தாளிச்சா சமையல் குறிப்பு - படங்களுடன் - 17522 | அறுசுவை


தாளிச்சா

வழங்கியவர் : amina mohammed
தேதி : Sat, 25/12/2010 - 17:29
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4
4 votes
Your rating: None

 

 • வேக வைக்க:
 • துவரம்பருப்பு - 100 கிராம்
 • கடலைபருப்பு- 50 கிராம்
 • வெள்ளைபூண்டு - ஒன்று
 • தக்காளி - 2
 • பச்சைமிளகாய் - 4
 • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 • சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
 • ஆட்டுக்கறி (எலும்பு அதிகமாக)- 1/4 கிலோ
 • இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
 • தாளிக்க
 • பட்டை -1
 • ஏலக்காய் - 3
 • கிராம்பு - 3
 • கடுகு - கால் தேக்கரண்டி
 • சீரகம் - கால் தேக்கரண்டி
 • வெங்காயம் - 2
 • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
 • புளி - பெரிய நெல்லிகாய் அளவு உருண்டை
 • காய்கறிகள் - விருப்பப்பட்டவை (வாழைக்காய், சௌசௌ, மாங்காய், கத்திரிக்காய், முருங்கை, பூசணி, உருளை, கேரட்....)
 • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

 

பருப்பை நன்கு கழுவி கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து வேக வைக்கவும்

கறியை இஞ்சிபூண்டு விழுதுடன் சிறிது நீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக விடவும்.

புளியை ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம், கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் வெங்காயம், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

அதில் வேக வைத்த பருப்பு, கறி, உப்பு மற்றும் காய்கறிகள் சேர்க்கவும்.

அதில் புளிகரைசலை சேர்த்து தேவையான நீரும் சேர்த்து காய்கறிகள் வேகும் வரை கொதிக்கவிட்டு பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மாங்காய் போடுவதாக இருந்தால் புளி சிறிது சேர்த்தால் போதுமானது. தேவைப்பட்டால் காய்கறிகளையும் குக்கரில் ஒரு விசிலுக்கு மட்டும் வைத்து சேர்க்கவும்(நேரம் மிச்சமாக). விருப்பப்பட்டால் தேங்காய் விழுதும் சேர்க்கலாம். விசேஷங்களின் போது அதிகமான வகை காய்கறிகள் சேர்ப்பார்கள். வீட்டிற்கு செய்யும் போது விருப்பமான காய்கறிகளை மட்டும் சேர்க்கலாம். நான் உருளை, கத்திரிக்காய் மற்றும் பீர்க்கங்காய் சேர்த்துள்ளேன். பிரியாணி, நெய்சோறு, தேங்காய் சாதம் இவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..ஹாய் ஆமி...

பாத்த உடனே சேவ் பன்னிக்கிட்டேன். எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த தாளிச்சா. நிறைய கல்யாண வீட்ல சாப்ட்ருக்கேன். இப்ப பன்னிப்பாக்க முடியாது பட் கண்டிப்பா ஒருநாள் பன்னிட்டு மறக்காம இதுல பின்னூட்டம் குடுப்பேன். பாக்கவே சாப்டனும் போல இருக்கு ஆமி. உம் இப்பத்திக்கு பாத்துக்கறேன் வேர வழி இல்லை... ஹாஹாஹா.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஆமி 50வது குறிப்பா

ஆமி இது உங்களின் 50வது குறிப்பு என்று நினைக்கிறேன். சரி தானே ஆமி. அதுவும் விளக்கப்படமா கொடுத்திருக்கீங்க. முதல் விளக்கப்பட குறிப்பு இல்லையா, வாழ்த்துக்கள் ஆமி. 2 நாட்களாக அறுசுவைக்கு வர முடியலை, என் குறிப்புக்கு இன்னும் பின்னூட்டம் கொடுக்கனும், ஆனா இப்ப முடியாது. உங்க விளக்கப்படம் பார்த்ததும் பதிவு போடாம போக முடியலை. வாழ்த்துக்கள். தொடர்ந்து பல குறிப்புகள் படத்தோடு கொடுக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

aameena avargale

எனக்கு தாளிச்சா ரொம்ப பிடிக்கும் ஆனா அத நான் ருசியா நான் சாப்பிட்டதே இல்ல .ஒரு நாள் உங்கள் வீட்டுக்கு வந்துதான் சாப்பிடனும்னு இருக்கேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நன்றிகள் பல!

என் குறிப்பை வெளீயிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவினர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

லதா

//கண்டிப்பா ஒருநாள் பன்னிட்டு மறக்காம இதுல பின்னூட்டம் குடுப்பேன்.//

பாத்து நல்ல கமெண்டா போடுங்க ;))

கண்டிப்பா நல்லா இருக்கும் லதா. இல்லைன்னா என் வீட்டுக்கு திரும்ப அனுப்பி எனக்கு தண்டனை கொடுங்க!!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பவி

ஆமாம் பவி இது என் 50வது குறிப்பு டா. ஐம்பதாவது குறிப்பு விளக்கப்படமா தான் அனுப்பனும்னு சபதம் பண்ணி 2 மாசம் தவமா தவமிருந்து(காத்திருந்து) இன்னைக்கு தான் விளக்கப்பட குறிப்பு கொடுக்க முடிஞ்சது!!! எனக்காக உடனே வந்து பதில் போட்டதுக்கு மிக்க நன்றி பவி...... கறி போடாம செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அஸ்வதா

//ஒரு நாள் உங்கள் வீட்டுக்கு வந்துதான் சாப்பிடனும்னு இருக்கேன்//

எப்ப வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க அஸ்வதா.... சமச்சு அசத்துறேன்....

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

amina avargale

கண்டிப்பா வருவேன் .விரைவில் எதிர்பாருங்கள் .உங்களை பார்க்கணும் உங்களின் சமையலை ருசிக்கணும் !!!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

வாழ்த்துக்கள்

முதல் விளக்கப்பட குறிப்பிற்கு வாழ்த்துக்கள் ஆமினா.நல்லாயிருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆமினா

வாவ் கலர்ஃபுல் தாளிச்சா சாப்பிட்டால் சுவை சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள் ஆமினா.....

வாழு, வாழவிடு..