ஹேர் ஃபேண்ட் டிசைன்

தேதி: January 4, 2011

4
Average: 3.8 (10 votes)

 

ஸ்டாக்கிங் துணி - விரும்பிய நிறத்தில்
கோல்டுநிற கம்பி
பெவிக்கால்
ஸ்டோன் அல்லது கோல்டுநிற மணி - 2
ப்ளையின் ஹேர் பேண்ட்

 

கோல்டுநிற கம்பியை 10 செ.மீ, 5 செ.மீ என்ற அளவில் தனித்தனியே இரண்ரெண்டு துண்டுகள் நறுக்கி வைக்கவும்.
கோல்டுநிற கம்பியை உணர்கொம்புகள் போல் வளைத்து வைக்கவும்.
கம்பிகள் அனைத்தையும் இதழ்கள் போல் வளைத்துக்கொள்ளவும்.
அந்த கம்பியில் ஸ்டாக்கிங் துணியை வைத்து கம்பி முழுவதும் மறைப்பது போல் துணியை இழுத்து அடியில் பிடித்துக் கொள்ளவும். பிறகு நூலைக் கொண்டு கட்டி பூத்தொடுப்பது போல் முடிச்சுப்போட்டுக் கொள்ளவும்.
ஒவ்வொரு இதழிலும் நூலால் கட்டிய பிறகு மீதமுள்ள ஸ்டாக்கிங் துணியை நறுக்கிவிடவும். பின்னர் இதழ்களை பட்டர்ஃப்ளை வடிவம் கொண்டு வர வேண்டும். 10 செ.மீ அளவிலான இரண்டு இதழ்கள் மேல் பக்கமும், 5 செ.மீ அளவிலான இரண்டு இதழ்கள் கீழ் பக்கமும் வருவது போல் வைக்கவும்.
அதன் நடுவில் பெவிக்கால் கொண்டு கோல்டுநிற மணியை ஒட்டவும். பின்னர் கம்பியில் வளைத்து வைத்திருக்கும் உணர்கொம்பை மேல்பக்கம் ஒட்டிய மணியின் அடியில் வைத்து ஒட்டி விடவும். இப்போது ஸ்டாக்கிங் க்ளாத் பட்டர்ஃப்ளை ரெடி.
ஃப்ளையின் ஹேர் ஃபேண்ட்டின் ஏதாவது ஒரு பக்கத்தில் பெவிக்கால் அல்லது மெழுகு வைத்து இந்த பட்டர்ஃப்ளை வைத்து ஒட்டவும். மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஹேர் ஃபேண்ட் டிசைன் இது.
இதுப்போல் ஸ்டாக்கிங் துணியை கொண்டு விதவிதமான பூக்கள், பட்டர்ஃப்ளை செய்து குழந்தைகளின் ஆடைக்கு பொருத்தமாக உள்ள ஹேர் ஃபேண்ட், ஹேர் க்ளிப்பில் வைத்து ஒட்டிவிடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சோ க்யூட் செய்யவும் ஈஸிதான் போல. எளிமையா செய்முறை விளக்கமும் கொடுத்திருக்கீங்க. இது யாருக்கு நவீனாக்கா? அறுசுவை டீம் உங்களுக்கு என் பாராட்டுக்கள்

பிரமாதமா இருக்கு !!! விருப்ப பட்டியலில் சேர்க்க இங்க இல்லையே .அது இருந்தா ஈஸியா இருக்குமே எங்களுக்கு .ப்ளீஸ் அதை இங்கே செர்த்திடுங்களேன் ?????

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

க்ளிப் ரொம்ப அழகாக இருக்கு .
சிம்பிள் மற்றும் சூப்பர்.
செய்தவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

simply super. very nice clip. keep it up .with regards g.gomathi.

ஹேர் பேன்ட் சூப்பர்..நீங்கள் சொன்ன விதம் நல்லா இருந்தது.புரியும்படியாகவும் இருந்தது.ஸ்டாக்கின் துணி எங்கு கிடைக்கும்.

wow.....simply superb.....

Brintha
இதுவும் கடந்து போகும்

ரேவதி, பத்மா.... கியூட் பேண்ட்ஸ். கண்டிப்பா என் பொண்ணுக்கும் இதை செய்து கொடுக்கணும். ஊருக்கு போனா தான் இந்த மெடீரியல் எல்லாம் வாங்க முடியும். இங்க ஒன்னும் கிடைக்காது. சூப்பரா இருக்குங்க. கலக்கல்.... வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ithuvum nice

nice

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta