தேங்காய் பிஸ்கட்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமாவு - 100 கிராம்
துருவிய தேங்காய் - 50 கிராம்
ஜீனி - 100 கிராம்
வெண்ணெய் - 75 கிராம்
தேன் - ஒரு தேக்கரண்டி
எலும்மிச்சைசாறு - 2 தேக்கரண்டி


 

மைதாவினை நன்கு சலித்துக் கொள்ளவும். ஜீனியை நன்கு பொடி செய்து கொள்ளவும்.
பிறகு அனைத்துப் பொருட்களையும் ஒன்றாய்ச் சேர்த்து நன்கு பிசையவும்.
தேவையெனில் சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
மாவினை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்து ஒரு தட்டில் விடவும்.
பிறகு தட்டினை ஓவனில் வைத்து 350 டிகிரி பாரன்ஹீட்டில் 12 முதல் 15 நிமிடங்கள் வரை சூடு செய்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தேங்காய் பிஸ்கட் செய்முறை சுலபமாக இருக்கிறது.எலக்ட்ரிக் ஓவனில் இதை டிரை பண்ணலாமானு சொல்லுங்களேன்.

idhuvum kadandhu pogum.