கோதுமை அடை

தேதி: January 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

கோதுமை மாவு - 2 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
பொடியாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - 1 கப்
வரமிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்துமல்லி தழை
துருவிய கேரட் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது - 2 ஸ்பூன்
உப்பு


 

துவரம் பருப்பை மிக்சியில் உடைத்து 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பவுலில் ஊறவைத்த பருப்பு, கோதுமை மாவு, வெங்காயம்,மிளகாய்த்தூள், உப்பு, கேரட்,தேங்காய், மல்லி, கறிவேப்பிலை எல்லாவறையும் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக பிசையவும்.

பிசைந்த மாவில் எலுமிச்சை அளவு எடுத்து நான்ஸ்டிக் தவாவில் கையில் தண்ணீரை தொட்டுக்கொண்டு சமமாக பரத்தவும்
சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

It is a tasty and healthy food too...i tried at home it was so good ..thanks for sharing with us Manjula :-)

Thanks for your feedback vincy

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

mix samba wheat rava with dosa mix for dosa preparation.