உருளைக்கிழங்கு புட்டு

தேதி: December 24, 2010

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

உருளைக்கிழங்கு - 250 g
வெங்காயம் - 100 g
பூண்டு - 50 g
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 tsp
கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை , எண்ணெய் - தாளிக்க


 

உருளையை வேகவைத்து தோலுரித்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மசித்து வைத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் காயவைத்து தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ரொம்பவும் வதங்க கூடாது.
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மசித்து வைத்துள்ள உருளையை சேர்த்து வதக்க வேண்டும்.
லேசாக சிவக்க ஆரம்பிக்கும் போது இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஏத்த காம்பினேஷன்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சிம்பிளா நல்ல குறிப்பு திருமதி மூர்த்தி,
நான் ட்ரை பன்னி பார்த்து டேஸ்ட் சொல்ரேன்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

suvaiyaga irunthathu.....madam