ்டிக், உணவு, இதரவகை எனத் தனிதனியாக போடவேண்டும். நான் உடனுக்குடன் குப்பைகளை டிஸ்போஸ் செய்துவிடுவேன். ஒவ்வொரு கிழமையும் வந்து குப்பைகளை எடுத்துப்போவார்கள். இக் கதவினூடாக மாலை வெயில் வெளிச்சம் தாராளமாக கிடைக்கும். பக்கத்து வீட்டு ஜேர்மன்காரர் பலவிதமான குருவிகள் {லவ்பேர்ட்ஸ் உட்பட சுமார் 300 குருவிகள்} வளர்க்கிறார். அவைகள் எழுப்பும் ஒலிகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

my kitchen
 

சிம்னி பக்கம் இருக்கும் கப்போர்டில் ஒரு பக்கம் செரமிக்கால் ஆன ப்ளேட்ஸ், தேனீர் கோப்பைகள், கப் அண்ட் ஸோஸர்கள். மறுபக்கம் கண்ணாடி glasses வைத்திருக்கிறேன். கதவிலும் glass {milk glass என்று இங்கு கூறுவார்கள்.} பொறுத்தப்பட்டிருக்கிறது. சிம்னி ஸ்டையின்லஸ் ஸ்டீலால் ஆனது. சமைத்து முடித்ததும், {உள்ளே பில்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.} பில்டர் உட்பட முழுவதையும் வினிகர் க்ளீனிங்கால் (vinegar cleaning) துடைத்துவிட்டால் பளிச் பளிச்.

my kitchen
 

இதுவும் என் விருப்பபடி மேலே அமைக்கப்பட்ட ”அவன்”(oven). அனேகமான வீடுகளில் ஸ்டவ் உடன் oven இருக்கும். எனக்கு அதில் விருப்பமில்லை. ப்ளானில் இப்படி அமைக்க செய்துவிட்டேன். அதன் மேலே இருக்கும் கப்போர்ட்டில் மைக்ரோவேவ் வைத்திருக்கிறேன். ஆனால் அதில் மிக அவசரம் எனில் மட்டுமே சூடுபடுத்துவேன். காலண்டர் ஒன்று. இதுதான் சமையலறை வாசல். கதவிற்கு glass பொருத்தப்பட்டிருக்கு.

my kitchen
 

வேஸ்ட்பின் 3 இருக்கிறது. இதில் முன்னால் இருப்பது உணவு சம்பந்தப்பட்ட குப்பைகளுக்கானது. மற்றையது பிளாஸ்டிக் & பேப்பர் போடுவது. கதவிற்கு பின்னால் கார்னரில்(corner) இருக்கும் கப்போர்ட் சுற்றும் வசதியுடையது. அதில் பாத்திரங்களை வைத்திருக்கிறேன். மற்றைய கப்போர்ட்டில் தேவையான மளிகை சாமான்கள் இருக்கின்றன. மற்றும் டிஷ்வாசர் (dishwasher) இருக்கிறது. நான் வினிகரைதான் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்துகிறேன். சுத்தம் செய்வதற்கென இங்கு க்ளீனிங் வினிகர் என்றே மார்க்கெட்டில் இருக்கிறது. {வினிகர் பற்றி வானதியும் அவருடைய சமையலறையில் குறிப்பிட்டிருக்கிறார்.} இதுதான் “என் சமையல் அறை” :-)

my kitchen
 

Comments

யோகராணி hvor er du? உங்க பாராட்டுக்கு ரெம்ப நன்றி.
நீங்க கூறியபடிதான் பல டிசைன்ஸ் கணனியில் போட்டுக்காண்பித்தார்கள்.எங்களுக்கும் எதை செலக்ட் செய்வது குழப்பம்.பின் எங்க கிச்சன் அளவுக்கு பொருத்தமானத்தில் இந்த டிசைனை தெரிவு செய்தோம். சமையல் தவிர்த்து, கிச்சனில் curtains(gardin), flowers மாற்றுவது, சுத்தம் செய்வது என்பது பிடித்தமான ஒன்று. நன்றி.

ரொம்ப ரசிச்சு கட்டியிருக்கீங்கன்னு தெரியுது அம்முலு

ரொம்ப அழகா சுத்தமா இருக்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அம்முலு உங்க கிச்சன் சூப்பர்...

ஹாய் ஆமினா நலமா? வீடு கட்டி 4வருடங்கள் இப்பவும் இப்படித்தான் இருக்கு. என்னவருக்கு சுத்தம்தான் முதலில்.பின்புதான் மற்றவைகள்.வாடகை வீட்டிலும் இதேதான்.ரெம்ப நன்றி ஆமினா உங்க பாராட்டுக்கு.

உங்க பாராட்டுக்கு ரெம்ப நன்றி பிரேமா.

Please tell about many varity of cooking eggs

Always happy.

Very super for your kitchen.

Always happy.

ரொம்ப அழகா இருக்கு உங்க கிச்சன் இவ்வளவு அழகா இருந்த உங்க வீடு எவளவு அழகா இருக்கும் உங்க வீட்டை வந்து பார்க்கணும் நீங்க எங்க இருக்கீங்க உங்க சொந்த ஊர் எதுப்பா

ur kitchen s really fentastic ammulu.........am new to this forum ...........1st page was i saw ur kitchen thats the best one impressed me.........really too clean & gud ammulu

"காயத்தின் வலியை உணர்ந்தவர்கள்

மற்றவர்களை காயபடுத்த மாட்டார்கள் "

dear ammulusister,
your kitchen is very simply and super

Simply Superb!!

ஆஹா அம்முலு ரொம்ப அழகான,சுத்தமா கிச்சன்...அருமையா இருக்கு வாழ்த்துகள் :)

அன்புடன்,
மர்ழியா நூஹு

CLEAN AND NEAT VERY GOOD

CLEAN AND NEAT VERY GOOD

super kitchen

kavitha murukesan...arumanai

super ..kitchen ..also ..its my dream kitchen ...

SIMPLY SUPERB

amulu it's a nice kitchen i want now its flats or own house if its own house means how many sqft coverd area.

hi very nice your kitchen

hi very nice your kitchen

very super u r kitech

Sweet super ammulu. Epadi ivlo clean. And. Near birds very enjoy

Samaika kandipa jolliya irukum