(ஹர்ஷா)அன்பரசியை வாழ்த்தலாம் வாங்க

அறுசுவையின் அன்புத் தோழி அன்பரசி பாலாஜி(ஹர்ஷா)அழகிய பெண் குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார்!

தாயும் சேயும் நலம்!

அன்பரசியையும் குழந்தையையும் வாழ்த்தலாம் வாங்க!

அன்பு அன்பரசி,

செய்தி தெரிந்ததும் ரொமப் சந்தோஷமாக இருக்கு. இன்னிக்குதான் அரட்டை அரங்கத்துல கேட்டுகிட்டு இருந்தேன், யாருக்காவது தகவல் தெரியுமான்னு.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

புதிய வரவான பூந்தளிருக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள்!

ஹர்ஷா எப்படியிருக்கிறார்? தங்கச்சிப் பாப்பாவை பார்த்து, ரொம்ப குஷியாகி விட்டாரா?

உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

வாழ்த்துக்கள் ஹர்ஷா உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கள்

அன்பரசிக்கு எங்கள் குடும்பத்தினர் சார்ப்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

உடலை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்...மிக்க மகிழ்ச்சி
தகவலுக்கு நன்றி சீதாலக்ஷ்மி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பரசி வாழ்த்துக்கள். உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் ஹர்ஷாவை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களின் மகளுக்கு யார் தூக்கி வைத்தாலும் நன்றாக இருக்கும் ஆனால் ஹர்ஷவுக்கு நீங்கள் தான் தேவை அதனால் அவரை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டு குழந்தைகளின் தாய் சங்கத்திற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்.

சீதாலக்ஷ்மி அம்மா நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் தோழி அன்பரசி,உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அன்ப‌ர‌சி,
குட்டி தேவதையின் வருகைக்கு, த‌ங்களுக்கும், த‌ங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!. உட‌ம்பை பார்த்துக்கோங்க.

சந்தோஷமான விஷயம் பகிர்ந்து கொண்ட சீதாலஷ்மி அவர்களுக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பரசி ரொம்ப சந்தோஷமாக இருக்கு,புத்தாண்டில் புதுவரவு,நலமோடு வாழ வாழ்துகிறேன்.

அன்பரசி, உங்களுக்கும், உங்கள் வீட்டு புது வரவான இளவரசிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குழந்தை நோய் நொடியற்று, பேரும் புகழோடும் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இனி அம்மாவும், பொண்ணும் சேர்ந்து சமையலில் அசத்தனும் :D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பரசி!!!

மனமார்ந்த வாழ்த்துக்கள் பா...

தாயும் சேயும் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பரசி உங்களுக்குஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் தாயும்,சேயும் நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்

மேலும் சில பதிவுகள்