Baby diaper போடும் இடம் மிகவும் black colour

அனைவருக்கும் வணக்கம்,என் குழந்தைக்கு 6 monthsஆகுது.நான் Johnson's baby oil use(for massage)பண்ணுகிறேன்.same brand soap,powder,lotion use பண்ணுகிறேன்.அவள் பிறந்த போது கலர் கம்மி,இப்பொது முகம் மட்டும் ந்ல்ல வெள்ளையாக உள்ளது.கை,கால்களின் நிறம் கம்மியாக உள்ளது.மற்றும் diaper போடும் இடம் மிகவும் black colour உள்ளது.இதர்க்கு என்ன செய்வது.plz help me friends.

ஹாய் கலை, உங்கள் குழந்தைக்கு எல்லா நேரமும் DIAPER போடுவதை தவிர்க்கவும். குழந்தை தானே சிறிது நேரம் எதுவும் போடாமல் விடுங்கள். நன்றாக BABY POWDER அடித்து விட்டு பிறகு ஜட்டி போட்டுவிடுங்கள். தேவையென்றால் மட்டும் DIAPER போடவும். வெளியில் போகும்போதோ அல்லது இரவிலோ மட்டும் பொடுங்கள். இதற்கென ப்ரத்யேகமாக LOTION கிடைக்கும், அதை வாங்கி பயன்படுத்துங்கள்.

நீங்கள் உங்கள் குழந்தையின் முகத்திற்கு லோஷன் போடுறீங்க தானே? இல்லை என்றால் லோஷனை மாற்றி பாருங்கள். சில குழந்தைகளுக்கு ஜான்சன்ஸ் ஒத்து கொள்வதில்லை. நீங்கள் குழந்தைக்கு கண்டிப்பாக பவுடர் உபயோகிக்க கூடாது. எண்ணெய் கேட்டால் குழந்தைக்கு கடலை மாவு பயத்தம் மாவு தேய்த்து குளிக்க வைக்கலாம். உடம்புக்கு ஆலிவ் எண்ணெய் தடவலாம்.

டயபர் எப்பவுமே போட்டு வைக்க கூடாது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் நல்ல வகை அதுவும் வெறும் பருத்தி டயபரை பாவிக்கவும். அது விலை அதிகமாக தான் இருக்கும். இந்தியாவில் நிறையா விலை குறைந்த பிளாஸ்டிக் டயபர் உள்ளது. சிலது பிராண்ட் பெயரிலும் வரும். தரமான பருத்தி மட்டுமே தான் பாவிக்கவேண்டும். பவுடர் போட்டு டயபர் போடவே கூடாது. டயபர் போடுவதால் கருப்பு நிறமாக மாறி இருந்தால் நீங்கள் உபயோகிக்கும் பிராண்டை மாற்றி பாருங்கள்.

நீங்கள் எதற்கும் உங்களின் குழந்தை நல மருத்துவரை அணுகவும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி Ramya & லாவண்யா. sorry for late reply.என் laptop problemஆக இருந்தது.குழந்தையின் முகத்திற்கு Johnson's லோஷன் போடுகிறேன்.

டயபர் போடுவதால் கருப்பு நிறமாக மாறி இருந்தால் நீங்கள் உபயோகிக்கும் பிராண்டை மாற்றி பாருங்கள்.

மாற்றிப்பார்கிறேன்.நன்றி.

மேலும் சில பதிவுகள்