ஓட்ஸ் பொங்கல்

தேதி: December 23, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (8 votes)

 

ஓட்ஸ் - அரை கப்
பாசி பருப்பு - கால் கப்
முந்திரி - ஆறு
சீரகம், மிளகு - ஒரு தேக்கரண்டி
நெய், உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பாசி பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் பாசி பருப்பை மலர வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் ஓட்ஸை போட்டு 5 நொடி வதக்கவும்.
பின் கால் கப்க்கு குறைவாக நீர் ஊற்றி ஓட்ஸை வேக வைக்கவும். ஓட்ஸ் குழைந்து வரும் போது, வேக வைத்த பாசி பருப்பு, உப்பு போட்டு சுருள கிளறவும்.
நெய்யில் சீரகம், மிளகு, முந்திரி சேர்த்து பொரித்து சேர்க்கவும். சுவையான ஓட்ஸ் பொங்கல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பவி காரட் முடிந்து விட்டதா?? ஒட்ஸ்ல புகுந்து விளையாடு வாழ்த்துக்கள்டா

எளிமையான அருமையான குறிப்பு...
வாழ்த்துக்கள்...

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பவி சூப்பர்பா. இவ்வளவு ஈசியான குறிப்ப நான் இதுவரை பார்த்ததே இல்லை. நைட்டே செய்துட வேண்டியது தான் ஓட்ஸ் இருக்கு வீட்டில். வாழ்த்துக்கள் பவி தொடர்ந்து அசத்துங்க.

பொங்கல்னா..............எனக்கு ரொம்ப பிடிக்கும்,ஓட்ஸ்ல பொங்கல் வித்தியாசமா உள்ளது,செய்து பார்த்துட்டு சொல்ரேன்.

Eat healthy

நல்ல குறிப்பு கொடுத்து இருக்கிங்க..முந்திரியை பார்த்தா வாய் ஊறுது..சாப்பிட தரிங்களா..வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

வித்தியாசமான குறிப்பு பவி!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பவி ஓட்ஸ்பொங்கல் தான் இன்றைய ப்ரேக்ஃபாஸ்ட். ரொம்ப நல்லா இருந்த்து.

ரொம்ப எளிமையான குறிப்பு . வாழ்த்துக்கள். முயற்சி செய்து பார்த்துட்டு சொல்றேன்.

Expectation lead to Disappointment

பவித்ரா,இது எனக்கு மிகவும் பிடித்த டிஸ்.
மிகவும் சுலபமாகச் செய்யக் கூடியது.
நான் கஞ்சி போல் செய்து குடிப்பேன். உங்கள் முறைப்படியும் செய்து பார்க்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நான் இன்று இந்த oats பொங்கல் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது thanks.

முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும். குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்கு என் நன்றிகள்.

பாத்திமாம்மா, முதல் ஆளா வந்திருக்கீங்க, உங்க வாழ்த்துக்கு நன்றி:)

இளவரசி, உங்க வாழ்த்துக்கும் நன்றி:)

யாழு, என்ன செய்தீங்களா??? எப்படி இருந்ததுனு சொல்லவே இல்லையே!! வாழ்த்துக்கு நன்றி யாழு:)

ரஸியா, வாங்க வாங்க, எனக்கும் பொங்கல்னா ரொம்ம்ம்ம்ப பிடிக்கும்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க:) நன்றி

ருக்சானா, உங்களுக்கு இல்லாத முந்திரியா, நிறைய தரேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி:)

ஆமி, வாழ்த்துக்கு நன்றி:)

கோம்ஸ், வாங்க, செய்தாச்சா:) நான் பின்னூட்டம் கொடுப்பதற்குள் நீங்க சாப்பிட்டே முடிச்சிட்டீங்களா, மிக்க நன்றி:) இதற்கு பச்சை புளி தண்ணியில் உப்பு, சர்க்கரை, மிளகாய் தூள் போட்டு, கடுகு, தாளித்தால் நல்ல சைட்டிஷ் ஆக இருக்கும். எல்லா வகை பொங்கலுக்கும் ஏற்ற காம்பினேஷன் புளி:)

மீனல், உங்க வாழ்த்துக்கு நன்றி, செய்துட்டு சொல்லுங்க

ராணி, எனக்கும் பிடித்த டிஷ் தான் ராணி.நிறைய பேர் ஓட்ஸில் கஞ்சி தான் செய்து குடிக்கிறாங்க. இப்படி வித்தியாசமா சாப்பிட்டா நல்லா இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க:) நீங்களும் சமையல் குறிப்பு அனுப்பலாமே??:)

சகோ பாசு, செய்து பார்த்ததற்கு நன்றிகள்:)

அன்புடன்
பவித்ரா

µðŠ ¦À¡í¸ø Å¢ò¾¢Â¡ºÁ¡É ÌÈ¢ôÒ.

Thanks

நம்பிக்கை, பொறுமை

Ramyasen

ஐஸ் கிறீம் செய்வது எப்பிடி என்று தயவு செய்து சொல்லுங்க.

நீங்க எதற்கு நன்றி சொல்லிருக்கீங்க’னு தெரியலை. இருந்தாலும் என் குறிப்புக்கு என்றால் மிக்க நன்றி ரம்யா

அன்புடன்
பவித்ரா

http://arusuvai.com/tamil/recipes/55, இந்த லின்க்ல போய் பாருங்க, நீங்க கேட்டது கிடைக்கும்.

அன்புடன்
பவித்ரா

அன்புள்ள பவித்ரா, எப்படி இருக்கீங்க? நேற்று இரவு உங்கள் ஓட்ஸ் பொங்கல் செய்திருந்தேன். மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் குறிப்புக்கு நன்றி. மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...