BE POSITIVE...THINK POSITIVE..GET GOOD RESULT.

தோழிகளே நாம் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் அதுவும் நம் குழந்தைகளை பற்றி நினைக்கும் போது கண்டிப்பாக நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும் ஏன் என்றால் ஒரு குழந்தைக்கு அம்மாவிடமும்,அப்பாவிடமும் எப்போதும் ஒரு கண்ணுக்கு தெரியாத தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். நாம் ஒவ்வொரு நாளும் குழந்தைக்கு நல்லதை நினைத்தால் நம் குழந்தைக்கு நல்லதாகவே நடக்கும். என் வாழ்வில் எனக்குள்ளே இந்த சிந்தனை வந்தது எனது டெலிவரி க்கு அப்புறம் தான். ஏன் என்றால் நான் குழந்தை உண்டாவதர்க்கு முன்னாடி இருந்தே எனக்கு கண்டிப்பாக நார்மல் டெலிவரி தான் ஆகும் என்ற ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது அது போலவே நடந்தது. இன்னும் சில விஷயங்கள் என் வாழ்வில் இது போலவே நடந்துள்ளது. இதற்க்கு காரணம் Positive thinking..நான் இதை உங்களிடம் கண்டிப்பாக கூற வேண்டும் என நினைக்க காரணம் இது ஒருவருக்காவது பயன் பெற வேண்டும் என்பது தான்.முயன்று பாருங்கள் தோழிகளே....

நீங்கள் சொல்லுவது நூற்றிற்கு நூறு சரியானது. எனக்கும் அந்த அனுபவம் உண்டு. எனக்கு உடம்பு சரியில்லை என்றால் கூட நான் நல்லா இருக்கிறேன் என்று நினைத்தாலே பாதி உடம்பு நல்லா ஆயிடும். என்னை பொருத்தவரைக்கும் மனசு நல்லா இருந்தால் உடம்பு நல்லா இருக்கும்.நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். அதைத்தான் நீங்கள் Be Positive.Think Positive.Get Good Result.என்று சொல்லியிருக்கீங்க.மிக்க நன்றி.நான் ரொம்ப நாளா மனசில் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்