பாப்புரொட்டி

தேதி: December 29, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

பாப்புரொட்டி - தோசை உப்புமாவை தான் தெலுங்கில் இப்படி அழைப்பார்கள்.

 

பச்சரிசி - அரை கப்
துவரம் பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - இரண்டு
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். பச்சரிசி, துவரம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் ஊற வேண்டும்.
ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு மைய அரைக்கவும்.
அரைத்த மாவில் கால் டம்ளர் வெந்நீர் கலக்கவும்.சிறிது எண்ணெயும் மாவுடன் கலக்கவும்.
மாவை தோசையாக ஊற்றவும்.
பின் தோசைகளை ஒன்றிரண்டாக கட் செய்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று விடவும்.
பின் துவரம் பருப்பை வேக வைக்கவும். பொடி செய்த தோசையை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து, வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
பருப்பில் தண்ணீர் சுண்டியதும், பொடித்த தோசையை போட்டு கிளறவும். சுவையான பாப்புரொட்டி தயார். ஈவ்னிங் ஸ்நாக்ஸாகவும், டின்னருக்கும் கூட பரிமாறலாம்.

தோசையாக வார்க்கும் போது எண்ணெய் விட தேவையில்லை. மாவிலேயே எண்ணெய் ஊற்றுவதால் தேவையில்லை. தோசை ஊற்றிய சிறிது நேரத்திலேயே நன்கு வெந்துவிடும். திருப்பி போட அவசியம் இருக்காது. அவசியம் இருந்தால் திருப்பி போட்டும் எடுக்கலாம். இறக்குவதற்கு முன்பு எலுமிச்சை சாறு விட்டும் இறக்கலாம். சாலட் இதற்கு ஏற்ற சைட்டிஷ்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பவி, துவரம்பருப்பை விட மாட்டேன்னு முடிவே பண்ணிட்டியா? நான் கூட அது என்ன 'பாப்புரொட்டி', ஒரு சமயம் அட்மின் அண்ணா பேரை தான் தப்பா போட்டு உன் ரெசிபிக்கு பேரா வச்சிட்டியோன்னு பார்த்தேன் ;)) ம்ம்ம்.... தமிழ் நாட்டு குறிப்பு போதாம, ஆந்திரா குறிப்பும் தர தொடங்கிட்டியா? நல்ல முன்னேற்றம். உண்மையாவே மிகவும் எளிமையான, சுவையான,வித்தியாசமான சிற்றுண்டி பவி. வாழ்த்துக்கள். தொடர்ந்து வித்தியாசப்படுத்திட்டே இரு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பவி எதையும் விடுவதாயில்லையா?? ஆனா வித்தியாசமா குடுத்து கலக்குறடா வாழ்த்துக்கள்(காரட்டும்,பீட்ருட்டும் அழுததாடா)

தெலுங்குல பாப்பு ரொட்டியா?? இது வரை கேள்வி படாத பேரு பவி.....

ஆனா வித்தியாசமா இருக்கு....

சீக்கிரமா செய்து பார்த்துட்டு சொல்றேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பவி இந்த குறிப்பு என்னோட ப்ரண்ட் வீட்டுல செய்வாங்க தெலுங்குகாரங்கபா அந்த ஆன்ட்டி சூப்பரா செய்வாங்க. இதை சாப்பிட்டு 2 வருடம் ஆகுதுடா இப்ப நீயே குறிப்பு கொடுத்துட்டா செய்து பார்த்துட வேண்டியது தா. அசத்து பவி. வித்தியாசாமான் குறிப்புகளோட

ஒவ்வொரு குறிப்பும் வித்யாசமா கொடுக்கரீங்க. பாக்கவே நல்லா இருக்கு. செய்து பாத்துட்டு சொல்ரேம்பா.

பவி, பாப்புரொட்டி சூப்பராக செய்திருக்கிறீர்கள் டேஸ்டாக இருக்கும்.

மசாலா கலவைகள் நன்றாக இருக்கிறது.

படங்கள் எல்லாம் தெளிவாக உள்ளது.

செய்முறை விளக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

செய்து பார்த்துட்டு சொல்றேன்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பாப்புரொட்டி தெலுங்கு பெயரா ஓக்கே.. நல்லது இன்னும் அதிக குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் பவி..

வாழு, வாழவிடு..

பவி... சின்ன பிள்ளைன்னு அப்பப்ப காட்டறீங்க.. பாருங்க பேரை "பாப்புரொட்டி"... ;) ஹிஹிஹீ. சும்மா சொன்னேன்... எல்லாம் குட்டீஸ்'கு பிடிச்ச மாதிரி சத்தான குறிப்பாவே கொடுக்கறீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்கு நன்றிகள்

கல்ப்ஸ், வாங்க கல்ப்ஸ், உங்ககிட்ட பேசவே முடியலை, இன்னிக்கு எக்ஸாம் முடிந்தது, வழக்கம் போல் ஊத்திக்கும்;(( என்ன பண்றது கல்ப்ஸ், கூட்டாஞ்சோறா போச்சு என்னோட சமையல்;( தொடர்ந்து வந்து பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்துங்கோ:)

பாத்திமாம்மா, வாங்க, அரைத்த மாவையே அரைக்கிற மாதிரி ஒரே குறிப்பை தர இஷ்டம் இல்லைம்மா, அதான் எதை கொடுக்கலாம்னு யோசித்து யோசித்து இப்படி?? நன்றிம்மா

ஆமி, எனக்கும் கேள்வி படாத பேர் தான். பேசாம தோசை உப்புமா’னே கொடுக்கலாம்னு நினைத்தேன், அப்புறம் என்ன தோணிச்சோ, அதே பேரை கொடுத்திட்டேன். நன்றி ஆமி:)

யாழு, அப்பாடா, நீங்க கேள்விபட்டிருக்கேன்னு சொல்லி வயித்துல பாலை வார்த்தீங்க யாழு:)உங்களுக்காகவே கொடுத்த குறிப்பு தான் யாழு:) நன்றி. தொடர்ந்து வந்து வாழ்த்து சொல்றீங்க, மிக்க மகிழ்ச்சி யாழு:)என்னால தான் சமைத்து அசத்தலாம்’ல பங்கெடுக்கவே முடியலை, முடியும் வந்து கலந்துக்கறேன்.

கோம்ஸ், வாங்க கோம்ஸ், செய்துட்டு சொல்லுங்க. நன்றி

ராணி, வாங்க ராணி. நன்றி ராணி. ட்ரை பண்ணி பாருங்க ராணி. உங்க குறிப்பையும் எதிர்ப்பார்க்கிறேன், சீக்கிரம் இலங்கை ஸ்பெஷலோட வாங்க ராணி

ருக்சானா, ஆமாப்பா, தெலுங்கு பெயர் தான், ஆனா அதுக்கு தமிழாக்கம் செய்தது நானும் என் தோழியும் தான். தோசை பயன்படுத்துவதால் தோசை உப்புமா’னு சொல்லிட்டேனாக்கும். மிக்க நன்றி

வனி, எனக்கு நாலே நாலு பல் தான் வனி இருக்கு, நிஜமாவே சின்ன பிள்ளை தான்:) குட்டீஸ் செய்து கொடுத்து எனக்கு பாராட்டு வாங்கி கொடுங்க, அவங்க சாப்பிடலைன்னா அவங்க திட்டை மட்டும் நீங்களே வாங்கிக்கோங்க. நன்றி வனி

அன்புடன்
பவித்ரா

ஹாய் பவி,எப்படி இருக்கீங்க?பார்க்கவே முடியலை!குறிப்புகள் மட்டும் கொடுத்திட்டே இருக்கீங்க,தமிழ்நாட்டிலயிருந்து ஆந்திராவிற்கு போயாச்சா!!வித்தியாசமான குறிப்பு,வாழ்த்துக்கள் பவி.அசத்தலான குறிப்புகள் கொடுக்கறீங்க,தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்,பவி.

அன்புடன்
நித்திலா

நான் நலமா இருக்கேன் நித்தி, நீங்க நலமா?? பார்த்தாலும் பேச முடியலை நித்தி, அன்னிக்கு உங்க கூட பேசும் போது நெட் டிஸ்கனெக்ட் ஆயிடுத்து சாரிப்பா;(( தமிழ்நாடு ஆந்திரா என்றெல்லாம் பார்ப்பதில்லை நித்தி, வேற்றுமையில் ஒற்றுமை தானே நம் நாடு:) வாழ்த்துக்கு நன்றி:)

அன்புடன்
பவித்ரா