புதினா புலாவ்

தேதி: January 6, 2011

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (16 votes)

 

பாசுமதி அரிசி – 200 கிராம்

1. வறுத்து பொடிக்க

மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – ஒரு சின்ன துண்டு
பிரியாணி இலை – இரண்டு
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

2. வதக்கி அரைக்க

பட்டர் (அ) நெய் – ஒரு ஸ்பூன்
புதினா – 1 கட்டு
வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்

3. தாளிக்க

எண்ணை + பட்டர் – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் – பொடியாக அரிந்த்து ஒரு மேசை கரண்டி


 

1. அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

2.வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து பொடிக்கவும்.

3. வதக்கி அரைக்க வேண்டியவைகளை வதக்கி அதனுடன் பொடித்த பொடியையும் கலக்கவும்.

4. குக்கரில் எண்ணை + பட்டர் சேர்த்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

5. அரைத்த கலவையை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அரிசி சேர்த்து, அரிசி ஒரு பங்குக்கு ஒன்னறை அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
சுவையான மனமான மின்ட் புலாவ் ரெடி


புதினா என்றாலே புத்துணர்வு தான்.பிரியாணி , கிரேவி வகைகளுக்கு மணம் தருவதும் புதினா. புதினா துவையல், புதினா டீ புதினா வடை என பல வகையாக தயாரிக்கலாம். அது போல் புதினா புலாவ், இந்த முறை நான் முயற்சி செய்தது, வாசனையாக பக்க உணவு கூட எதுவும் இல்லாமல் அப்படியே பிடிச்சி சாப்பிடலாம்.இதில் தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் சேர்த்து கொண்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஜலீலா எப்படி இருக்கீங்க?புதினா புலாவ் சூப்பரா இருக்கும் என்று நினைக்கிறேன்.இன்ஷா அல்லாஹ் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

ஷர்மிலா பரூக் நல்ல இருக்கேன் பா, இந்த புதினா புலாவ் மிக அருமையாக இருக்கும், கண்டிப்பாக செய்து பார்த்து கருத்தை தெரிமியுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

தோழி ஜலீலா புதினா புலாவ் எனக்கு ரொம்ப புடிக்கும் செய்துட்டு சொல்கிறேன்

புதினா புலாவ் வித்தியாசமாக இருக்கு ..வாழ்த்துக்கள் இன்னும் நிறைய ஸ்டார்கள் வாங்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...நன்றி..

வாழு, வாழவிடு..

சலாம் ஜலீலா அக்கா,புதினா புலாவ் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது.இன்று செய்துப்பார்த்தேன்.சுவை அதிகம்..வாழ்த்துக்கள்.

ஹசீன்

புதினா புலாவ் செய்து பார்த்து வந்து சொன்னமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்
ஜலீலா

Jaleelakamal

கன்டிப்பா செய்து பார்க்க வேண்டியது அக்கா

செய்துட்டு சொல்றேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஜலீலாக்கா உங்க புலாவ் நல்லாருந்தது. சுவையான புலாவ்.இன்னைக்கு தேங்காபால் விட்டு செய்யலை. அடுத்தமுறை தேங்காபால் விட்டு செஞ்சு பார்க்கறேன்.நிச்சயமா அது இன்னும் சுவை பிரமாதமா இருக்கும்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஆமினா பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி
செய்து பார்த்து சொல்லுங்கள்
ஜலீலா

Jaleelakamal

தங்கை ருக்‌ஷான் உங்கள் பாராட்டுக்கு நன்றி பா
இந்த ஸ்டாரே போதும் பா, நீங்களாம் வாங்குங்க அதான் என் ஆசை

ஜலீலா

Jaleelakamal

தோழி ஹமீது பாத்திமா கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. சுவை எப்படி இருந்ததுன்னு
செய்து பார்த்துட்டு சொல்லுங்கல்
ஜலீலா

Jaleelakamal

திவ்யா புதினா புலாவ் செய்து பார்த்து வந்து சொன்ன்னதற்கு மிக்க சந்தோஷம்.

இது கண்டிபாக நல்ல வரும், சுவை பிரமாதமாக இருக்கும்.
அப்படியே ஒரு புத்துனர்வு தான்.
தேங்காய் பால் சேர்த்தும் செய்து பாருஙக்ள்.

மிக்க நன்றி திவ்யா
ஜலீலா

Jaleelakamal

சென்ற வாரம் புதினா புலவ் செய்தென். மிகவும் அருமை. வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு இருந்துது.என் கனவர் எல்லாருக்கும் phone panni ரொம்ப பெரும பட்டார்.உங்கள்க்கு ரொம்ப நன்றி அக்கா.coconut milkoda senjutu antha experience aiyum solaren...

காயத்ரி என் புதினா புலாவ் செய்து வீட்டில் அனைவரிடமும் பாரட்டை பெற்று இருக்கீஙக்,
செய்து பார்த்து மறக்காமல் வந்து கருத்து தெரிவித்தது மிக்க சந்தோஷம்
ஜலீலா

Jaleelakamal