ஈரல் ரசம்

தேதி: January 6, 2011

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஈரல் - 50 g
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 tsp
பூண்டு - 2 பல்
மிளகு - 1 tsp
சீரகம் - 1 tsp
மஞ்சள் பொடி - 1/4 tsp
உப்பு - தேவையான அளவு
கடுகு, பெருங்காயம், கருவேப்பில்லை, எண்ணெய் - தாளிக்க
கொத்தமல்லி - கொஞ்சம்
எலுமிச்சை சாறு - 2 tsp


 

மிளகு சீரகத்தை நுணுக்கி வைக்கவும்.
ஒரு தக்காளி ஒன்னும் பாதியுமாக அரைத்து வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
ஈரலை நன்கு கழுவி சின்ன வெங்காயம், நான்காக நறுக்கிய ஒரு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து குக்கரில் இரண்டு டம்பளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
அந்த தண்ணீரை மட்டும் வடிக்கடி வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கூறியவற்றை தாளித்து பூண்டு மற்றும் ஒன்றும் பாதியுமாக அரைத்த தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
உப்பு சேர்த்தல் தக்காளி சீக்கிரம் வதங்கும்.
ஈரல் வேகவைத்த தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரும் போது அரைத்து வைத்துள்ள மிளகு சீரகம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமால்லி தூவி பரிமாறவும்.


ஈரலை என்ன செய்வது என்று தானே கேக்குறீங்க? கொஞ்சம் மிளகு பூண்டு சேர்த்து வறுத்து சாப்பிடவும்.

மேலும் சில குறிப்புகள்