மணத்ததக்காளி கீரை சூப்

தேதி: January 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (8 votes)

 

பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - ஆறு பல்
தக்காளி - ஒன்று
மணத்ததக்காளி கீரை - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க:
பட்டை - இரண்டு துண்டு
கிராம்பு - மூன்று
சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி
அரைக்கவும்:
தேங்காய் - கால் கப்
பச்சை மிளகாய் - நான்கு
கசகசா - கால் தேக்கரண்டி
பொட்டுக்கடலை - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
(மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்)


 

தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அதனுடன் கீரை சேர்த்து வதக்கவும். அடுத்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நல்ல பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும்.
மணத்ததக்காளி கீரை சூப் ரெடி. இது வயிற்று புண் வாய் வேக்காளத்துக்கு ரொம்ப நல்லது. இதை சாதத்துடனும் சாப்பிடலாம். சும்மாவும் குடிக்கலாம்.

பச்சை மிளகாய் சேர்க்காமல் மிளகாய் தூள் சேர்த்தும் செய்யலாம் .


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவர்ணா புதுமையான ஆரோக்கியமான குறிப்பு தந்திருக்கீங்க. வாழ்த்துக்கள். அவசியம் செய்துடறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளீயிட்ட அட்மின் அண்ணாவுக்கு மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி வனி.முதல் ஆளாக வந்து பின்னூட்டம் குடுத்துருக்கீங்க மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பு வித்தியாசனமா இருக்கு!!!

செய்துட்டு சொல்றேன்

மேலும் மேலும் அதிக குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாழ்த்துக்களுக்கு நன்றி ஆமினா.செய்து பாத்துட்டு சொல்லுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்ணா...,உங்க குறிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
தேங்காய் பால் ஊற்றி வெரும் மணதக்காளி சாறுதான் செய்ததுண்டு.
ஆனால் உங்களுடைய இந்த செய்முறை வித்தியாசமாகவும்,நிச்சயம் ருசியாக இருக்கும் என்றும் தோன்றுகிறது.ஊருக்கு போகும் போது செய்து பார்த்திட வேண்டியதுதான்.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ஸ்வர்ணா..

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சுவா, மணதக்காளி சூப் - இப்படி ஒரு சூப் இருப்பதை இப்போதுதான் கேள்விபடுகிறேன் பா. இந்தியா வந்த பிறகு செய்து ருசித்துவிட்டு சொல்கிறேன். பார்க்கும் போதே அதன் சுவையும்,சத்தும் நன்கு விளங்குகிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து சத்தான குறிப்புகளை தொடர்ந்து தரவும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மிகவும் நல்ல குறிப்பு. இதே செய்முரையில் மனதக்காளி கீரைக்கு பதில் வேறு என்ன கீரை உபயோக படுத்தலாம்? நான் வசிக்கும் இடத்தில் மனதக்காளி கிடைப்பதில்லை.

வாழ்த்துகளுக்கு நன்றி அப்சரா இந்த முறையில் செய்து பாருங்க நல்லாருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அப்படியா கல்ப்ஸ் கேள்விபட்டது இல்லயா!! இந்த சூப் நீங்க ஊருக்கு வந்ததும் செய்து பாருங்க பா.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தாமதமான பதிலுக்கு சாரிப்பா.
வேரு கீரையில் செய்ய முடியாது இந்த கீரைதான் நான் எப்பவும் செய்வேன்,
ஆனால் கீரைக்கு பதில் இதே முறையில் காலிப்ளவ்ர்,சோளம் போட்டு சூப் செய்யலாம் ரொம்ப ந்ல்லாருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி. நான் கண்டிப்பாக காளிப்ளவரில் செய்து பாற்கிரேன்.

உங்க தோட்டத்துல முளைச்ச கீரையா? ரொம்ப சத்தான சூப் தான். கண்டிப்பா செஞ்சு பாத்துட்டு சொல்றேன். பாக்கரக்கு மோர் குழம்பு மாதிரி இருக்கு, ரொம்ப திக் ஹ வருமா?இல்ல தண்ணியா இருக்குமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் ஸ்வர்ணா சூப்பர இருக்கும் போல இருக்கே வித்தியாசமா இருக்கு நானே செய்து பாத்துட்டு சொல்லுரேன். வாழ்த்துக்கள்ள்.......

உன்னை போல பிறரையும் நேசி.

எங்க வீட்டு தோட்டட்த்துல முளைச்சதுதான் பா.பச்சை மிளகாய் சேர்த்து செய்வதால் பார்க்க மோர் குழம்பு மாதிரி தெரியுது திக்கா வராதுப்பா
சூப் பதத்துக்கு வந்ததும் இறக்கிடவேண்டும்.
ரொம்ப சத்தான சூப்தான் செய்து பாருங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி தேவி.கண்டிப்பா செய்து பாருங்க......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா குறிப்பு வித்யசமா இருக்கு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் விதவிதமா செய்து அசத்தரிங்க .. சூப் பார்க்க அழகா இருக்கு பாராட்டுக்கள் ஸ்வர்ணா..

வாழு, வாழவிடு..

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாத்திமா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ருக்சானா....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்,ரொம்ப ரொம்ப லேட்டா பதிவிடுவதற்கு ரொம்ப ரொம்ப சாரி.தொடர்ந்து அசத்தலான குறிப்புகள் கொடுக்கறீங்க,வாழ்த்துக்கள்.இந்த சூப் நான் சாப்பிட்டதேயில்லை.பார்க்கவே சூப்பராயிருக்கு,ஸ்வர்.அவசியம் செய்து பார்க்கிறேன்.போட்டோஸ் ரொம்ப அழகாயிருக்கு,ஸ்வர்.தொடர்ந்து,அசத்த வாழ்த்துக்கள்,ஸ்வர்.

அன்புடன்
நித்திலா

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நித்தி.இந்த சூப் சாப்டு பாருங்க உங்களுக்கு நிச்சயமா பிடிக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா உங்க மணத்தக்காளி கீரை சூப் நல்லாருந்ததுங்க. என் குட்டி பொண்ணுக்காக காரம் கம்மியா போட்டேன். என் குழந்தைக்கும் பிடிச்சிருந்தது. எங்களுக்கும் பிடிச்சிருந்தது.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நன்றி திவ்யா உங்களுக்கும்,உங்க குட்டி பொண்ணுக்கும் பிடிச்சிருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

nalla suvai migundha healthy soup. thanks for you.