தேதி: January 3, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சாதம் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 15 முதல் 20 வரை
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
சிகப்பு மிளகாய் - நான்கு
புளி - சிறிதளவு
தாளிக்க - கடுகு, உளுந்து, கடலை பருப்பு
உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம், பூண்டை தோலுரித்து தயாராக வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி சேர்த்து வதக்கவும்.

கலர் மாறி வரும் போது கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

பாதி அரைபட்டதும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.

எண்ணெயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சட்னியில் கலக்கவும். சூடான சாதத்தில் நெய் கலந்து அரைத்த சட்னி கலந்து பரிமாறவும்.

Comments
பவி
பவி... எங்க தான் பிடிக்கறீங்க இந்த மாதிரி வித விதமான குறிப்பு. ரொம்ப சுலபமான குறிப்புகளா கொடுக்கறீங்க. வாழ்த்துக்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
wow... very nice. i tried
wow... very nice. i tried this today...very very tasty..
vazhga valamudan
பவித்ரா..
சட்னில கூடசாதமா..ம்ம்ம் நல்ல நல்ல குறிப்பா கொடுக்கறிங்க வாழ்த்துக்கள்..
வாழு, வாழவிடு..
சட்னி சாதம்
பவித்ரா,ரெசிப்பி வித்தியாசமாக உள்ளது. சட்னி சாதம் பார்க்க ரொம்ப ருசியாக இருக்கும்போல் தெரிகிறது.
படங்களை பார்க்கும்போதே அதன் சுவையை உணர முடிகிறது.
கலந்திருக்கும் பொருட்களெல்லாம் சூப்பரானவை.
செய்முறைகள் விளக்கமாக இருக்கிறது ட்ரை பண்றேன்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
பவி சட்னி சாதன் சூப்பர்
பவி சூப்பர் சிம்பிள் ரெசிப்பி. இப்படியும் சட்னியை உபயோகிக்கலாமா? நாங்கலாம் சட்னிய தோசை, இட்லிக்கு தான் தொட்டு சாப்பிடுவோம். சூப்பர் பவி. கலக்குற. தொடர்ந்து நல்ல நல்ல குறிப்பா கொடுக்கற வாழ்த்துக்கள்.
பவி
பவி சட்டினியில் சாதமா?சூப்பரா இருக்கும் போல.செய்துவிட்டு சொல்லுகிறேன். வாழ்த்துக்கள் பவி.
ஹசீன்
பவி
பவி சட்னில கூடசாதமா வித்யாசமாகவும் ஈசியாகவும் இருக்கு வாழ்த்துக்கள்டா
பவி!!!
புதுவிதமா இருக்கு பவி!!!
இன்னைக்கு மதியம் செய்துட்டு முடிஞ்சா போட்டோ எடுத்து அனுப்புறேன்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
சட்னிசாதம்
பவி சட்னி சாதம் இன்று மதியம் செய்தேன் சூப்பர்டா என் நன்றி ரொம்ப ஈசியா இருக்குடா
சட்னி சாதம்
குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்கு எனது நன்றிகள். தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும். இந்த சாதத்திற்கு கூட்டு வகைகள் நல்ல சைட்டிஷ் ஆக இருக்கும்.
வனி, முதல் ஆளாக வந்ததற்கு நன்றிகள் வனி:) எனக்கே எனக்கென்று இந்த மாதிரி குறிப்புகள் என் கண்ணில் பட்டுவிட்டது:) நன்றி வனி
சுதா, வாங்க சுதா, சமைத்து பார்த்ததுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சுதா
ருக்சானா, என்ன செய்ய, இப்படி ஏதாவது செய்தால் சமையல் சீக்கிரம் முடியுது. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
ராணி, தவறாமல் வந்து பின்னூட்டம் கொடுக்கறீங்க, மிக்க மகிழ்ச்சி. முயற்சி செய்து பாருங்க, ரொம்ப ஈஸியா இருக்கும்.
யாழு, வாங்க யாழு. எனக்கு சட்னி, துவையல் சாதம் என்றால் மிக இஷ்டம். மிக்க நன்றி யாழு.
ஹசீனா, செய்துட்டு சொல்லுங்க. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி
பாத்திமாம்மா, மிக்க நன்றிம்மா. சீக்கிரமே ட்ரை பண்ணினதுக்கு மிக்க நன்றி.
ஆமி, செய்தாச்சா, எப்படி இருந்தது ஆமி. மிக்க நன்றி;
அன்புடன்
பவித்ரா