பனீர் பொடேடோ கட்லெட்

தேதி: December 22, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

பனீர் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
பிரட் - 5
மிளகு தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க


 

உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். பனீரை துருவிக் கொள்ளவும். கொத்தமல்லியை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரட்டை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு, சீரகப்பொடி, பிரட் கிரம்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
விருப்பமான வடிவத்தில் உருட்டி பிரட் கிரம்ஸின் மேல் பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து எண்ணெய் ஊற்றி தயாராக வைத்துள்ள கட்லெட்டை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து பொரிக்கவும்.
இருபுறமும் திருப்பி போட்டு பொன்னிறம் வரும் வரை பொரிக்கவும்.
சுவையான பனீர் பொடேடோ கட்லெட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கும் போதே டேஸ்டியா இருக்கும்ன்னு தெரியுது எல்லா ஐட்டமும் வீட்டில் இருக்கு இப்பவே செஞ்சு பார்க்கிறேன்.

சுவையாக இருக்கும் போல.என் பொண்ணுக்கு உருளையே பிடிக்காது.

இப்படி செய்து கொடுக்கலாம் என இருக்கிறேன்..... வாழ்த்துக்கள்..

ஹசீன்

பன்னீர் போடடோ எனக்கு.என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் .செய்து பார்த்திட்டு சொல்றேண்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் ரம்யா....யம்மி யம்மி பார்க்கவே சூப்பராக இருக்கு...பா....
நிச்சயம் டேஸ்ட்டும் சூப்பராகவே இருக்கும்.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ரம்யா.....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.

ஹாய் reem செய்து பாருங்கள். நன்றாக இருக்கும்.பதிவிற்க்கு மிக்க நன்றி.

THANKS ஹசீனா, செய்துகொடுங்கள் உங்கள் பொண்ணுக்கு ரொம்ப பிடித்துவிடும் என்று நினைக்கிறேன்.FEEDBACK கிற்க்கு நன்றி.

நன்றி aswatha பதிவிற்க்கு மிக்க நன்றி.

thanks அப்சரா, உங்களின் பதிவிற்க்கு மிக்க நன்றி, கண்டிப்பாக செய்துபாருங்கள்.

அருமையாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரம்யா, அருமையா இருக்கு ரம்யா. கட்லெட் எனக்கும் என் தங்கைக்கும் பிடித்த ஒரு விஷயம். கண்டிப்பா ட்ரை பண்றேன். வாழ்த்துக்கள் ரம்யா:))

அன்புடன்
பவித்ரா

ரம்யா பார்க்கவே சூப்பரா இருக்கு டேஸ்டும் சூப்பரா இருக்கும் பாராட்டுக்கள்

சூப்பரா மொறுமொறுன்னு ஒரு டிஸ் ..வாழ்த்துக்கள் ரம்யா நன்றி..

வாழு, வாழவிடு..

மிகவும் எளிமையான குறிப்பு.பன்னீர் என் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.ட்ரை பன்னி விட்டு பதில் போடுறேன்.

நன்றி ஆசியா, பவித்ரா,HAMEED FATHIMA, ருக்சானா, NASI 2008 உங்கள் வருகைக்கும் பதிவிற்க்கும் மிக்க நன்றி. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க பா, குழந்தைகளுக்கு கொடுக்கும்போது சிறிது PROCESSED CHEESE ம் சேர்த்து செய்யலாம்.

மிகவும் சுவையான குறிப்பு. செய்து பாத்துட்டு சொல்ரேன்.

பனீர் பொடேடோ கட்லெட் செய்முறை சுலபமாக உள்ளது, அதுவும் பனீர் என்பதால் அவசியம் செய்து பார்க்கிறேன்.

பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி ரம்யாவுக்கு

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரொம்ப சுலபமா இருக்கு :-) செய்து பார்த்துட்டு சொல்றேன்.. கண்டிப்பா செய்யப்போறேன் :-) சூப்பர் ஸ்னாக்

KEEP SMILING ALWAYS :-)