நைட் லேம்ப்

தேதி: December 27, 2010

5
Average: 4.5 (12 votes)

 

Ohp ஷீட்
ப்ளாஸ்டிக் சீடி பாக்ஸ் அடிப்பாகம் - ஒன்று
சீடி பாக்ஸின் மேல் மூடி - 2
ஐஸ்க்ரீம் குச்சிகள்
கம்
ஒயருடன் கூடிய பல்ப் ஹோல்டர்
ஃப்ளக்
நைட்லேம்ப் பல்ப்
ப்ளேடு
ஆரஞ்சுநிற லேஸ்
ஃபேப்பரிக் பெயிண்ட் - ஆரஞ்ச், நீலம், பச்சை, வெள்ளை மற்றும் பேர்ல்நிறங்கள்
ஸ்டோன்
பெவிக்கால்
ஒவல் வடிவ கோல்டுநிறமணி

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சீடி பாக்ஸ் அடிப்பாகத்தில் நடுவில் இருக்கும் உருளைவடிவ குழாயை ரம்பம் கொண்டு அறுத்து எடுத்து விடவும். அதன் நடுவில் துளையிட்டுக் கொள்ளவும்.
சீடி பாக்ஸின் மூடியின் மேல் பக்கத்தில் நடுவில் பல்ப் ஹோல்டர் நுழையும் அளவிற்கு ஒட்டையிட்டுக் கொள்ளவும்.
சீடி பாக்ஸின் சுற்றளவுக்கு Ohp ஷீட்டை நறுக்கி எடுத்துக் கொண்டு, அந்த ஷீட்டில் ஒரு முழு ஐஸ்க்ரீம் குச்சியை முதலில் ஒட்டவும். அதன் பக்கத்தில் ஐஸ்க்ரீம் குச்சியை இரண்டாக உடைத்து பாதி ஐஸ்க்ரீம் குச்சியை ஒட்டவும். இதுப்போல் 16 முழு ஐஸ்க்ரீம் குச்சிகளும், 16 பாதி அளவுள்ள ஐஸ்க்ரீம் குச்சிகளையும் ஒட்டி முடிக்கவும்.
ohp ஷீட்டுடன் ஐஸ்க்ரீம் குச்சிகள் நன்றாக ஒட்டிக் கொண்டதும், இதனை மற்றொரு சீடி பாக்ஸின் மேல் மூடியின் சுற்றளவில் பாதியளவு வரும்படி ஒட்டிக் கொள்ளவும். அதன் இரண்டு முனையையும் ஒட்டிக் கொள்ளவும்.
சீடி பாக்ஸின் மேல் மூடியின் அடிவழியாக ஒயருடன் கூடிய பல்ப் ஹோல்டரை முதலில் நுழைத்துக் கொள்ளவும். பிறகு பல்ப் ஹோல்டரில் பல்பை மாட்டி வைக்கவும். சீடி மூடியில் ஒட்டிய ohp ஷீட்டை, பல்ப் பொருத்தப்பட்ட மூடியின் ஓரத்தில் பாதியளவு வரும்படி ஒட்டிக்கொள்ளவும்.
பிறகு ஒயரின் முனையை சீடி பாக்ஸில் அடித்தட்டில் துளையிட்டுள்ள பகுதி வழியாக விட்டு சீடி பாக்ஸை மூடிக் கொள்ளவும்.
இப்போது வெளியில் ஒயரின் முனையில் ஃப்ளக்கை மாட்டி வைக்கவும்.
சீடி பாக்ஸின் மேல்பக்கம் முழுவதும் ஆரஞ்சுநிற பேப்பரிக் பெயிண்டை அடிக்கவும்.
ஒவ்வொரு முழு ஐஸ்க்ரீம் குச்சியிலும் ஆரஞ்சுநிற பெயிண்டை அடிக்கவும்.
அடுத்து பாதியளவு ஒட்டியுள்ள ஒவ்வொரு ஐஸ்க்ரீம் குச்சியில் நீலநிற பெயிண்ட் செய்யவும். மீதி உள்ள இடங்களில் வெள்ளைநிற பெயிண்டை அடிக்கவும்.
பெயிண்ட் காய்ந்ததும் ஓவல் வடிவில் உள்ள கோல்டுநிற மணியை நீலநிற பெயிண்ட் செய்த ஐஸ்க்ரீம் குச்சியின் கீழ் ஒவ்வொரு மணியாக ஒட்டி விடவும்.
ஆரஞ்சுநிற பெயிண்ட் செய்த ஐஸ்க்ரீம் குச்சி ஓவ்வொன்றிலும் படத்தில் உள்ளது போல் கொடி, இலைகள், பூ வரையவும்.
சீடி பாக்ஸின் மேல் பக்கத்தில் ஸ்டார் வடிவில் உள்ள ஸ்டோனை ஒட்டிக் கொள்ளவும்.
சீடி பாக்ஸின் மேல் ஓரத்திலும், அடியிலும் ஆரஞ்சுநிற லேஸை சுற்றி ஒட்டிக் கொள்ளவும்.
சீடி பாக்ஸ் நைட் லேம்ப் ரெடி.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த நைட் லேம்ப் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

night lamp is very nice. with regards g.gomathi.

Hi Madam,

Your night lamp is very nice.

You are very great and having lot of creativity.,

Br,Padma

All is Well

மிகவும் நன்றாக உள்ளது .பாராட்டுக்கள் உங்களுக்கு .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நைட் லேம்ப் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

நைட் லேம்ப் அழகாக இருக்கிறது செண்பகா :-)
செய்முறை தெளிவாக இருக்கிறது.ஆனால் சரியான பொறுமை வேண்டும் செய்ய.
நன்றி வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

it's very simple & super.

really very nice..

Hemamalini

ஹாய் செண்பகா! எப்பிடி இருக்கிறீங்க? ;) ஒரேயடியா இருந்து இன்றைக்கு எல்லாக் கைவினைக் குறிப்புக்கும் கருத்துத் தெரிவிக்கப் போறன். ;) முன்னாலயே பார்த்தாச்சு. இப்பதான் கருத்துச் சொல்ல நேரம் கிடைச்சிருக்கு. வடிவா இருக்கு விளக்கு, பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta