என் 2.8 வயது மகனுக்கு சளி,இருமல்

என் மகனுக்கு 2.8 வயது ஆகிறது. அவனுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நிறைய மருந்து சாப்பிட்டான். இப்போது கடந்த 1 மாதமாக தொடர்ந்து சளி, இருமல் இருக்குது. நிறைய மருந்து, antibiotic syrup எடுத்தாச்சு. ஆனால் வறட்டு இருமல்,குத்தி குத்தி இருமுவது மட்டும் குறைய வில்லை. என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் தோழிகளே.ரொம்ப பயமாக இருக்கிறது தோழிகளே. நானும் என் கணவரும் வெளிநாட்டில் எங்கள் குழந்தையுடன் வசிக்கிறோம். குத்தி குத்தி இருமுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இங்குள்ள எல்லா டாக்டரிடமும் காட்டியாச்சு. டாக்டர் பால்,முட்டை,சாக்லேட், milk products,cool drinks, some fruits எதுவும் சாப்பிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். help me friends very urgent.

முன்று நாள் போதும்.
இஞ்சி சாறு கொடுத்தால் , சளி வாந்தி வழியாக ( அ) மோஷன் வழியாக வெளியாகிடும்.
இஞ்சி சாறு நிரைய கொடுத்தாலும் லூஸ்மோஷன் ஆக ஆரம்பித்துவிடும்.

முன்று நாளைக்கு பிறகு தினம் , தைலம் தேய்த்து விட்டு சாப்ரான் பால் மட்டும் கொடுங்க.,

தினப்படி சமையலில் மிளகை சேர்த்து கொள்ளுஙள்.

சப்பாத்தியில் மிளகு, பொட்டுகடலை ,சர்கக்ரை பொடித்து போட்டு செய்துகொடுங்கள்.

தனியாக இருமல் நிற்க. பொட்டுகடலையில் மிளகு சேர்த்து பொடித்து, சர்க்கரையும் போட்டு அப்ப அப்ப ஒரு ஒரு ஸ்பூன் சாப்பிட கொடுங்கள்.\\பொட்டுகடலை பொடி சாப்பிடும் போது பேசவோ, சிரிக்கவோ விட வேண்டாம் புரை யேறும்.

Jaleelakamal

தோழி மிளகு சப்பாத்தி எப்படி செய்வது? என் மகன் எதற்கு எடுத்தாலும் அழுகிறான்.அவன் அழுவதால் சளி ,இருமல் ஜாஸ்தி ஆகிறது. அவனுக்கு பால் கொடுக்கக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.அதனால் நான் pediasure தான் கொடுக்கிறேன்.என்ன தைலம் தேய்த்துவிடலாம்.

Expectation lead to Disappointment

இருங்க குறிப்பில் போடுகிறேன், பார்த்து கொள்ளுஙக்ள்.
எதற்கெடுத்தாலும் அழுகிறான் என்றால்,எதாவது வித்தியாசமான டாய்ஸ் வாங்கி கொடுஙக்ள், சில குழந்தைகள் அப்படி தான், அவனை அழ விடமால் என்னதை திசை திருப்புஙக்ள்
ஜலீலா

Jaleelakamal

http://www.arusuvai.com/tamil/node/17666

தோழி மீனா இந்த லிங்கை சொடுகி பார்க்கவும் , உங்களுக்காக தான் இந்த குறிப்பு.

குழ்ந்தைகளுக்கு என்பதால் கால் தேக்கரண்டி மிளகு, பெரியவர்கள்., அரை தேக்கரண்டியாக போட்டு கொள்ளலாம்.

ஜலீலா

Jaleelakamal

தோழி ஜலீலா மிக்க நன்றி.இன்று இரவே முயற்சி செய்கிறேன்.தொட்டுக் கொள்ள(side dish)என்ன செய்ய வேண்டும்.என் மகனுடைய அழுகை,சாப்பிடுவதற்கு, கேட்ட பொருள் கிடைக்கவில்லை என்றால்,குறும்பு செய்யும் போது அடித்தால். பொட்டுக்கடலை + மிளகு + சுகர் என்ன விகிதத்தில் கொடுக்க வேண்டும், எத்தனை முறை கொடுக்க வேண்டும்.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்